காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முஸ்லிம் அரசியல் தலைமைகள்: விதிவிலக்குகளும் விலக்கி வைக்கப்பட வேண்டியவைகளும்! 7 ஓகஸ்ட் 2008

Filed under: அரசியல் — Mabrook @ 6:41 பிப

color-dot.gifமப்றூக்
டந்த சில வாரங்களுக்கு முன்னர் ஞாயிறு தினக்குரலில் ‘தண்ணீரைத் தொலைக்கும் நதிகள்’ எனத் தலைப்பிட்டு நமது முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளை, குறிப்பாக அமைச்சர்களையூம் அவர்களின் பொது நடத்தையினையூம் விமர்சனத்துக்கு உட்படித்தியிருந்தோம். பௌத்த பேரினவாதச் சிந்தனையின் திட்டமிட்ட செயற்பாடுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டு வரும் காணி அபகரிப்பு, பசு கொல்லலுக்கான தடை மற்றும் பாங்கு சொல்வதற்கான ஒலித்தணிக்கைக் கட்டுப்பாடு ஆகியவைகளுக்கெதிராக  நம்மவர்களில் எவரும் கவனமெடுத்துச் செயற்படவில்லை என்று மக்களின் ஆதங்கத்தினை எமது குறித்த அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம்! ஆனால், அந்தக் கட்டுரை இடம்பெற்று கிட்டத்தட்ட இரண்டு வாரங்களின் பின்னர் நமது முஸ்லிம் அரசியல் அரங்கில் மகிழ்சிகரமானதும், நம்பிக்கை தரக்கூடியதுமான சில நிகழ்வூகள் நடந்தேறியூள்ளன.

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் மற்றும் இன்னும் சில பிதேசங்களில் முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை – சுற்றாடல்துறை அமைச்சு சுவீகரித்துக் கொண்டதும்இ அதுகுறித்து முஸ்லிம் அரசியல் அரங்கில் உரத்துப் பேசப்பட்டதும் இங்கு ஞாபகம் கொள்ளத்தக்கது. மு.காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் போது அவர்களின் அந்த முடிவூக்காகக் கூறிய காரணங்களில் இந்தக் காணி அபகரிப்பு விடயமும் ஒன்றாகும். சிஹல உறுமயவின் பௌத்த மேலாத்திக்க அதிகாரச் சிந்தனையைக் கொண்ட சுற்றாடல்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின், திட்டமிட்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தக் காணி அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன என்பது முஸ்லிம் தரப்பின் குற்றச்சாட்டாகும். இது குறித்து பல முறை நமது அரசியல்வாதிகள் எதிர்க்குரல் எழுப்பியிருந்தாலும் முஸ்லிம்களை ஒடுக்குவது தொடர்பிலான சம்பிக்கவின் நடவடிக்கை நிறுத்தப்படவேயில்லை! இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமது முஸ்லிம் அமைச்சர்கள் குழுவொன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவைச் சந்தித்து குறித்த காணி அபகரிப்பு விடயம் சம்பந்தமாகக் காரசாரமாய் விவாதித்துள்ளது. 

அந்தச் சந்திப்பில் – அமைச்சர் அதாஉல்லா, சுற்றாடல் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நடவடிக்கையை மிகவூம் கடுமையாக விமர்சித்ததோடு, முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்டு வரும் இவைபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும், முஸ்லிம் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக தனது அமைச்சுப் பதவியினைத் துறக்கும் ஒரு நிலைவந்தால், அதற்கும் தான் தயாராக இருப்பதாகவூம் அமைச்சர் அதாஉல்லா அதன்போது கோபமாகக் கூறியிருக்கின்றார். இதன்போது, பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா மற்றும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அமைச்சர் சம்பிக்க மீது தமது அதிருப்தியினை ஆத்திரத்துடன் தெரிவித்ததாகவம் நமக்கும் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

உண்மையிலேயே மேலுள்ள சம்பவம் முஸ்லிம்கள் தரப்பில் சந்தோசம் தருகின்றதொரு விடயமாகும். சிறுபான்மைச் சமூகத்தை ஏதோ தமது வாகுக்கெல்லாம் பயன்படுத்த முடியூம் என நினைத்திருந்த பௌத்த மேலாதிக்கவாதிகளின் குறுஞ் சிந்தனையின் மீது விழுந்;ததொரு குறிப்பிடத்தக்க அடி இதுவாகும். தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோருமே பௌத்த மேலாதிக்கத்தின் அனைத்துக் கயமைகளையூம், கண்டும் காணாதது போல இருப்பார்கள் என இருந்து வந்த விமர்சனங்களையூம் மேற்குறிப்பிட்ட சம்பவம் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. இது ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாக இருந்தால் இன்னும் பல நல்லவைகள் நமது சமூகத்துக்குள் நடைபெறலாம். 

