காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

காதலின் முகம்! 10 செப்ரெம்பர் 2008

Filed under: இறவாத காலம் — Mabrook @ 12:37 முப

color-dot.gifமப்றூக்

காதல் துயரங்களாலானது. மகிழ்சி என்பது அது தருகின்ற மாயக்கனவுகள். காதலின் மறுபெயராய் கண்ணீரைச் சொல்லலாம். பூமியில் முளைத்த காதல்களெல்லாம் கண்ணீரால் வளர்ந்து கண்ணீராலேயே அழிந்து போயின!

உலகில் மிக மோசமான அடக்குமுறைக்குள்ளாகி வருவதில் காதலே முதலிடமானது. அது – பயணிக்கும்  பாதைகள் வலிகள் காய்க்கும் முள்மரங்கள் கொண்டவை!

காதல் எவரையும் ஏமாற்றுவதில்லை என்று வலது கையால் சத்தியம் செய்து கொண்டே இடது கையால் குழிபறிக்கும் குணம் கொண்டது!

மனசு மயக்கும் நறுமணம் எப்போதும் காதலிடம் வீசிக்கொண்டேயிரக்கும். ஆனால், அது அருவருப்புகளாலான அதன் உடல் வாசத்தை மறைப்பதற்காய் காதல் பூசிக்கொண்ட திரவியம் என்பதை காதலங்கடந்தே நம்மால் அறிய முடிகிறது.

காதலின் வணக்கஸ்தலம் அனேகமாய் பலிபீடங்களாவே இருக்கின்றன! மனசுகள் அங்கு கொல்லப்படும் வேளைகளில் சாத்தான்களோடு சேர்ந்து காதல் குரவையிட்டு மகிழ்கின்றது. விசித்திரமான அசைவுகள் மூலம் நடனம் புரிகின்றது.

மோசடிக்காரர்கள் காதலை எப்போதும் முகமூடியாக அணிந்து கொள்கிறார்கள். அப்பாவிகளோ காதலை முகமாக அணிந்து கொள்கின்றனர்!

  •  

 

 

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s