காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஆகாயத்தில் வசித்தவன் 13 ஜூன் 2009

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 5:40 பிப

மப்றூக்

microphone-1.jpgடகத்துறை என்பது பிரமிப்புகள் நிறைந்த ஓர் மாய உலகம்! அது விரும்பும் போது ஒரு கைக்குட்டையைக் கம்பளமாகக் காட்டும். காட்டுத் தீயை, தீப் பொரியாகச் சுருக்கிச் சொல்லும்.

அதிலும் இலத்திரனியல் ஊடகங்கள் தமது நுகர்வாளனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்பதற்காகவே பல வேளைகளில் ஜாலங்களைக் கையாளுகின்றன!

குறிப்பாக நுகர்வோனை அதிசயிக்க வைப்பதில் வானொலிகளே முன்னிற்பவை. காரணம் அவை சத்தங்களால் கேட்போனின் மனதில் படிமங்களை உருவாக்கி விடக்கூடியவை. வாயினால் எழுப்பப்படும் சத்தமொன்றை புயலின் ஓசையென்று வானொலியினால் நம்ப வைத்து விட முடிகிறது!

இவ்வாறு பிரமிப்புகள் நிறைந்த இந்த ஊடக உலகம் போட்டிகள் நிறைந்தது. இங்குள்ள ஒவ்வொருவரும் தன்னை ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களால் புதிப்பித்துக் கொள்ளாவிடின் சக போட்டியாளனால் பின்தள்ளப்பட்டு விடுவார்! ஆக – இதை தேடல்கள் நிறைந்த உலகம் என்றும் குறிப்பிட முடியும்!

மற்றவர்களை மிக எளிதில் சென்றடையவும், அதனால் பிரபலமடைந்து விடவும் இத்துறையினூடாக முடியுமாகையால், இதில் நுழைவதற்கும், நின்று நிலைப்பதற்கும் பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வதுண்டு!

அறிவால் தன்னை நிறைத்து அதன் மூலமாக இத்துறையில் சாதிக்க முடியாதவர்கள் தனது சக போட்டியாளனை முறையற்ற வழிகளினூடாக வெட்டி வீழ்த்த முயற்சிப்பதுண்டு! தேடலுள்ளவனிடத்தில் தேடலற்றவன் பயம் கொள்கிறான்! இதனால், ஊடகத்துறையில் விருப்பமற்ற சில விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன!

இந்த மாய உலகில், அதிலும் அதிசயங்கள் நிறைந்த வானொலி உலகில் கிட்டத்தட்ட ஏழான்டுகள் வாசம் செய்தவன் என்கின்ற வகையில் அந்த நினைவுகளை பகிர்ந்து கொள்வதே ஷஆகாயத்தில் வசித்தவன்| எனும் இப் பத்தியின் அவாவுதலாகும்!

இதன் வழியாக சந்தோசங்கள், வலிகள் உங்களுடன் பகிரப்படும்! இந்த துறையில் அபிமானமுள்ளோருக்கு இதனூடாகச் சில தகவல்கள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. மேலும் பிம்பங்கள் சில சிதையக் கூடும், முகமூடிகளற்ற கோர முகங்களை நீங்கள் காணலாம். இவைகள் தாண்டி சில நல்ல மனசுகளைத் தரிசிக்கவும் வாய்ப்புண்டு!

வீரகேசரி வெளியீடான  ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

2 Responses to “ஆகாயத்தில் வசித்தவன்”

  1. தொடர்ந்தும் எழுதுங்கள் அண்ணா….. எதிர் பார்த்துட்டு இருக்கிறேன்….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s