அமைச்சர்கள் குழுவின் அந்தச் சந்திப்பின் பின்னர், முஸ்லிம்களிடமிருந்து நியாயமற்ற முறையில் அவ்வாறு காணிகள் அபகரிக்கப்பட்டிருந்தால் அவைகளைத் திருப்பியளிப்பதற்கு அல்லது அவைகளுக்கான நஷ்டஈட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சம்மதம் தெரிவித்திருந்தார் எனவூம் அறிய முடிகிறது. 
சேர்ந்து இயங்கும் போது பல ஆரோக்கிய வெற்றிகளை நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு நல்ல உதாரணமாகும். இது குறித்து நமது அமைச்சர்கள் சிலரிடம் கேட்டபோது – ”சில விடயங்களை புத்திசாலித்தனமாகவூம், தந்திரத்தோடுமே கையாள வேண்டியிருக்கிறது. ஆயூதப் போராட்டங்களாலேயே வெற்றி கொள்ள முடியாத பௌத்த மேலாதிக்கத்தின் அதிகாரத்தை, ஜனநாயக அரசியல் அரங்கில் இருந்து கொண்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் பாணியில் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. அவ்வாறு வெற்றி கொள்ளலாம் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமாகும். அந்த அரசியல் சிறு பிள்ளைத்தனத்தைத்தான் அண்மையில் மு.கா. தலைமைத்துவம் செய்து காட்டியது. ஆனால், புத்திசாதுரியமான அரசியல் காய் நகர்த்தல்களின் மூலமாகவே இவ்வாறான விடயங்களைச் சாதிக்க முடியூம்” என்கிறார்கள்.

ஆக, நமது அமைச்சர்களின் இவைபோன்ற துணிச்சலான நடவடிக்கைகள் நிச்சயம் வாழ்த்தி வரவேற்கப்படக் கூடியனவைகளாகும்! நமது அனைத்துப் பிரதிநிதிகளும் ரோம் எரியூம் போது, சங்கீதமிசைத்துக் கொண்டிருக்கும் நீரோக்களல்ல எனும் செய்தி ஆறுதலளிக்கின்றது. சுயநல அரசியலுக்காக சமூகத்தைக்கூட விற்றுவிடலாம் என நினைக்கும் கூட்டத்தார்களில் விதிவிலக்கானவர்கள் குறித்து மகிழ்ச்சிப்பட முடிகிறது!

எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியிலான, மு.காங்கிரஸின் முடிவூ பற்றி நமது அமைச்சர்கள் பேசியது மட்டமன்றி, மு.கா.வின் உள்ளுர் முக்கியஸ்தர்கள் பலரே தலைவர் ஹக்கீமின் முடிவூகள் குறித்துக் கடுமையான அதிருப்திகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடனான உரையாடல்களின் போது இதை அறிந்த கொள்ள முடிந்தது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த அரசாங்கத்தில் தபால் துறை அமைச்சராக இருந்த வேளையில் வகுக்கப்பட்டிருந்த பல திட்டங்கள், அரசிலிருந்து விலகும் அவரின் முடிவால் மக்களுக்கு இல்லாமல் போய்விட்டதாக ஒரு மு.கா. பிரமுகர் வருத்தம் தெரிவித்தார். ஆகக்குறைந்தது குறித்த அத்திட்டங்களைச் செயற்படுத்தி முடித்த பிறகாவது தலைவர் விலகியிருக்கலாம் என்று அவர் ஆதங்கம் வெளியிட்டார். உதாரணமாக அம்பாரை மாவட்டத்தின் பாலமுனைப் பிரதேசத்துக்கு சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியில் தபால் நிலைய கட்டடங்களை அமைப்பதற்கான திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் – ஹக்கீம் அரசிலிருந்து விலகியவூடன் அக்கட்டடத்துக்கான திட்டம் நிறுத்தப்பட்டே விட்டது என்கிறார் இது குறித்து அறிந்த ஒருவர்! இவைபோன்ற பல நல்ல விடயங்கள் மு.கா.வின் முந்திரிக்கொட்டைத்தனமான அவசரமுடிவால் சமூகத்துக்கு கிடைக்காமல் போயூள்ளதாம்.

