காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

சரணடைதல்! 10 திசெம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 10:16 பிப

மப்றூக்

காதலிடம் சரணடைவது போல மனசு வேறெங்கும் மண்டியிடுவதில்லை!

காதல் ஒரு போதும் அச்சுறுத்துவதில்லை. அதனிடம் விரும்பியே நாம் சரணடைந்து விடுகின்றோம்.

காதலிடம் மட்டும்தான் எல்லா மனசுகளும் தம்மை அதன் சிறையில் வைக்குமாறு அழுது வேண்டுவர்!

நமது சுதந்திரங்களை நாம் விரும்பியே இழப்பது காதலிடம் மட்டும்தானே!

ஆனால், காதல் எவரையும் அடிமைபோல் நடத்தியதியதேயில்லை!

காதல் எவரையும் ஏமாற்றுவது கிடையாது, ஆனால், காதலை நம்மில் பலர் ஏமாற்றி விட்டதுண்டு!

எவர் கிடைக்கவில்லை என்றும் காதல் அழுவதில்லை. ஆனால், காதலைப் பெறுவதற்காய் கண்ணீரில் குளித்தோர் வரலாற்றில் மிக அதிகம்!

காதல் என்பதை பல சமயங்களில் நமது காதலர்களாக எண்ணிக் கொள்கிறோம். சிலவேளைகளில், நமக்கான காதல் நம்மால் விரும்பப்படுபவர்களிடம் கிடைப்பதேயில்லை!

காதல் வேறு, காதலர் வேறு!

வெட்கம் பாராது மண்டியிடுதல் என்பது காதலினுள் வசிப்போரிடம் மட்டுமே நிறைவான வீதத்தில் சாத்தியமாகிறது!

காதலிடம் சரணடைவது போல மனசு வேறெங்கும் மண்டியிடுவதேயில்லை!

நாம் காதலிடம் சரணடையும் போது, காதல் அதன் சிம்மாசனத்தில் நம்மை இருத்தி வைக்கிறது.

பின்னர் – நமக்கு முன் காதல் மண்டியிடத் தொடங்குகிறது!

(சூரியனில்   ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s