காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கனவுகளின் துர்வாடை! 10 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 11:39 பிப

மப்றூக்

நீயில்லாத இரவுகள் தீப்பிடித்து எரிகின்றன. எரியும் போது எப்படி உறங்க முடியும்?

உன் திருமணத்துக்குப் பிறகு நான் தூங்கியதாக ஞாகமில்லை!

மனசும், உடலும் வேறுவேறாகவே பயணிக்கின்றன. முன்பெல்லாம் உன் கனவுகள்
குடியிருந்த கண்களுக்குள், இப்போது உப்புக்கடல்!

நமது காதல் என்பது சதுரங்கமா? நான் வெட்டப்பட்டுக் கிடப்பது உனது காய்களாலா?

நீயில்லாத இரவுகள் எனக்குள் தீப்பிடித்து எரிகின்றன! எரியும் போது எப்படி உறங்க முடியும்?

காதலித்தது நாம் என்றால் எனக்கு மட்டும் ஏன் தண்டனை? அப்படியென்றால், நமது காதல் ஒற்றை வழிப்பாதையா? சொல்லடி, உன்னால் நான் காதலிக்கப்படவேயில்லையா?

இன்று தற்செயலாய் வந்த பகல் தூக்கத்தில், சாத்தான்களின் பலிபீடத்தில் சிலுவையிலே நான் அறைப்பட்டேன். ஆணிகள் என் அங்கங்களில் இறங்கும் கணங்களில் நான் கதறி அழுத போது – அந்த சத்தங்களுக்கேற்ப, உன் காதல் – கோர முகத்துடன் நிர்வாணமாய் நடனம் புரிந்தது!

முன்பெல்லாம் நீ முகம்காட்டும் வேளைகளில் நறுமணம் பரவிய என் கனவுகளில், இப்போதெல்லாம் துர்வாடை வீசுகிறது!

வினை விதைத்தால் வினையறுப்பர் என்றுதானே சொல்வர்?
நானோ காதலை விதைத்தேன், துயரங்களை அறுவடை செய்கிறேன்!

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

One Response to “கனவுகளின் துர்வாடை!”

  1. Risath A.C Says:

    நன்றாக உள்ளது மப்றுாக் நானா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s