காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மு.கா: மீண்டும் முருங்கை மரத்தில்! 8 நவம்பர் 2009

Filed under: அரசியல் — Mabrook @ 7:20 பிப

மப்றூக்

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கின்றது. ஐ.தே.கவுடன் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கூட்டு வைத்துள்ளமை பற்றித்தான் கூறுகின்றோம்!

ஐ.தே. கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மு.காங்கிரஸ் இப்போதைக்கு இணைந்து கொள்வதென்பது புத்திசாலித்தனமான விடயமல்ல என்றும், அவ்வாறு அவசரப்பட்டு இணைந்து கொள்வதை கட்சியின் அதியுயர் பீடம் கூட விரும்பவில்லை என்றும் மு.காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறி, ஒருவாரம் கூட முடிவடையாத நிலையில் தான் இந்த இணைவு இடம்பெற்றிருக்கிறது!

பஷீர் சேகுதாவூத் கூறியதன் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது இங்கு பாரியதொரு சந்தேகம் எழுகிறது. அதா வது, ஐ.தே.க. தலைமையிலான எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் அவசரப்பட்டு இணைந்து கொள்வதை, கட்சியின் அதி யுயர் பீடமே விரும்பவில்லை என்றால், பிறகு யாரின் விருப்பத்தை முன்னிறுத்தி இந்த இணைவு இடம்பெற்றுள்ளது? ஹக் கீமுக்கும் ஐ.தே.க.வுக்குமிடையிலான தீராத காதலின் தொடர்ச்சிதான் இந்த இணைவு என்கிறார்கள் பலர்!

இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதி ராகப் பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வருகிறது என்பதில் இரண்டு பட்ட கருத்துக்கள் இல்லை! அதற்காக மு.காங்கிரஸ் ரணிலுடன் போய்க் கைகோர்த்து நிற்பதென்பது எந்தளவுக்குப் புத்திசாலித்தனமான விடயம் என்பது தான் பலரினதும் கேள்வியாகும்!

ரணில் தலைமையிலான கட்சி அல்லது கூட்டணி யொன்றை தேர்தலொன்றில் வெற்றி பெற வைப்பதென்பது கல்லில் நாருரிக்கும் வேலை! 2002 ஆம் ஆண்டு இந்த நாரினை மு.காங்கிரஸ் முன்னின்று உரித்து எடுத்து ரணிலை பிரதம மந்திரியாக்கிப் பார்த்தது. ஆனால் நடந்தது என்ன? என்று கேட்கின்றார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா.வின் மூத்த உறுப்பினர் ஒருவர்! தொடர்ந்து அவரின் கேள்விக்கான பதில்களை அவரே இவ்வாறு வரிசையும் படுத்தினார்

* யுத்த நிறுத்த உடன்படிக்கையில் முஸ்லிம்களை ரணில் புறக்கணித்தார்.
* வாழைச்சேனையில் புலிகளால் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் ஜனா ஸாக்கள் பல அரச உயரதிகாரிகள் முன்னி லையில் எரிக்கப்பட்டபோது ரணில் சும்மாவே இருந்தார்.
* மூதூரில் முஸ்லிம்கள் புலிகளால் தாக்கப்பட்டபோது ரணில் எதுவும் செய்யவில்லை.
* அந்த நிலையில் மூதூருக்கு சென்ற ஹக்கீம், அங்கு ரணில் வந்தால்தான் மூதூரை விட்டு நான் வருவேன் எனக் கூறி காலக்கெடு விதித்திருந்தார்.ஆனால், ரணில் திரும்பியே பார்க்கவில்லை.

இப்படியான ஒருவருடன் இத்தனை அவசரப்பட்டுக் கொண்டு போய்ச் சேர்வதற்குக் காரணம்தான் என்ன? முஸ்லிம்களின் நலனா, அல்லது தனிநபர் விருப்பா? என்று கேட்கும் அந்த மூத்த உறுப்பினரின் கேள்விக்கு மு.கா. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மு.காங்கிரஸ் இணைவதா, இல்லையா என்பது பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மாவட்ட மட்டங்களில் மு.கா. பெற்றுக் கொள்ளப்போவதாகவும், அந்த ஆலோசனைகளையெல்லாம் கவனத்திற் கொண்டே கூட்டணியில் சேர்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந் தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி கூறியிருந்தார். ஆனால், அப்படியெதுவும் நடைபெற்றதாகத் தெரியவே யில்லை!

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணியில் மு.கா. இணைந்து கொள்வதிலோ அல்லது இணைந்து கொண்டதிலோ அதிகமான மு.கா. ஆதரவாளர்களுக்கு விருப்பமேயில்லை என்பது தான் நிலைவரமாகும். ஆனால், மக்களின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் தலைமைத்து வங்கள் இழுபட்டுக் கொண்டு செல்லக் கூடாது. மக்களை நமது முடிவுகளின் பின்னால் அணிதிரளச் செய்ய வேண்டும். ஒரு நல்ல தலைமைத்துவத்துக்கு அது தான் அழகு என்று தத்துவம் பேசுகின்றனவாம் மு.கா.வின் சில தலைகள்!

ஐ.தே.க. கூட்டணியோடு மு.காங்கிரஸ் இப்போது இணைந்திருக்கிறது. இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலொன்றின்போது மு.காவின் நிபந்தனைகளையெல்லாம் அரச தரப்பு ஏற்றுக் கொண்டு தமது அணியில் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பொன்றை விடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் மு.கா. எடுக்கும் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பது பற்றி மு.காவின் தலை மைத்துவம் இப்போதே சொல்லி வைக்க வேண்டும் என்கிறார் மு.காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்!

