காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

வெறுமை! 12 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 11:36 பிப

மப்றூக்

நீ எனக்கானவள் இல்லையென்பதை இப்போதெல்லாம் நினைக்க வாழ்க்கை சூனியமாய் தெரிகிறது.

கனவுகளில் பிசாசுகள் கோரம் நிறைந்த முகங்களோடு நடனமாடுகின்றன. அவைகளின் ஒவ்வொரு பாடல்களும்  ஏளனம்  நிறைந்த சொற்களால் என்னைக் கேலி செய்கின்றன.

இன்றைய பகற்கனவில் – வெட்கங்கெட்ட என் காதல், முகம் காட்டாமல் திரும்பிச் செல்லும் உன்னை நெருங்கி செல்கையில் காற்றோடு நீ கரைந்து போனாய்.

காதலை நீ உதறிச் செல்ல, அது – அனாதையாகி அழுகிறது. தாயில்லாக் குழந்தையா நம் காதல்?

ஒவ்வொரு கணமும் இப்போது ஏமாற்றம் நிறைந்ததாகவே கழிந்து போகிறது. நீ செய்து தந்த சத்தியங்களை நேற்றிரவின் மங்கலான கனவொன்றில் சந்தித்தேன். அவை நேர்மையற்றதொரு கடன்காரனைப் போல், என்னைக் காணாதது போல் முகம் திருப்பிச் சென்றன!

தனிமை, தனிமை, தனிமை!

எல்லாமே நீ என்று, நீதான் எல்லாமென்று நினைத்திருந்த எனக்கு, நீயில்லாத இந்த வரட்சிப் பொழுதுகள் தனிமையின் கொடுமையை எனக்குள் நிரப்பிச் சென்றன!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பறவைக் கூட்டமொன்று வசித்த இடத்தில் இருந்து கிடைக்கும் இறகொன்றின் எச்சம் போல், உனது காதலின் ஞாபகமாய் இன்னுமிருப்பது எழுத்துப் பிழைகளுடன் நீ அனுப்பி வைத்த கடிதங்கள்தான்!

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s