காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஞாபகங்கள்! 29 நவம்பர் 2010

Filed under: இறவாத காலம் — Mabrook @ 8:44 பிப

மப்றூக்
வெறுமையாக இருந்தாலும் வாசம் வீசுகின்ற பூக்கூடை போல,
எதுவுமில்லாமல் சும்மா வருகின்ற உன் நினைவுகளே சுகமாயிருக்கின்றன.

நான் உன்னை நினைத்தேனா அல்லது நீ என்னால் நினைக்கப்பட்டாயா?
நீ என்னால் நினைக்கப்பட்ட வேளை, உன்னால் நான் நினைக்கப்பட்டேனா?
ஒரே புள்ளியில் நாம் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் உட்கார்ந்திருக்கிறோமா?
விடை தெரியாத வரையில் கேள்விகளெல்லாம் எத்தனை ஆனந்தமானவை!

உன் நினைவுகள் குழந்தை மாதிரி – அவை, உறங்கும் போதும் சிரிக்கின்றன.
உன் நினைவுகள் குழந்தை மாதிரி – அவை, மனசெனும் என் இடுப்பை விட்டு இறங்குவதேயில்லை!
உன் நினைவுகள் குழந்தை மாதிரி – அவை, விழிக்கும் நேரம் தெரிவதேயில்லை!

நீயும் என்னை இப்படியெல்லாம் நினைத்தாயா என்று ஒரு பொழுது கேட்டதற்கு, நினைத்தல் என்பது மறத்தலுக்கு பின்னால் வருவது என்று சிரித்தாய்.
அந்தக் கணம் உன் காதலின் முன்னால் கூனிக் குறுகி நின்றது என் ஆண்மை!

சின்ன வயது உண்டியலாய்
உன் ஞாபகங்கள்.
நானே சேமித்து
நானே திருடுகிறேன்!


(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s