காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நதியைக் குடித்துப் போனவள்! 13 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 4:12 பிப

மப்றூக்

ன் வாலிபம் பெரு நதியாக ஓடிக்கொண்டிருந்த ஒரு பொழுது, அதன் கரைகளுக்கு நீ வந்தாய்!

நதி பொங்கி வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராக் கணமொன்றில் – நதியினை அள்ளிக் குடித்தாய்… குடித்தாய்… குடித்தாய்!

பிரபஞ்சமொன்றை நீ – தாகமாய் சுமந்து வந்திருக்க வேண்டும். நீ அருந்தி முடித்தபோது, என் நதி வற்றிக்கிடந்தது. நதி நீரின் ரசனை பற்றி – நீ ஒரு பாடலியற்றினாய்!

நீ பெரு அழகி. உன்னை வர்ணிக்க முயலும் போதே – வார்த்தைகள் இடறிவிழுந்தன! என் நதியில் நீ தாகம் தீர்த்தமை குறித்து பெருமை கொண்டேன்!!

எனது நதி குறித்து நீ இயற்றிய பாடலை, எனக்குப் பிடித்த ராகமொன்றில் ஒவ்வொரு நாளும் என் கனவுகளின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு நான் பாடுவேன். அங்கு பூப்பறிக்க வரும் சின்னச் சின்ன தேவைதைகளெல்லாம், பாடல் கேட்டு நடனமாடுவர்!

நதி குடித்துப்போன நீயோ அதற்குப் பிறகு வரவேயில்லை. வரண்டு கிடந்தது என் நதி!!

ஒரு பொழுது – வேற்றுத் தேசமொன்றில் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது, வேறோர் நதியில் குளித்துக் கொண்டிருந்தாய் நீ!!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s