காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

இமைகளுக்கிடையில் வசிக்கும் கதைகள்! 20 ஒக்ரோபர் 2012

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 12:52 பிப

color-dotமப்றூக்

(சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின சிறப்புக் கட்டுரை
With white cane‘அப்போது என்னோட மகனார் அப்துல் சலாமுக்கு 04 வயது. ஒரு நாள் காலை நேரம். பிள்ளையை காலைக் கடன் முடிப்பதற்கு வெளியில் கொண்டு போய் விட்டேன். திடீரென பிள்ளை கூட்பிட்டது. என்ன என்று போய்க் கேட்டேன். ‘உம்மா எனக்கு ஒண்டும் தெரியுது இல்ல. பார்க்க இயலாமல் இருக்குது’ என்று மகன் கூறினார். பிள்ளைக்கு திடீரென்று கண்பார்வை இல்லாமல் போயிற்று.

மகனை எடுத்துக் கொண்டு – ஊர் ஆசுபத்திருக்கு போனோம். அங்கு கொஞ்ச நாள் வச்சிருந்து சிகிச்சை பண்ணினாங்க, ஒண்டும் ஆகல. பிறகு அம்பாறை, பதுளை, கண்டி, கொழும்பு ஆசுபத்திகளுக்கு மாத்திக் கொண்டேயிருந்தாங்க. நாலஞ்சு மாசம் ஆனது. ஆனா – பிள்ளைக்கு பார்வை கிடைக்கல. அவரோட கண் நரம்புகள் செத்துப் போச்சுதாம். இன்னும் வாசிக்க….

Advertisements
 

விபுலாநந்தர்: காக்கியும் காவியும்! 18 ஏப்ரல் 2011

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 12:13 முப

மப்றூக் 

(விபுலாநந்தரின் 119 ஆவது பிறந்த தின சிறப்புக் கட்டுரை)

காரைதீவில் உள்ள விபுலாநந்தர் சிலை

”நீ எனக்கு எழுதும் கடிதங்களில் கண்ணம்மை என்று கையெழுத்திடா விட்டால் உனக்குப் பதில் அனுப்ப மாட்டேன். நான் உன்னை என் அம்மாவாகக் காண்கின்றேன் என்று சுவாமி விபுலாநந்தர் எனக்குச் சொல்வார். என்மேல் சுவாமிக்கு அத்தனை பாசம். எனது சொந்தப் பெயர் என்னவென்று அநேகமாக யாருக்கும் தெரியாது. கண்ணம்மை என்றுதான் என்னை எல்லோரும் அறிவார்கள். அது எனக்கு சுவாமி வைத்த பெயர்” என்கிறார் கண்ணம்மை என்கிற கோமதகவல்லி!
இன்னும் வாசிக்க….

 

நிலம் விழுங்கும் பூதம்! 4 ஜனவரி 2011

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 9:57 பிப

ஒலுவில் பிரதான பாதையில் அமைந்துள்ள அஷ்ரப் நகர் பெயர்ப் பதாகை

மப்றூக்

ன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் – தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்!

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் – இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப் பட்டால் அது – சட்டமில்லை!
இன்னும் வாசிக்க….

 

‘அவர்கள்’ குழந்தைகள்! 15 ஒக்ரோபர் 2010

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 10:05 பிப

மப்றூக்
ன்னைச் சுற்றியுள்ள உண்மையான உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘அவர்களைப்’ பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?

ஓன்றில் ‘அவர்களை’ பரிகாசத்துக்குரியவர்களாக நம்மில் பலர் பார்க்கிறோம். அல்லது பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்!

ஆனால், நம்மில் எத்தனைபேர் ‘அவர்களை’ – நமது சக ஜீவன்களாக நினைத்துப் பழகியிருக்கின்றோம்?
இன்னும் வாசிக்க….

 

ஆரியவதிகள்: நமது தேசத்தின் இயலாமை! 2 செப்ரெம்பர் 2010

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 7:07 பிப

மப்றூக்
டலுக்குள் அறையப்பட்ட ஆணிகள் மற்றும் கம்பித் துண்டுகள் இருபத்து மூன்றினையும், அவற்றின் வலிகளையும் சுமந்தவாறு தொலைக்காட்சிகளில் கண்ணீர் வடியப் பேசிய ஆரியவதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா? அது நோவினை தரும் ஒரு விசித்திரமான கதை. நவீன காட்டு மனிதர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்தப் பெண்ணின் அனுபவம் – நமது தேசத்தின் இயலாமை!

சஊதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி என்கிற பெண்ணின் உடலில், அவருடைய வீட்டு எஜமானர்கள் ஆணிகளை அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கின்றார்கள் என்பது – நம்மில் பலருக்கு வெறும் செய்தியாக மட்டுமே இருந்திருக்கும்! இன்னும் வாசிக்க….

 

கடவுளின் தொழிலாளிகளும், கண்ணீர் அறுவடைகளும்! 22 பிப்ரவரி 2010

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 6:50 பிப

மப்றூக்
‘கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ என்று விவசாயிகளைச் சொல்வார்கள். அவ்வாறான விவசாயிகளுக்கே இது போதாத காலமாகி விட்டது. கடந்த முறை, அவர்கள் பேரம் பேசி விற்பனை செய்த தமது நெல்லை, இம்முறை விற்பதற்கு அழுது புரண்டு, ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த போக அறுவடைக்கால ஆரம்பத்தின் போது, 65 கிலோ கிராமுடைய ஒரு மூடை நெல் 02 ஆயிரத்து 300 ரூபாவுக்கு விற்கப்பட்டது. ஆனால், அதேயளவு இன்னும் வாசிக்க….

 

தெ.கி.பல்கலைக்கழக பன்னாட்டு ஆய்வரங்கு: சில குட்டுக்களும், பூங்கொத்துக்களும்! 15 நவம்பர் 2009

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 9:14 பிப

மப்றூக்
‘கொழும்பு ரேடர்ஸ்’ என்று எங்களுரில் ஒரு மளிகைக் கடை இருந்தது. என் சின்ன வயதில் சகோதரியொருத்தி அந்தக் கடை இருக்கும் பகுதிதான் கொழும்பு என்று எனக்குச் சொல்லி வைத்திருந்தாள் (எனது ஊர் அம்பாறை மாவட்டத்திலுள்ளது). நானும் ‘சின்னப்புள்ளத்தனமாக’ நம்பிக்கொண்டிருந்தேன். பிறகு சின்னதாய் எனக்கு ஒரு சந்தேகம் வந்து கேட்டபோது,  “அது (தலைநகரம்) பெரிய கொழும்பு, இது சின்னக் கொழும்பு” என்று சொல்லி தப்பித்துக் கொண்டாள்.

இதனால், சகலமானவர்களும் அறிய வேண்டிய மிகச் சிறிய உண்மை யாதெனில், இன்னும் வாசிக்க….