காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

இஸ்லாமிய கலாசாரம் என நினைத்துக் கொண்டு, சிலர் அரேபிய கலாசாரங்களைப் பின்பற்றுகின்றனர்! 29 ஓகஸ்ட் 2009

Filed under: சந்திப்பு — Mabrook @ 11:16 பிப

மப்றூக்

(இஸ்லாமிய அறிஞர் கலாநிதி தீன்முகம்மதுவுடனான ஒரு – மாலை நேரச் சந்திப்பு)

லங்கையின் கல்வித்துறைசார் இஸ்லாமிய அறிஞர்களில் குறித்துச் சொல்லத்தக்க ஒருவர் – கலாநிதி தீன்முகம்மத்! இவரின் சொந்த ஊர் அம்பாரை மாவத்திலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசம். இலங்கையில் வாழ்ந்ததை விடவும் – கற்கவும், கற்றுக் கொடுக்கவுமென இவர் வெளிநாடுகளில் வசித்த காலமே அதிகமாகும்!

இவர் – பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:
இன்னும் வாசிக்க….

Advertisements
 

சமய அறிவு இல்லாமையே குற்றங்கள் நிகழ்வதற்கான பிரதான காரணமாகும்! 20 ஜூலை 2009

Filed under: சந்திப்பு — Mabrook @ 4:20 பிப

மப்றூக்

(இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி  நூறுல் மைமூனாவுடனான  நேர்காணல்)

நூறுல் மைமூனா – அடிப்படையில் ஆளுமையுள்ள இஸ்லாமியப் பெண் இவர்! நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து விட்டால் இவரின் முகத்தில் எந்தவித உணர்வினையும் நாம் இனங்காண முடியாது. ஒரு நீதிபதியாக மிகவும் கண்டிப்பானவர். ஆனால், தனிப்பட்ட ரீதியில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

ஒரு விவசாயத் தந்தைக்கும், சாதாரண தாய்க்கும் பிறந்த ஏழு பிள்ளைகளில் ஒருவர் நூறுல் மைமூனா. சோந்த ஊர் – அம்பாரை மாவட்டத்திலுள்ள சாந்தமருதுப் பிரதேசம்.
இன்னும் வாசிக்க….

 

சேகு இஸ்ஸதீன்: மலை வீட்டு மந்திரி! 20 மே 2009

Filed under: சந்திப்பு — Mabrook @ 11:37 பிப

மப்றூக்
ழைய காலத்து மன்னர்களும், மந்திரிகளும் வாழ்ந்ததாக நாம் கேள்விப்பட்ட கோட்டை போல் இருக்கிறது – அந்த மலை வீடு!

இறக்காமம் – மதீனாபுரத்திலுள்ள பிரமாண்டமானதொரு மலையின் உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருக்கும் அந்த வீட்டுக்குப் பெயர் ‘கவிதாயலம்’.

அங்கு பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் வசிக்கின்றார்.

ஒதுக்குப் புறமான அந்த மலை வீட்டில் – சித்தர்கள், ஞானிகளைப் போல் வாழும் இந்தத் தனிமை வாசம்தான் இஸ்ஸதீனின் நீண்டநாள் கனவு போலிருக்கிறது!
இன்னும் வாசிக்க….

 

மு.கா தோல்வியடையவில்லை, அரசியல் அரங்கில் ஆட்டம் கண்டிருக்கிறது! 21 நவம்பர் 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 1:39 முப

மப்றூக்
                                     பசீர் சேகுதாவூத்துடன் ஓர் இரவு நேரச் சந்திப்பு
வீன சொல்லாடல், நகைச்சுவைக்குணம், சிக்கலற்றவார்த்தை வெளிப்பாடு போன்றவைகளை தனது இயல்பான மொழி நடையில் கொண்டவர் மு.கா.வின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்! ஈரோஸ் எனும் ஆயுத இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளியான இவர், தமிழ் இயக்கங்களில் இணைந்து கொண்ட ஆரம்ப முஸ்லிம்களில் ஒருவர்!

உலக ஆட்சி முறைகள் மற்றும் அவைகளின் சித்தாந்தங்கள் பற்றியெல்லாம் உள்ளங்கைக்குள் வைத்துப் பேசக் கூடிய இவரின் பரந்த அறிவு ஆச்சரியமூட்டுகின்றது.
இன்னும் வாசிக்க….

