காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

வேட்டை! 29 ஜனவரி 2012

Filed under: இறவாத காலம் — Mabrook @ 7:44 முப

color-dot.gifமப்றூக்

சில பாடல்கள் சில முகங்களை ஞாபகப்படுத்தும், சில முகங்கள் சில பாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனால், இப்போதெல்லாம் கேட்கும் எல்லாப்பாடல்களும் உன்னையே ஞாபகப்படுத்துகின்றன.

ஆனாலும், சந்தோசப்பாடல்களில் வெட்கத்துடன் தலைகாட்டி விட்டு மட்டுமே செல்லுகின்ற நீ, சோகப்பாடல்களிலோ சீவியம் நடத்துகின்றாய்!

உன் காதல் கடிதங்களில் கூட, அதிகமாய் நீ அனுப்பி வைத்ததெல்லாம் கண்ணீரைத்தானே!
இன்னும் வாசிக்க….

Advertisements
 

காதலின் குறுக்கெழுத்து! 22 ஜூலை 2011

Filed under: இறவாத காலம் — Mabrook @ 9:38 முப

மப்றூக்

சிறுவர்களின் பெருநாட்களைப் போல மனசு கிடந்து குதூகலிக்கின்றது,
இன்று உன் பிறந்த நாள் என்பதால்!

ஆணின் விலா எலும்பிலிருந்தே அவனுக்கான பெண் படைக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே. அப்படியென்றால், நீ எனது அங்கமா? நீ என் உடற் கூறா?
நீ என்பது நானா? நினைத்துப் பார்க்கப் பார்க்க நெஞ்சப் பரப்பெல்லாம் இனிப்புக்கசிகிறது.
இன்னும் வாசிக்க….

 

நாணம்! 15 ஜூலை 2011

Filed under: இறவாத காலம் — Mabrook @ 9:35 பிப

மப்றூக்

சில வேளை உன் நாணத்தை என்னால் ரசிக்க முடியவில்லை!

இன்று முன்னிரவில் உன்னைச் சந்தித்தபோது, வெறுமனே நிலம் பார்த்து நீ வெட்கப்பட்டது, வெறும் அபத்தம் என்றே சொல்வேன் காதலி!

ஒரு தீவிரவாதி ராணுவக் காவலரண்களைக் கடப்பது போல, தடைகள் கடந்து உன்னைச் சந்திக்க வந்தால்… நீ மௌனங்களைத்தான் அதிகம் தருகிறாய்!

ஆயிரம் பேச வேண்டும் என வரும் எனக்கு, ஒரு யாசகனுக்கு கொடுப்பது போலாயினும் சில வார்த்தைகளை நீ அன்பளித்திருக்கலாம்!
இன்னும் வாசிக்க….

 

அழகிய பொய்கள்!

Filed under: இறவாத காலம் — Mabrook @ 3:58 பிப

மப்றூக்

காதலை முதலில் வெளிப்படுத்தியவர்கள் பெண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கணக்கிட்டால், அது பெரியதொரு தொகையை நமக்குத் தராது! பெண்கள் நாணம் அதிகம் கொண்டவர்கள், அதுதான் இதற்கான காரணம் என்று இதற்கு வியாக்கியானம் வேறு வைத்திருக்கிறார்கள் சிலர்!

ஆண்கள்தான் தமது காதலை முந்திக் கொண்டு, அதிகமாய் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இதற்குக் காரணம் ஆண்களிடமுள்ள அளவுகடந்த தைரியம் அல்லது வீரம்தான் என்று வாதிடுகின்றனர் வேறு சிலர்!!
இன்னும் வாசிக்க….

 

பச்சையழகு!

Filed under: இறவாத காலம் — Mabrook @ 11:52 முப

மப்றூக்

லகிலுள்ள நிறங்களில் உன்னதமானது பச்சை நிறம்தான்!

பச்சை – குளிர்மையைக் கொண்டது. பச்சை ஈரம் நிறைந்தது!!

மனதை வருடி ஆழ்ந்த உறக்கம் தரும் பண்புகள் கொண்டது இந்த பச்சை நிறம்.

வைரமுத்துவின் பாசையில் சொன்னால்…
இச்சை மூட்டுவது பச்சை நிறம்தான்!

அதனால்தான், படுக்கையறைக்கு ஏற்ற நிறம் பச்சைதான் என்கிறார்கள்.

பச்சை என்பது களங்கமில்லா நிறம். அதனால்தான், வெளிப்படையான பேச்சுக்களை பச்சையானதென்கிறார்கள்!
இன்னும் வாசிக்க….

 

விதி!

Filed under: இறவாத காலம் — Mabrook @ 11:21 முப

மப்றூக்

நான் காதலால் கொல்லப்பட்டுக் கிடப்பதாக – நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்!

அது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்பது பற்றி இப்போது ஞாபகமில்லை. ஆனால், ஓர் உயிர் கொன்ற பரபரப்பேயின்றி காதல் என் உடலருகே நின்றது.

என் உடலுக்கருகில் நீயும் நின்றாய், ஆனால் என் உடலைக் காட்டி அது நானில்லை என்றாய். கனவைக் கண்டு கொண்டிருந்த நான் பதறிப்போனேன். உன்னை உருகி உருகி காதலித்த என்னை, நான் இல்லை என்று நீ சொன்னதால் – நான் அதிர்ந்து போனேன்.
இன்னும் வாசிக்க….

 

எரிதல்! 14 ஜூலை 2011

Filed under: இறவாத காலம் — Mabrook @ 10:26 முப

மப்றூக்

ன்று உன் திருமணம்!

ஒரே நேரத்தில் சொர்க்கத்தை உனக்கும், நரகை எனக்கும் தந்து போக, ஒரே நிகழ்வால் எப்படியடி முடிந்தது?

இது தோல்வியா? அப்படியென்றால் யாருக்கு?

இது அவமானமா? அப்படியென்றால் எனக்கா, உனக்கா?

இது துயரமா? அப்படியென்றால் எவர் தந்தது?

துக்கத்தை மறைத்து சாதாரணமாக இருப்பதாய் காண்பிப்பதற்கான எனது ஒவ்வொரு அசைவிலும் செத்துச் செத்துப் பிழைத்தேன் இன்று!
இன்னும் வாசிக்க….