காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அது! 12 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 11:03 பிப

மப்றூக்

காதல் இல்லாமல் இழந்து போன கடந்த கால நாட்கள் எத்தனை நஷ்டமானவை! வாழ்வில் காதல் வந்து சேர்ந்த பிறகுதான் அனேகமான விடயங்களுக்கு அர்த்தங்களே புரியத் தொடங்குகின்றன!

கனவுகள் கூட எனக்குள் இப்போதெல்லாம் வாசங்களோடுதான் வந்து போகின்றன. நினைத்துப் பார்த்தால் காதல் அனைத்தையும் தருகிறது. அனைத்தும் காதலையே தருகின்றன!

எறும்பின் கால்தடத்தைக் கூட ரசிக்கும் – கலை மனசை நமக்குத் தருவதெல்லாம் இந்தக் காதல்தான்! முன்பெல்லாம் அருகில் பூந்தோட்டம் இருந்தாலே பொருட்படுத்தாத கண்கள், இப்போது புறாக்களைக் கூட புதுசாகப் பார்க்கின்றன!
கற்பாறை ஒன்றைப் போல் காய்ந்து கிடந்த மனசு, இப்போதெல்லாம் ஒரு கடைக்கண் பார்வைக்கே கசிந்துருகி போகிறது. எனில், இதற்கு காதலன்றி வேறென்ன காரணங்கள் இருக்கின்றன!

காதல் வந்த பிறகுதான் காக்கைக் குஞ்சைக் கூட மனசு நேசிக்கத் தொடங்குகிறது!

மாற்றங்களே இல்லையென்றாலும், புதிது புதிதாய் நம் உருவத்தை கண்ணாடியில் கண்டு மகிழ, காதல்தான் நமக்குச் சொல்லித்தரும்!

வானத்திலிருந்து பொழியும் மழையானது – ஆறு, நதி, கடல் என்று ஆயிரம் உருக்கள் கொண்டாலும் கடையில் ஆவியாகி மீண்டும், ஆகாயம் போய் சேர்வதைப்போல், அடுத்தவரை அறிவதில் ஆரம்பிக்கும் இந்தக் காதல், இறுதியாய் தனக்குள் தேடலை நிகழ்த்தத் தொடங்குவதில் நிறைவு கொள்கிறது!

ஆம், தன்னையறிவதே காதலாகிறது!!

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s