காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நீ! 13 செப்ரெம்பர் 2008

Filed under: இறவாத காலம் — Mabrook @ 3:14 பிப

color-dot.gifமப்றூக்

ன் பெயரை கொண்ட ஒருத்தியை இன்று சந்தித்தேன். உன்னிலும் இளமையாக அவள் இருந்தாள். ஆனால், உன்னைப்போலவே அவளும் அழகாயிருந்தாள்.

அவளை நான் அடிக்கடி காண்பதுண்டு. நினைத்துப் பார்த்தால், அவளுக்கும் உன் பெயர்தான் என்று நான் தெரிந்து கொண்ட இன்றுதான் அவளை நான் கவனிக்க ஆரம்பித்தேன். திறந்து சொன்னால், உன்பெயரை வைத்திருப்பதால்தான் அவள் எனக்கு அழகாக தெரிகின்றாளோ தெரியவில்லை.

காதல் நமக்குள் குழந்தைத்தனங்களைத்தான் அதிகம் விதைத்து விட்டுப் போகிறது. இல்லையென்கிறாயா?

நாம் பிடித்துக் கொள்ளும் சண்டைகளை நினைத்துப்பார். அவை குழந்தைத்தனங்களால் ஆனவைகளில்லையா? யோசித்துப் பார்த்தால் அவைகளுக்கான காரணங்கள் எத்தனை அபத்தமானவை. சரி அபத்தமான காரணங்களாவது இருந்தாலும் பரவாயில்லை, ஆனால், பல சமயங்களில் நமது சண்டைகளுக்கு காரணங்களே இருப்பதில்லை.

உண்மையாகச் சொன்னால், நமது சண்டைகளை – சண்டைகள் என்றே சொல்ல முடியாது. எல்லாச் சண்டைகளும் கோபத்தின் உச்சத்தில்தானே பிறக்கின்றன. ஆனால், இந்தக் காதலில் மட்டும் அன்பின் உச்சத்தில்தான் அனேகமான சண்டைகள் பிறக்கின்றன. அதனால்தான், காதலர்களுக்கிடையிலான சண்டைகளை மட்டும் இலக்கியம் ஊடல் என்கிறது!

உன் பெயரைக் கொண்ட அந்த ஒருத்தி, உன் பெயரை வைத்திருப்பதால்தான் எனக்கு அழகாய் தெரிந்திக்கலாம் என்பதைப்போலவே, உனக்கு வைத்திருப்பதால்தான் உன் பெயரும் எனக்கு அழகாய் தெரிகிறதடி பெண்ணே!

  •  

 

Advertisements
 

3 Responses to “நீ!”

  1. Asker Says:

    its very sweet fully memory’s …………….

  2. Visiri Says:

    simply superb. Keep it up… Expecting more..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s