காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஏவி விடப்பட்டுள்ள காவி அரசியல்! 5 மார்ச் 2013

Filed under: அரசியல் — Mabrook @ 9:49 பிப

color-dotதம்பி
BBS - 01கொழும்பு தெமட்டகொட பகுதியில் முஸ்லிம் நபரொருவர் சட்டவிரோதமாக மாடுகளை அறுக்கும் தொழுவமொன்றினை நடத்தி வருவதாகக் கூறி, பொது பல சேனா அமைப்பினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து அந்த இடத்துக்கு பொலிஸார் வருகை தந்தனர். அதன்போது, சட்ட விதிகளுக்கு அமைவாகவே குறித்த நபர் – மாடுகளை அறுக்கும் தொழுவத்தினை நடத்தி வருவதாக அறிய முடிந்தது. இதனையடுத்து பொது பல சேனாவினர் கலைந்து சென்று விட்டனர்.

முதல் வாசிப்பில், இந்தச் செய்தியானது சாதாரண நிகழ்வொன்று போல உங்களுக்குத் தோன்றலாம். ‘நல்லவேளை, பிரச்சினையொன்றும் நிகழவில்லை‘ என்று நீங்கள் ஆசுவாசப்படவும் கூடும். ஆனால், சற்றே கூர்ந்து கவனித்தால் இதிலுள்ள மிகப்பெரும் ஆபத்தினை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
இன்னும் வாசிக்க….

Advertisements
 

விஷ்வரூபம்: 100 கோடியில் ஒரு பாடம்! 3 பிப்ரவரி 2013

Filed under: அரசியல் — Mabrook @ 1:21 பிப

color-dotமப்றூக்

Vishvaroopam - 06

கொழும்பில் கொத்து ரொட்டி போட்டுக் கொண்டிருந்த ஒருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதீத சத்தத்தினை  உருவாக்கி சூழலை மாசுபடுத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

தொலைக்காட்சி பார்க்கும் போது, அதிகமாக சத்தம் வைத்துப் பார்ப்பதில் எனக்குப் பெரு விருப்பம். ஆனால், நமது தொலைக்காட்சியின் சத்தம் பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவை ஏற்படுத்துவதாக பொலிஸில் முறைப்பாடு செய்தால் – அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.
இன்னும் வாசிக்க….

 

கழன்று விழும் முக மூடிகள்! 13 ஜனவரி 2013

Filed under: அரசியல் — Mabrook @ 11:40 முப
Rizana Passport

றிசானாவின் கடவுச் சீட்டு

color-dotமப்றூக்

ஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிணக்கினைத் தீர்த்துக் கொள்வதற்காக நீதிமன்றம் செல்வதை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்களோ – அப்படித்தான் றிசானா நபீக் விவகாரத்தினை என்னால் பார்க்க முடிகிறது.

கஞ்சா வியாபாரம் என்பதே சட்டவிரோதமானது. அப்படியானதொரு தொழிலில் இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிணக்கினைத் தீர்த்துக் கொள்வதற்காக, அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு நீதிமன்றம் எதைச் செய்ய வேண்டும்? இன்னும் வாசிக்க….

 

சூரியனைப் பிரிந்த கதை! 10 நவம்பர் 2012

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 2:27 பிப

மப்றூக்

சூரியனில் நேற்றைய காற்று நிகழ்சியை பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்த காலமது. வழமைபோல் வேலைக்குச் சென்றேன். எனது வேலை நேரம் பிற்பகல் 4.00 மணியிலிருந்து இரவு 12.00 வரையாகும். அலுவலக வாயிலில்தான் வரவுப் பதிவேட்டுப் புத்தகம் இருக்கும். கையொப்பம் வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். கையொப்பம் இடுவதற்காக புத்தகத்தை எடுத்தபோது பாதுகாப்பு உத்தியோகத்தர் வந்து, இன்னும் வாசிக்க….

 

இமைகளுக்கிடையில் வசிக்கும் கதைகள்! 20 ஒக்ரோபர் 2012

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 12:52 பிப

color-dotமப்றூக்

(சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின சிறப்புக் கட்டுரை
With white cane‘அப்போது என்னோட மகனார் அப்துல் சலாமுக்கு 04 வயது. ஒரு நாள் காலை நேரம். பிள்ளையை காலைக் கடன் முடிப்பதற்கு வெளியில் கொண்டு போய் விட்டேன். திடீரென பிள்ளை கூட்பிட்டது. என்ன என்று போய்க் கேட்டேன். ‘உம்மா எனக்கு ஒண்டும் தெரியுது இல்ல. பார்க்க இயலாமல் இருக்குது’ என்று மகன் கூறினார். பிள்ளைக்கு திடீரென்று கண்பார்வை இல்லாமல் போயிற்று.

மகனை எடுத்துக் கொண்டு – ஊர் ஆசுபத்திருக்கு போனோம். அங்கு கொஞ்ச நாள் வச்சிருந்து சிகிச்சை பண்ணினாங்க, ஒண்டும் ஆகல. பிறகு அம்பாறை, பதுளை, கண்டி, கொழும்பு ஆசுபத்திகளுக்கு மாத்திக் கொண்டேயிருந்தாங்க. நாலஞ்சு மாசம் ஆனது. ஆனா – பிள்ளைக்கு பார்வை கிடைக்கல. அவரோட கண் நரம்புகள் செத்துப் போச்சுதாம். இன்னும் வாசிக்க….

 

திவிநெகும: மு.கா. ஆடிய நாடகம்! 10 ஒக்ரோபர் 2012

Filed under: அரசியல் — Mabrook @ 10:03 முப

color-dot   மப்றூக்

EPC

திரும்பவும் ஓர் அரசியல் நாடகம் மேடையேறியுள்ளது. நாடகத்தின் பெயர் ‘திவிநெகும சட்ட மூலம்’! கிழக்கு மாகாணசபையில் கடந்த 02ஆம் திகதி மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பார் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்திருந்தார்கள். சிலர் நடிக்க வைக்கப்பட்டார்கள். இன்னும் சிலர் – தாங்கள் நடிக்கின்றோம் என்று தெரியாமலேயே நாடகத்துக்குள் வந்து போனார்கள். இன்னும் வாசிக்க….

 

கிங் – ஜோக்கரான கதை! 25 செப்ரெம்பர் 2012

Filed under: அரசியல் — Mabrook @ 10:27 முப

color-dotமப்றூக்

najeeb2(1)

டைசியில் கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழப் பகிடி மாதிரிப் போயிற்று, கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானம்! ‘முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முதலமைச்சர்’ ஒருவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களித்தனர். ஆனால், நஜீப் ஏ. மஜீத் – கிழக்கின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மு.கா. ஆதரவாளர்களுக்கு கடுமையான ஏமாற்றத்தினையும் கொதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்பட்ட ‘மு.காங்கிரஸ் முதலமைச்சர்’ எங்கே என்று மு.கா. வாக்காளர்கள் கேட்கிறார்கள். ‘அவர்தான் இவர்’ என்று நஜீப் ஏ. மஜீத்தைக் காட்டுகிறார் அமைச்சர் ஹக்கீம்!
இன்னும் வாசிக்க….