 

கவிஞர் அன்புடீன்: எழுத்தை வாழும் இலக்கியவாதி! 2 ஒக்ரோபர் 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 12:35 முப

மப்றூக்
ழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளிகளில்லாமல் வாழுகின்ற ஒரு அசாதாரண இலக்கியவாதி கவிஞர் அன்புடீன்! சொற்களை கோபத்தில் கூட கடுமையாக உச்சரிக்காதவர். மாறாத புன்னகையும், மனிதர்களை மதிக்கும் நாகரீகமும்
அன்புடீனின் தனி அடையாளங்கள்!

இலக்கியவாதிகளினதும், நண்பர்களினதும் மாலைநேரச் சந்திப்புக்கான ஆரோக்கிய இடம் அன்புடீன் வீடு! ஒவ்வொரு நாளும் சின்னதாய் ஒரு இலக்கியக் கூட்டமே இவர் வீட்டில் நடந்து முடியும்! இன்று வேகத்தோடு எழுதிவரும் பல இளைஞர்களுக்கு நடைவண்டியாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர், இருக்கின்றவர்!
இன்னும் வாசிக்க….

 

காதல், அரசியல், திருமணம்: ஹக்கீமுடன் ஒரு கலக்கல் பேட்டி! 28 பிப்ரவரி 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 2:42 முப

color-dot.gifமப்றூக்

  • மு.கா. தேசிய அமைப்பாளர் என்றவுடன் பாயிஸ் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கொள்கைவகுப்பாளராக தன்னை எண்ணிக்கொண்டார்.
  • இனரீதியான கட்சி தேவையில்லை எனும் அதாஉல்லாவின் கூற்று அபத்தமானது.
  • அமீரலியின் அடாவடித்தனங்கள் மு.கா.வுக்கான ஆதரவையே அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • மப்றூக் தினக்குரலில் எழுதும் கட்டுரைகள் மு.கா.வுக்கு ஆபத்தாக அமைந்து விடுமென கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் என்னிடம் கூறினர்.
  • தேர்தலொன்றை குறிவைத்து சேகு இஸ்ஸதீன் மு.கா.வுடன் இணைந்தால், அது அவரை மிகவும் மலினப்படுத்தி விடும்.

காதலர் தினத்தன்று மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை அவரின் ‘கானிவல்’ வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் அரைக்கை வெள்ளிநிற சேட், கறுப்பு நிற காற்சட்டையூடன் ‘பிரஷ்ஷாக’ வந்தார். ஒரு கைகுலுக்கலுடன் எங்கள் உரையாடல் ஆரம்பமானது. பேச்சின் இடையே ”இன்று எங்கள் இருபதாவது திருமண தினம் மப்றூக்” என்றார் மு.கா. தலைவர் ஹக்கீம்! இன்னும் வாசிக்க….

 

பசீர் சேகுதாவூத்: மு.கா.வின் கலகக் குரல்! 25 ஜனவரி 2008

Filed under: சந்திப்பு — Mabrook @ 2:07 முப

color-dot.gifமப்றூக்

Basheer

யுதப்போராட்டத்தின் அகத்துக்குள் இருந்து இயங்கிய அனுபவங்களோடு, ஜனநாயக அரசியல் தளத்துக்குள் நுழைந்தவர் நமது பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத்!

அரசியல்வாதிகளில் ஒரு தரப்பார தமது துறை குறித்தே அடிப்படை அறிவற்றிருக்கும் இன்றைய நிலையில், அரசியலின் பன்மை முகம் குறித்துத் தெரிந்து கொண்ட பிறகு அதற்குள் காலெடுத்து வைத்தவர் இவர்.

பசீர், அரசியலை விஞ்ஞானமாகவும் தெரிந்து வைத்துள்ளார். அதன் உப ‘இயல்’கள் மற்றும் கோட்பாடுகள் குறித்து நிறையவே பேசுகிறார்.

தமிழ் ஆயுதப் போராட்டத்தின் நல்ல பக்கங்களால் பசீர் சேகுதாவூத் புடம்போடப்பட்டிருக்கிறார் என்பதை, அவருடன் பேசப் பேசப் புரிந்து கொள்ள முடிந்தது.
இன்னும் வாசிக்க….