காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ரெட்டைச் சுழி! 7 ஒக்ரோபர் 2013

Filed under: கிறுக்கல் மூலை — Mabrook @ 6:23 பிப

color-dotமப்றூக்

விஞ்ஞானத்தை மிஞ்சிய கதை

6ழுத்தாளர் ‘குறூசு’க்கு அந்த சந்தேகம் சரியாக எப்போது தோன்றியது என்று தெரியவில்லை.

ஆனால், தனக்கு ஏற்படும் அந்த சந்தேகம் உண்மைதான் என்று ‘குறூஸ்‘ தனக்கு நெருக்கமானவர்களிடம் அழுது புலம்புவார்.

தனக்கு – தந்தையர் இருவராக இருப்பார்களோ என்பதுதான் ‘குறூசி’ன் சந்தேகமாகும்.

விஞ்ஞான ரீதியாக ஒருவருக்கு – ஒரு தந்தைக்கு மேல் இருக்க முடியாது என்பதை எவ்வளவுதான் விளக்கிச் சொல்லியும் ‘குறூசு’க்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

“விஞ்ஞான ரீதியாக இல்லா விட்டாலும், சிலவேளை – வானியல், புவியியல் ரீதியாக இரண்டு தந்தையர்கள் இருக்க மாட்டார்களா?” என – ‘குறூஸ்’ நம்மிடம் திருப்பிக் கேட்பார்.

‘குறூசி’ன் இந்த சந்தேகத்துக்கான காரணம் வியப்பானதாகும். தான் எழுதும் போதெல்லாம் தேவையற்ற இடங்களில் ‘ரெட்டைச் சுழி’ வந்து விழுவதாகவும், ஒற்றைச் சுழியும் – ஒற்றைச் சுழியும் புணர்ந்து ரெட்டைச் சுழி பிரசவிக்கும் காட்சிகள் – தனது கனவில் அடிக்கடி வந்து போவதாகவும் குறூஸ் துயரப்பட்டுக் கொள்வார்.

1இன்று – தற்செயலாக, அறிமுகமற்ற இரண்டு நபர்களைச் சந்திக்கக் சிடைத்தது. அதில் ஒருவரின் முகச்சாயல் அப்படியே ‘குறூஸ்’ போலவே இருந்தது.

இந்த ஆச்சரியத்தைச் கூறுவதற்காக ‘குறூசை’த் தேடிச் சென்றேன். என்னிலிருந்து சற்று முன்னால் முதுகுப் புறத்தைக் காட்டியவாறு ‘குறூஸ்’ நடந்து செல்வதைக் கண்டதும் – ‘குறூஸ்’ என்று சத்தமாக அழைத்தேன்.

‘குறூஸ்’ திரும்பினார்….

அவர் – ‘குறூஸ்’ இல்லை!

o

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s