காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பலி! 12 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 10:17 பிப

மப்றூக்

று பிறப்புகளை நான் நம்புவதில்லை! அப்படி நம்புவதாயிருந்தால் நீ முற்பிறவியில் தேவதைகளின் இளவரசியாய் பிறந்திருப்பாய் என்றுதான் சொல்வேன். ஆம், ஒரு தேவதைக்கே உரிய, புன்னகையின் மிகுதிகள் இன்னும் உன் இதழ்களில் ஒட்டித்தான் கிடக்கின்றன.

இப்படியெல்லாம் உன்னைப் புகழ்வதால் உனக்கு கர்வம் மிகுந்து விடுமோ என்று சிலவேளைகளில் நான் நினைப்பதுண்டு. ஆனால், நீ நிறைகுடம். அழகுகளால் நிறைந்து போன குடம். இந்த சின்னச் சின்னப் புகழ்சிக்களால் நீ தளம்பி விடப்போவதில்லை!

ஆம். தேவதை என்பதே உனக்கான ஆகக்குறைந்த புகழ்சிதான்!

ஒரு தென்றல் மாதிரி முடிகோத… பூப்போல் தலையசைக்க…
சிறு மழைத்தூறலாய் புன்னகைக்க…  எங்கேயடி கற்றுக்கொண்டாய்?

அநியாயத்துக்கு அழகுளை நீ வீண்விரயம் செய்கிறாய். நீ சிக்கெடுத்து வீசும் கூந்தல்  முடி, வெட்டி எறியும் நகத்துண்டுகளெல்லாம் அழகுகள்தானே!

பாதியில் முறிந்து போகும் ஓர் அழகிய கனவு மாதிரி, நீ தோன்றி மறையும் சில நிமிட தரிசனங்களுக்காகவே இப்போதெல்லாம் உன் தெருக்களில் கழிகின்றன என் நாட்கள்!

உனக்காக எதையும் இழக்கலாம் என்கிறது மனசு என்பதை உனக்கான கடிதமொன்றில் எழுதி அனுப்பியபோது, அப்படியென்றால், நமது காதலையும் இழப்பீர்களா என்று குறும்புக்காக நீ எழுதியனுப்பினாயே ஞாபகமிருக்கிறதா?

ஆனால் ஒரு உண்மை தெரியுமா? உனக்கென்று வரும் போது  தேவையென்றால் நம் காதலையும் இழப்பேன்.

ஆம், உனக்காக நான் எதையும் இழப்பேன், நமது காதலைக் கூட!!

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s