காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மொழியோவியங்கள்! 24 ஏப்ரல் 2007

காற்றின் கிளைகளில் நின்று நான் வேட்டையாடி வந்த,
வண்ணத்துப்பூச்சியின் இறகுகளால் செய்த மொழியோவியங்கள்!

babys.jpg

வா

ர்த்தைகளால் கூடு கட்டி
மௌனங்களால் அடைகாப்போம்
நம் காதலை!

*

னவுகள் வருவதில்லை.
இப்போதெல்லாம்,
இமைகளுக்கிடையில் இருப்பது
நீயல்லவா?!
*

எழுதியது உன் முகவரி-
மட்டும்தான்
மடல் முடிந்த சந்தோசத்தில்
மனசு!!

*

மைகளுக்குள் வழிகிறது
காதல் நெருப்பு.
வா…
அணைத்துக் கொண்டே எரிவோம்!!
*

உன் புன்னகை வைத்த
பொறிகளுக்குள்
சிக்கித் தவிக்கிறது
என் கள்ள மனசு!!

*

னித்திருந்தோம் மழைத் துளியாய்.
துளித்த பின்பு
சுழித்தோடுகிறது
நதியாய்
நம் காதல்!
*

எறும்பின் நகர்வாய்
ஞாபக ஊர்வலங்கள்….
இனிப்புச் சிதறலாய்
எனக்குள்
உன் சிரிப்பு!

*

மொ

ழியின் முதுகில்
மௌனம் எழுதி விட்டுப் போன
காதல் கவிதையின் பேரிரைச்சல் பற்றி
நீ பாடு….
தேவதைகள் ஆடட்டும்!!
*

சற்றே கொஞ்சம்
உன் நாணம் நிறுத்து!
நெஞ்சுக்குள்
பதுக்கி வைக்க முடியவில்லை
உன் கொள்ளை அழகை!

*

பு

ள்ளிகள் போட்ட ஆடையில்
உன்னைப் பார்த்த பிறகு
வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றும்
அழகாகத் தெரிவதில்லை
எனக்கு!
*

மழை போலதான்
இந்தக் காதலும்!
அறிகுறிகள் இல்லாமல்
சில வேளை- மனசை
தெப்பமாக்கித் தொலைக்கிறது!!

*

ண்ணத்துப் பூச்சியின்
இறகுகளில்
மனசு தொற்றி
ஊஞ்சலாடிக் கழிக்கிறது…
நீ அருகிலிருக்கும் பொழுதுகளில்!

*

காலம் வரைந்து விட்டுப் போன
என் சித்திரங்களுக்கு
வண்ணம் தீட்டி மகிழ்கிறது
உன் காதல்!

*

நீ

இருண்மை அழகு.
அதிலும் அழகு
உன் கருமை!

*

கோபத்தில் அமாவாசை.
காதலில் பௌர்ணமி.
புள்ளி போட்ட தாவணியில்
பொங்கி வழியும்
உன்னை நான்
நிலா என்கிறேன்!

*

தி

ருட்டுத்தனமாய்
மது நிரப்பி வைத்திருக்கும்
உன் போதை விழிகளை
முத்தம் கொண்டு
தண்டிக்கத் தவிக்கிறது
இந்த குறும்பு வயசு!!
*

உன் விழிகள் பாடிய
மௌனத் தாலாட்டில்
விழித்தெழுந்தது
நம் காதல்!!

*

நீ

திரு விழா
உன் மிட்டாய்களுக்காக
அடம் பிடிக்கிறது
என் குழந்தை மனசு!!
*

தாகித்துக் கிடக்கிறது மனம்!
நதியின் முதுகில்
நடந்து வருகிறாய் நீ!!

*

ன்னைச் சொல்லி
உன்னையழைப்பேன்
என்ன சொல்லி
என்னையழைப்பாய்??
*

காதல் தேசத்தின்
குறுக்கு வழி
பாதை நீ!

*

மீ

ன்கள் எப்படி தூண்டில் போடும்?
விழிக்காதே,
உன்
விழிகளைத்தான் சொல்லுகிறேன்!!
*

புள்ளிகளையும், கோலங்களையும்
என் மனசுக்குள் போட்டு விட்டு
பூவை மட்டும் ஏனடி
வாசலில் வைக்கின்றாய்?!

*

நீ

போகும் பாதையில் மட்டுமல்ல
போகாத பாதையிலும்
காத்துக் கிடக்கிறது
உனக்காக
மனசு!!
*

நம் உள்ளங்கள் சேர்ந்த சேதி
ஊருக்கு மட்டும் ஏன்
வதந்தியாய் போயிற்று!?

*


லர்ந்து போகட்டும் நிலா..
உதிர்ந்து போகட்டும் நட்சத்திரங்கள்..
குயில் ராகமிழக்கட்டும்..
முற்றத்து ரோஜா-
பூக்காமல் சாகட்டும்..
திட்டித் தீர்க்கும் இப்படித்தான்
நீயில்லாத என் மனசு!

*

நீ நிலவாக இருப்பதில்
சந்தோசம்தான்.
அமாவாசைகளைத்தான்
தாங்க முடியவில்லை!

