காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கோதாரிகள் இல்லாத வானம்! 20 மே 2011

Filed under: சினமா — Mabrook @ 9:05 பிப

வானம் - சிம்பு‘வானம்’ திரைப்படத்தை ஒரேயொரு விடயத்துக்காகவே பார்க்கலாம்! அது – கடைசியில் சிம்பு செத்துப்போவது.

இன்றைய தமிழ் சினிமாக் கதாநாயகர்கள் நினைத்துப் பார்ப்பதற்கே விரும்பாத ஒரு விடயத்தை சிம்பு செய்திருக்கின்றார்.
இன்னும் வாசிக்க….

Advertisements
 

மனுஷப் பழம்! 13 மார்ச் 2011

Filed under: சினமா — Mabrook @ 1:49 பிப

மப்றூக்

(மலேசியா வாசுதேவன் குறித்து – சில ஞாபகக் குறிப்புகள்)

குணத்தில் மலேசியா வாசுதேவன் ஒரு குழந்தை! அவரை நான் சந்தித்த இரண்டு தடவைகளும் அவர் அப்படித்தான் பழகினார். இரண்டாவது தடவை 10 நாட்கள் அவரோடு தொடர்ச்சியாக ஓர் இசைப் பயணத்துக்காக இணைந்திருந்தேன்! அவர் – ஒரு மனுஷப் பழம்!

சூரியன் வானொலியில் நான் அறிவிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே மலேசியா வாசுதேவனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன. இரண்டு தடவையும் அவரை சூரியனுக்காக நேர்கண்டுமிருந்தேன்.
இன்னும் வாசிக்க….

 

வெயில்: ஞாபகங்களைக் கிளறிவிடும் ஒளியோவியம்! 25 ஏப்ரல் 2007

Filed under: சினமா — Mabrook @ 4:44 பிப

color-dot.gifமப்றூக்

துப்பாக்கிகளுக்குள்ளும் அரிவாள்களுக்குள்ளும் சிலகாலமாக சிக்கித்தவிக்கும் தமிழ் சினமாவை அவ்வப்போது சிலர், இயக்குனர் அவதாரமெடுத்து தமது திரைப்படங்களினூடாக ரட்சிப்பதுண்டு!

இதற்கு உதாரணமாக சில படங்களைப் பட்டியலிட்டுக் காட்டலாம். அவ்வாறான பட்டியலில் சேர்க்கக் கூடிய அண்மைய வரவு – வெயில்!

சின்ன வயதில் நாம் டயர் உருட்டி, வீட்டுக்குத் தெரியாமல் ஆற்றில் குளித்து, முடக்கொத்தான் கொடியில் ‘கோழி’ என்று சொல்லி சிவப்பு நிறப் பூச்சிகள் பிடித்து விளையாடிய ஞாபகங்களைக் கிளறி விட்டுப் போகிறது படத்தின் பல காட்சிகள்!

இன்னும் வாசிக்க….