இவைகள் ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சிக் கூட்டணியின் பங்குதாரர்களில் ஒருவரான மனோ கணேசன் பாரியதொரு குண்டொன்றைக் கையில் வைத்துக்கொண்டு தான் கூட்டணி உடன்படிக்கையில் கையொப்பத்தை வைத்திருக்கின்றார். அதாவது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது ஜெனரல் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நியமிக்குமாயின், அதை தனது கட்சி ஆதரிக்கப் போவதில்லை என்பது தான் அந்தக் குண்டு. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்து கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாரும் பொன் சேகாவை ஆதரிக்கப் போவதில்லை என்றுதான் அறிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், பொது வேட்பாளருக்கு மிகவும் பொருத்தமான நபர் சரத் பொன்சேகா தான் என்பதே எதிரணியில் இருக்கும் அநேகரின் அபிப்பிராயமாகும். அப்படியென்றால், எதிர்க்கட்சிக் கூட்டணியின் பங்கு தாரர்கள், இரண்டு பட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்! அத்திவாரமே உதைக்கிறது!!

ஐ.தே.கட்சியுடன் மு.காங்கிரஸ் கூட்டு வைத்துக் கொண்ட போதெல்லாம், அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தக்கட்சி பெற்றிருக்கின்றது. மு.கா. வின் இதுவரையிலான வரலாற்றில் அந் தக்கட்சி பெற்றுக்கொண்ட அதிகப்ப டியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 12 ஆகும். ஐ.தே.க. கூட்டணியில் இணைந்திருந்த போது தான் அவ்வாறானதொரு எண்ணிக்கையினை மு.கா.வால் பெற்றுக் கொள்ள முடிந்தது. அப்படிப்பார்த்தால், தற்போதைய கூட்டணியைப் பயன்படுத்தி இம்முறையும், மு.காங்கிரஸ் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள் ளலாமல்லவா? அது மு.கா.வுக்கு லாபமில்லையா என்று எதிர்க்கட்சிக் கூட்டணியில் மு.கா. இணைந்து கொண்டதை எதிர்த்துப் பேசிய நண்பர் ஒருவரிடம் நாம் கேட்டோம்.

வார்த்தைகளால் அவர் நமது நெற்றிப் பொட்டில் அடித்தார்! முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு அதிகப்படியான முஸ்லிம் பா.உ.களைப் பெறுவதுதானா? மு.காங்கிரஸ் அவ்வாறு அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட போதெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகள் தீர்ந்ததா? இல்லையே! அப்படியென்றால், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைத் தராததொரு விடயத்தை அடைவதற்காக மு.காங்கிரஸ் ஏன் அலைய வேண்டும் என்று கேள்வி மேல் கேள்விகளால் துளைத்தெடுத்தார் அந்த நண்பர்! அவரின் கேள்விகள் மு.கா.வுக்குச் சமர்ப்பணம்!!

ஐ.தே.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியின் பின்னணியில் நோர்வே தரப்பு இயங்குவதாக பாமர மக்களே பேசிக் கொள்கின்றார்கள். இன்னொரு புறம், நோர்வேக்காரர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே ஹக்கீம் செயற்படுகிறார் என அதாவுல்லா தரப்பினர் பெரு மெடுப்பில் பிரசாரம் வேறு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐ.தே.க. கூட்டணியோடு அவசரப்பட்டுப் போய் ஹக்கீம் கையெழுத்திட்டமையானது பஷீர் சேகுதாவூத் சொன்னது போல அத்தனை புத்திசாலித்தனமான செயலாகத் தெரியவில்லைதான் என்று மு.கா.வின் அதியுயர் பீட உறுப்பினரொருவரே நம்மிடம் கூறுகின்றார்!

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலொன்றை முன்னிறுத்தியே இந்த எதிர்க்கட்சிக் கூட்டணயில் மு.கா. இணைந்துள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்த லொன்றின் போது, இரண்டு தரப்பாருடனும் தமது கட்சி மீண்டும் பேசுமெனவும் தலைவர் ஹக்கீம், கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர்களின் கூட்டத்தின் போது உறுதிபடக் கூறியிருகின்றார். அப்படியென்றால், கூட்டணியில் இணைந்து ஒப்பமிட்ட உடன் படிக்கையினை மு. கா. தலைமை பகிரங்கப்படுத்த வேண்டும். இதில் ஒளிவு மறைவெல்லாம் இருக்கக்கூடாது என்று கேட்கின்றனர் மு. கா. ஆதரவாளர்கள்!

சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவைகள் ஒருபோதும் ஒற்றையடிப் பாதைகளால் பயணிக்கக் கூடாது. அதாவது, ஒரு தரப்பினர் மீதான வைராக்கியங்களை அல்லது தீராத காதலை வைத்துக் கொண்டு, குறித்த ஒரு தரப்புக்கே ஆதரவு எனும் நிலைப்பாட்டில் இருத்தல் ஆகாது. அது அந்தச் சிறுபான்மைக் கட்சி பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சமூகத்துக்கும் நல்லதல்ல!

எனவே, சிறுபான்மைக் கட்சிகள் எப்போதும் தமது கைகளில் மாற்று வழிகளை வைத்திருந்தே ஆக வேண்டும்.
நம்மிடம் மாற்று வழி இல்லை யென் றால், நாம் சார்ந்து நிற்கும் பெருந் தேசியக் கட்சியே நம்மை ஒரு நிலையில், கணக் கெடுக்காதும் போய் விடலாம்!

எது எப்படியோ மு.கா. தரப்பார் இப் போது அவசர மாய் இரண்டு விடயங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

ஓன்று: மு.கா. ஒற்றையடிப்பாதையில் பயணிக்கவில்லை.

இரண்டாவது: ஹக்கீம் வேதாள மில்லை!

(இந்தக் கட்டுரையை 07 நொவம்பர் 2009 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s