*

வி

க்கலெடுக்கிறுது..
எங்கோ பிடித்த காட்டுத் தீ
திடீரென அணைந்து போகிறது..
எதிரெதிர் எறும்புகள்
சற்றே நீளமாய்
சம்பாசித்து நகர்கின்றன..
சொல்!
நீ என்னை நினைத்தாயா??
*

நமக்குள்
இடைவெளி தொலைந்த நிமிடங்களில்
நிலவை பூமி சுற்றியது,
கொடி காற்றை அசைத்தது,
காதலின் ஜன்னல்களுக்கு பின்னாலிருந்து
நிர்வாணமாய் சிரித்தது வெட்கம்!
இது-
பிரிவுகளற்ற காதலின்
தூரத்து..
மிக, மிக தூரத்துப் புள்ளி!!

*

கு

ழந்தைகளின் வீட்டருகில்
வேண்டுமென்றே ஒலியெழுப்பும்
பஞ்சு மிட்டாய்காரனாய்
உன் பாதக் கொலுசுகள்!
அடம்பிடித்து அடம்பிடித்து
அழுது கேட்கிறது – உன்னை
என் மனசு!!
*

கால வெளியில்
நம்மைக் குழைத்து
கோட்டுச் சித்திரமாய்
கிறுக்கி மகிழ்கிறது
காதல்!

*

ன் ஒற்றைவழிப் பாதை நீ!
உனக்கும் எனக்குமிடையில்
காதலால் நடந்து பாரக்கிறேன்!!
*

உயிரைக் கிள்ளி – நீ
உலையில் போட்டாய்!
என் மனசைத் தள்ளி
எங்கேயடி வைத்தாய்?

*

னக்கான மலர்களில்
தாவியெழுந்த
வண்ணத்துப் பூச்சியின்
சிறகசைப்பில் துடிக்கிறது
என் காதல் மனசு!
*

மன்மதப் போரின் வியூகமிது!
சுற்றி வளைக்க… சுற்றி வளைக்க…
சுகம் என்கிறது
மனசு!

*

கா

தலித்துத் தீர்ப்போம்
காத்திருந்த வலிகளை
வா!
விழிகளை மூடி
கனவுகளுள் வீழ்வோம்!
*

இதழ் கேட்டேன்
மலர்களோடு வருகிறாய்.
மலர் கேட்டால்
இதழ் மூடிப் போகிறாய்.
காதலின் சிறு பிள்ளைத்தனம் இது!

*

ன்மதக் கனாக்களுக்குள்
மனம் சிக்கித் தவிக்கிறது!
பெண் உனைக் காண்கையிலே
உயிர் சொக்கித் துடிக்கிறது!!
*

விழிகளுக்குள்
வலை வைத்து
வீசும் கலை
இது மன்மதக் கலை!

*

ரசிக் கொண்டன மேகங்கள்
மன்மதக் காட்டில் – இனி
மழை தான்!
*

உனது வீணை
எதையோ மீட்டினாலும்
எனது எழுதுகோல்
உன்னையே பதிகிறது!

*

தேன் தோட்டத்தில்
காதலாகி கனிந்து கிடக்கிறது
நமக்கான கனி;
வா கடித்துண்போம்!
*

சிரிக்காதே
பொறுக்க முடியவில்லை
கலைந்து கிடக்கும் ஞாபகங்களை!

*

ன் தாகிப்பின் மேகம் நீ
உன் மேகத்தின் ஈரம் நான்!
மழையாக விழுவோம் – வா
மாறி மாறி
மனதுக்குள் பொழிவோம்!
*

திறந்து விடு கதவை
உனக்குள் சிறைபடத் துடிக்கிறது
இந்த வயசு!
*

கருக்கட்டி கருக்கட்டி
கனவு பூக்கும் மனசு!
மகரந்தப் புன்னகையில்
மாயப்பொடி நீ கலக்க
கருக்கட்டி கருக்கட்டி
கனவு பூக்கும் என் மனசு!

*

ன் விழி வேட்டைக்காய்
காத்துக் கிடக்கிறது
காதல் மனசு!
நீ
வில் வளைப்பதெப்போது?
*

மன்மதப் போரின் வியூகமிது!
சுற்றி வளைக்க சுற்றி வளைக்க
சுகம் என்கிறது மனசு!

*

ற்றே கொஞ்சம்
உன் நாணம் நிறுத்து!
மனசுள்
பதுக்கி வைக்க முடியவில்லை
உன் கொள்ளை அழகை!

*

Advertisements
 

5 Responses to “மொழியோவியங்கள்!”

 1. nalayiny Says:

  மைகளுக்குள் வழிகிறது
  காதல் நெருப்பு.
  வா…
  அணைத்துக் கொண்டே எரிவோம்!!

  mm.. nice

 2. Suthan Says:

  மழை போலதான்
  இந்தக் காதலும்!
  அறிகுறிகள் இல்லாமல்
  சில வேளை- மனசை
  தெப்பமாக்கித் தொலைக்கிறது!!

  நீ

  போகும் பாதையில் மட்டுமல்ல
  போகாத பாதையிலும்
  காத்துக் கிடக்கிறது
  உனக்காக
  மனசு!!

  super maprook., ur suthan .

  naan rasiththa kavithai
  ” ulagaththil nee yaro….
  Aanal, yaruko neethan ulagam….’

 3. I like that words
  nee irunmai allaku
  athilum alaku
  un karumai!!

 4. Rikas Says:

  மழை போலதான்
  இந்தக் காதலும்!
  அறிகுறிகள் இல்லாமல்w
  சில வேளை- மனசை
  தெப்பமாக்கித் தொலைக்கிறது!!
  Mabrook fantastic poems. All the best


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s