காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நாட்டாமையின் இரண்டு நாய்கள்! 26 ஜூலை 2013

Filed under: கிறுக்கல் மூலை — Mabrook @ 1:42 முப

color-dotமப்றூக்

முதலில் இதை நீங்கள் கதை என்று நம்ப வேண்டும்

dog - 06ந்த ஊர் நாட்டாமையிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவை நாட்டாமையால் வளர்க்கப்பட்ட நாய்களல்ல. இடையில் வந்து ஒட்டிக் கொண்டவை.

நாய்கள் என்று சொல்வதால் – அவை அல்சஸன், பொமேரியன் போலெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்து விடக்கூடாது. இரண்டும் வழிநாய்கள்.  முதல் நாய் நன்றாகக் கொழுத்தது. ஊரில் கிடக்கும் அழுக்குகளையெல்லாம் ஒன்று விடாமல் தின்னும். அதிலும் மலம் என்றால் அதற்கு உயிர். மற்றையதுக்கு கொஞ்சம் முடம். முதல் நாயின் வால் பிடித்துக் கொண்டு திரிவதே அதற்குத் தொழில்.

இந்த இடத்தில் நாட்டாமை பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். நாட்டாமை ஓங்கி உயர்ந்தவர். ஆனால், பொது அறிவு கொஞ்சம் போதாது. அதனால் – ஊருக்குள் நாட்டாமையை ‘நெடிய கழுதை’ என்பார்கள். தனக்கு இப்படியொரு பட்டப் பெயர் இருப்பது – நாட்டாமைக்கும் தெரியும்.

பொது அறிவு போதாது என்றாலும் – அடுத்தவரின் காசு பணத்தைச் சுருட்டிக்கொள்வதில் நாட்டாமைக்கு நிகர் நாட்டாமைதான். நாட்டாமை ஒரு மோசடிப் பேர்வழி.

உண்மையில் நாய்களின் வேலை என்ன? திருடர்களிடமிருந்து மனிதனைப் பாதுகாப்பது அல்லவா. ஆனால், நாட்டாமையின் நாய்கள் அவ்வாறில்லை. தனது எஜமானரின் திருட்டுத்தனம் குறித்து யாராவது கதைத்தால் அவைக்குக் கோபம் வரும். வெறி பிடித்துக் குரைக்கும்.

இத்தனைக்கும் நாய்களுக்கு சாப்பாடென்று நாட்டாமை – பெரிதாக ஒன்றும் போடுவதில்லை. தான் கடித்துச் சூப்பி சுவைத்த எலும்புகளை அவ்வப்போது எறிவார். நாய்கள் கவ்விக்கொள்ளும். அவ்வளவுதான்.

இத்தனை செலவுச் சிக்கனத்தில் இரண்டு காவல் நாய்கள் கிடைத்திருப்பது குறித்து நாட்டாமைக்குப் பெரு மகிழ்ச்சி. அழுக்குகளையும் மலத்தையும் மட்டுமே தின்று திரிந்த நாய்களுக்கு  நாட்டாமையின் எலும்புத்துண்டுகளோ பெரு விருந்து.

எலும்புத் துண்டுகளுக்காகவே, நாட்டாமையுடன்  நாய்களிரண்டும் dog - 03அலைந்து திரியும்.

ஊன்றிக் கவனித்தால் – நாட்டாமையின் மோசடிகளை இந்தக் கதையின் ஏதோ ஒரு வரியில் உங்களால் கண்டுபிடித்து விட முடியும்.

ஆனால், அது குறித்து யாருடனும் நீங்கள் பேசிக் கொள்ளக் கூடாது. அது உங்களுக்கு நல்லதல்ல.

நாட்டாமையின் மோசடிகளை வைத்து – அவரை ஒரு திருடனாக நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்கள். அப்படிப் பார்ப்பதை சிலவேளை அவரின் நாய்கள் அறிந்து கொள்ளக் கூடும்.

அப்போது, இந்தக் கதையின் ஏதோவொரு மூலையில் மறைந்து கொண்டிருக்கும்  –  நாட்டாமையின் இரண்டு நாய்களும், திடீரென வெளிப்பட்டு  – தங்கள் அழுக்கு நிறைந்த கோரப்பற்கறை காட்டியவாறே உங்களை நோக்கி குரைக்கத் துவங்கும்!
o

Advertisements
 

One Response to “நாட்டாமையின் இரண்டு நாய்கள்!”

  1. thinakaran Says:

    arumaiyana kuriyiitu vadiva punaivu.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s