காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அணைத்துக் ‘கொல்லல்’! 17 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 11:12 பிப

மப்றூக்
ன் பெயரை யாராவது அழைத்தால் திரும்பிப் பார்க்கிறேன்.
உன் பெயரை யாராவது அழைத்தால் வெட்கம் கொள்கிறேன்.
உன் பெயரை உனக்கு உறவில்லாத யாராவது உரிமையோடு அழைத்தால் கோபம் கொள்கிறேன்!

இது காதல் எனக்குள் விதைத்து விட்டுப் போன வியாதி.

உன் ஒரே பெயரால் நான் உணர்வுகளின் அத்தனை திசைகள் நோக்கியும் தள்ளப்படுகிறேன்.

உண்மைதான். என்னைப் பொறுத்தவரை உனது பெயர் என்பது பெறுமதியானதே! அதைத் தெரிந்து கொள்வதற்காக எத்தனை வழிகளிலெல்லாம் அலைந்து திரிந்தேன் என்று ஒரு முறை உன்னிடம் சொன்னபோது, நீயே ஆச்சரியத்தில் விழி பிதுங்கியது இன்னும் ஞாபகமாய் மனசுக்குள் உலராமல் கிடக்கிறது.

சும்மாவே எனக்குள் ஆயிரம் சலனங்களை உண்டாக்கும் உன் கண்கள், அப்படி வியப்புக்களால் விரியும் போதெல்லாம், பெயர் தெரியாததொரு பள்ளத்தாக்கில் நான் விழுந்து எழுகிறேன்.

அதெப்படி உனக்கு மட்டும் உதடுகளாலும், விழிகளாலும் ஒரே தடவையில் சிரிக்க முடிகிறது என்று கேட்ட ஒரு நாளில் மட்டும்தான், விழிகளால் முறைத்து, உதடுகளால் மட்டும் சிரித்தாய், சிரிக்க வைத்தாய்!

உன் பெயரை உனக்குச் சூட்டிய வேளைகளில் தேவதைகளும், சாத்தான்களும் ஒரே நேரத்தில் பூச்சொரிந்து ஆசீர்வதித்திருக்க வேண்டும். அது சந்தோசங்களையும், துயரங்களையும் எனக்கு சரிக்குச் சரி தந்து கொண்டுதான் இருக்கிறது.

நீ நேற்று முன்தினம் அனுப்பி வைத்த கடிதத்தின் எழுத்துப் பிழைகள் என்னை அச்சுறுத்தின.

‘முத்தமிட்டு அணைத்துக் கொள்கிறேன்’ என்றுதான் எழுத நினைத்திருப்பாய். ஆனால், எழுதியிருந்ததோ –  முத்தமிட்டு அணைத்துக் ‘கொல்கிறேன்’ என்று!

முத்தமிட்டிருக்கிறாய் – அணைத்துமிருக்கிறாய்
எப்போது கொல்லப்போகிறாய்??                                                                                        o

(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

2 Responses to “அணைத்துக் ‘கொல்லல்’!”

  1. sathiya Says:

    அருமை…
    நன்கு ரசித்தேன்.
    பாராட்டுக்கள் பாராட்டுக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s