காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

காவடியாட்டம்! 29 திசெம்பர் 2010

Filed under: கவிதை — Mabrook @ 1:52 முப

மப்றூக்

‘காவடி’யாடத் தெரியாது எனக்கு
ஆனால், நீ ஆடச் சொல்கிறாய்!
அதுவும் குறட்டைச் சத்தங்களுக்கேற்றவாறு…

காவடி ஆடத் தெரிந்திருந்தால்
பல ‘கடவுள்களை’ என்னால்
கட்டி வைத்திருக்க முடியும் என்று தெரிந்திருந்தும்
காவடியில் எனக்கு ஆர்வமேயில்லை!

மேலும்
காவடிக்கு மயங்கும் ‘கடவுளர்’களின்
பக்தனாக இருப்பதில்
நான் வெட்கம் கொள்கிறேன்.

காவடியாட்டங்களில் சில
அழகாக இருந்தபோதும்
அவைகளை என்னால் ரசிக்க முடிவதில்லை!

பாவம் காவடிகள்
அவை –
ஆட்டக்காரர்களின்
நடனங்களிலுள்ள சூழ்ச்சிகள் பற்றி
அறியாதவை!

நம்பினால் நம்புங்கள்
நேற்றைய பகற்கனவொன்றில்
காவடி ஆட்டக்காரன் ஒருவன்
இறைவனின் சன்னிதானத்தின் முன்னால்
தோப்புகரணம் போட்டுக் கொண்டிருந்தான்!!

Advertisements
 

3 Responses to “காவடியாட்டம்!”

 1. நடமாடும் கடவுளர் முன்
  காவடியாட்டம்
  கடவுளரைக் கட்டி வைக்குமோ
  எச்சிலுக்கு வழிய வைக்குமோ
  அறிநதிலேன்.

  தன்னிலும் வலிந்தவன் முன்
  அவரவர்
  ஆடிக்கொண்டேயிருக்கறார்கள்.
  நிர்வாணமாக
  நம்பிக்கைகள் சூழ.
  கடவுளரின்
  சூழ்ச்சிகளும் கயமைகளும்
  புரியாத வெண்
  மனசுப் பேதையராக.

 2. […] காவடியாடுதல் என்ற சொல்லுக்கு வேறொரு அர்த்தமும் உண்டு.கவிஞர் மப்றூக் கவிதை அதைப் பேசுகிறது.காவடியாட்டம் பற்றிய அவரது ‘காற்று’ இணையப் பதிவுக் கவிதை படிக்க கிளிக் பண்ணுங்கள். காவடியாட்டம்!   […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s