காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

சூரியனைப் பிரிந்த கதை! 10 நவம்பர் 2012

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 2:27 பிப

மப்றூக்

சூரியனில் நேற்றைய காற்று நிகழ்சியை பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்த காலமது. வழமைபோல் வேலைக்குச் சென்றேன். எனது வேலை நேரம் பிற்பகல் 4.00 மணியிலிருந்து இரவு 12.00 வரையாகும். அலுவலக வாயிலில்தான் வரவுப் பதிவேட்டுப் புத்தகம் இருக்கும். கையொப்பம் வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். கையொப்பம் இடுவதற்காக புத்தகத்தை எடுத்தபோது பாதுகாப்பு உத்தியோகத்தர் வந்து, இன்னும் வாசிக்க….

Advertisements
 

காதல் கடிதங்கள்! 12 மே 2011

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 12:21 பிப

மப்றூக்

தென்னிந்தியத் திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் பிரபல்யம் – ஏதோவொரு வீதத்தில் இங்கு வானொலி அறிவிப்பாளர்களுக்கு இருக்கின்றது அல்லது இருந்தது! அதிலும், சூரியன் எப்.எம். உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதன் அறிவிப்பாளர்களுக்கு நம்ப முடியாத ரசிகர் பட்டாளம் இருந்தது.

சூரியனின் ஆரம்ப காலங்களில் – ஒவ்வொரு நாளும் அறிவிப்பாளர்களைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்துக்கு ரசிகர்கள் வந்து கொண்டிருப்பார்கள். சில நாட்களில் பத்து, இருபது தடவைகள் நம்மைச் சந்திக்க ரசிகர்கள் வருவார்கள். புதிதில் இது சுவாரசியமாகத்தான் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அலுத்துவிட்டது.
இன்னும் வாசிக்க….

 

கனவு பலித்த கதை! 18 ஏப்ரல் 2011

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 11:31 பிப

மப்றூக்

ப்போது நான் வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அது 99 களின் முற்பகுதி. சூரியன் எப்.எம். ஆரம்பித்து ஆறேழு மாதங்கள்தான் ஆகியிருக்கும். எங்கு கேட்டாலும் சூரியன்தான்! ஆண்டாண்டு காலமாக இயந்திரத் தமிழில் வானொலியைக் கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு சூரியன் வரவு – புது உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

வீரகேசரியில் வேலை செய்தபோது – நண்பர்கள் சிலருடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது, பகல் வேளைகளில் வானொலி கேட்பதற்குப் பெரிதாக சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. எங்களோடு தங்கியிருந்த நண்பரொருவர் தீவிவிரமான வானொலிப் பிரியர். இன்னும் வாசிக்க….

 

முகுந்தன்! 24 பிப்ரவரி 2011

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 10:50 முப

மப்றூக்

முகுந்தன்

டகமொன்றில் நிலைத்து நிற்பதற்கு எது தேவையோ இல்லையோ – பொறுமை என்பது மிகவும் முக்கியமானது. ரோசம் பொத்துக் கொண்டு வரும் வகையறாக்களும், முயல் மூக்கில் புல்லுக் குத்தும் ஜாதிகளும் ஊடகத் துறையில் நின்று நிலைப்பது மிகவும் கடினம். நமது பிடறிக்குப் பின்னால் ஆயிரம் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கும். அசந்தால் அவ்வளவுதான். ஒற்றை வரியில் சொன்னால்,  நீருக்குள்ளால் நெருப்பெடுத்துக் கொண்டு செல்லும் வேலை – ஊடகத் தொழில்!
இன்னும் வாசிக்க….

 

தேடல்! 29 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 8:08 பிப

மப்றூக்
தேடலுள்ள வானொலியாளர்கள் எப்போதும் தம் நேயர்களை வியக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள்!

இந்த – தேடல் என்பதை சிலர் பிழையாகவோ அல்லது தமக்குச் சாதகமாகவோ விளங்கி வைத்துள்ளார்கள். வானொலியில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரை மணி நேரம் முன்னராக வந்து, இணையத்தளத்திலோ அல்லது இந்திய சஞ்சிகைகளிலோ எதையாவது அவசர அவசரமாக உருவியெடுத்துக் கொண்டு போய்  பாடலின் இடையிடையே புதிய தகவல்களைச் சொல்வது போல் சொதப்பி விடுவதற்குப் பெயர் தேடல் அல்ல!

ஊடகத்துறையில் இருப்பவர்கள்கள் எப்பொழுதும் எதையாவது வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த வாசிப்பு என்பது இவர்களின் சாதரண பழக்கங்களில் ஒன்றாகவும் இருத்தல் வேண்டும்.
இன்னும் வாசிக்க….

 

சங்கீதத்தில் ஒரு சாய்வு நாற்காலி!

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 12:25 பிப

மப்றூக்
சூரியனின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் நேற்றைய காற்று முக்கியமானது. இந்த நிகழ்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கின்றேன். வெறுமனே ஒலிவாங்கியை ஒயிர்ப்பித்து “ஹலோ யார் பேசுறீங்க, சாப்பிட்டீங்களா, என்ன பாட்டு வேணும்” என்று கேட்டு, இடையில் தேவையோ இல்லையோ கொஞ்சம் சிரித்து வைப்பதோடு நிறைவு பெறும் நிகழ்ச்சியல்ல இது! பாடல்களுக்கிடையில் இலக்கியம் பற்றியும், பாடல்களிலுள்ள இலக்கியம் பற்றியும் பேசிப் பேசி  வளர்த்த நிகழ்ச்சி!

நேற்றைய காற்று – இதயங்களின் ஆறுதலாக இருந்தது.

அதனால்தான் ‘சங்கீதத்தில் ஒரு சாய்வு நாற்காலி’ என்று, அந்த நிகழ்ச்சியை அடைமொழி கொண்டு அழைத்தேன்!
இன்னும் வாசிக்க….

 

நிகழ்ச்சி என்றொரு சூழ்ச்சி! 27 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 12:52 முப

மப்றூக்

வானொலிகளில் பாடல்களை போட்டி போட்டுக் கொண்டு – முந்திக் கொடுக்கும் கலாசாரம் தனியார் வானொலிகளின் வருகைக்குப் பின்னரே ஆரம்பமானது. “இந்தப் பாடலை முந்திக் கொண்டு வழங்கியது உங்கள் முதற்தர வானொலியான நாங்கள்தான்” என்று கூக்குரலிடுவதில், ஆகக்குறைந்தது இரண்டு புதிய நேயர்களைக் கூட இவர்களால் சேர்க்க முடிவதில்லை. வேண்டுமென்றால், இந்தக் கலாசாரத்தால் வானொலிகள் தமது அடிமட்ட நேயர்களை உசுப்பேத்தலாம். அத்தோடு தமது முதுகினைத் தாமே சொறிந்தும் கொள்ளலாம். அவ்வளவுதான்!
இன்னும் வாசிக்க….