அம்பாரை மாவட்ட அரசியல் தொடர்பில் பலரிடமும் பேசிப்பார்த்தோம். மு.கா.வின் பல பிரமுகர்களே அக்கட்சியின் தலைமை மீது மிகவூம் அதிருப்தியூடன் இருப்பதைக் காண முடிகிறது. இதில் குறிப்பிடத்தக்கதொரு விடயம் என்னவென்றால், அதிருப்தி கொள்வோர் அனைவரும் சமூக அக்கறையோடுதான் அவ்வாறு தமது கூறுகின்றனரா என்றால், அவ்வாறல்ல! ‘மு.கா. தொடர்ந்தும் அரசில் இருந்திருந்தால் அதன் மூலமாக தாமும் ஏதாவது கொந்தராத்துகளைப் பெற்றுக்கொண்டு அதனூடாகச் சட்டைப் பைகளை நிரப்பியிருக்கலாமே, அதற்குள் ஹக்கீம் இவ்வாறு கவிழ்த்து விட்டாரே’ என்பதுதான் ஒரு சில மு.கா. முக்கியஸ்தர்களின் அதிருப்திக்குக் காரணமாகும்!

கொந்தராத்து மற்றும் ஊழல் மோசடி அரசியல் குறித்துப் பேசும் போது – அட்டாளைச்சேனைப் பிரதேச சபை நினைவூக்கு வருகிறது. அண்மையில் இந்தப் பிரதேசசபையில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையொன்று தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவிக்கின்றார். அதாகப்பட்டது, தேசிய நீர்வழங்கல் அபிவிருத்தி அதிகாரசபை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நீர்வழங்கும் நடவடிக்கையொன்றை அண்மையில் செயற்படுத்தியூள்ளது. இதன்போது, பாரிய நீர்க்குழாய்களை நிலத்தடியில் புதைப்பதற்காக பாதைகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் போது, அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் நிருவாகத்துக்குட்பட்ட பல பாதைகள் சேதமடைந்திருந்தன. இந்தப் பாதைகளை நீர் வழங்கல் அதிகார சபைபே திருத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே, அவ்வாறு சேதமடைந்த பாதைகளை திருத்தி கொள்ளுமாறு கூறி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையொன்றை அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு வழங்கியது. அவ்வாறு வழங்கப்பட்ட தொகையிலேயே மோசடி இடம்பெற்றுள்ளது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை!

எனவே, பாதைகளைத் திருத்தியதாக வெறும் அறிக்கைகளை மட்டும் சமர்ப்பித்து விட்டு, பிரதேசசபையின் ஆட்சியாளர்கள் பெருந்தொகைப் பணத்தை கையாடல் செய்து விட்டதாகக் கூறப்படும் இந்தக் குற்றச் சாட்டுக் குறித்த விளக்கத்தினை அல்லது எதிர்வினையை பிரதேசசபையின் தவிசாளர் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் சார்பாக இக்கட்டுரை இவ்விடத்தில் கோரி நிற்கிறது. ஏனெனில் – மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் பணம், மக்களுக்கான பணமாகும்!

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையானது மு.காங்கிரசின் ஆளுகைக்குட்டதாகும். இதில் சில காலமாக பொம்மை நிர்;வாகமே இடம்பெற்று வந்தது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அண்மையில் மு.கா.வின் வேறு சிலர் இதன் தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டனர். ஆனால், இவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்ட பின்னர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிக மோசமாகப் பழிவாங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக மு.கா.வூக்கு வாக்களிக்கவில்லை என்கின்ற காரணத்தைக் கூறி, குறிப்பிட்டதொரு பகுதி மக்களுக்கு நடமாடும் குடிநீர் வழங்கும் செயற்பாட்டைக்கூட, அட்டாளைச்சேனைப் பிரதேச சபை சில காலங்களுக்கு முன்னர் மறுத்து அந்த மக்களை பழிவாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அப்பிரதேச சபைக்குட்பட்ட பொதுநூலகம் பல்வேறு குறைகளோடு இயங்கி வருகின்ற போதும் இது குறித்து தவிசாளரோ ஏனையோரோ கவனம் செலுத்தவில்லை. மழைபெய்தால் நூலகம் நீர் தேங்கியே காணப்படும். இதில் குறிப்பிடத்தக்க விடயமென்னவென்றால் நூலகம் இயங்கும் கட்டடத்தின் கீழ் மாடியில்தான் பிரதேச சபை இயங்குகின்றது என்பதோடு, தவிசாளரும் அங்குதான் அதிக நேரம் தங்கியூமிருப்பார். இருந்துமென்ன ஆன பலன்தான் எதுவூமில்லை என்கின்றனர் பொது மக்கள்! தென்கிழக்கு பல்கலைக்கழகம், கல்விக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் கிழக்கிலங்கை அரபிக் கல்லூரி என்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கும் இப்பிரதேசத்தில் ஒரு நூல் நிலையம் இவ்வாறு மிக மோசமான நிலையில் நடத்தப்படுவது குறித்தும் புத்தி ஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விடயங்கள் பற்றி மூத்த சமூக சேவையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; அரசியல்வாதிகளின் வெறும் உணர்ச்சியூட்டல்களுக்கு அடிமையாகி, பிழையானவர்களை தமது பிரதிநிதிகளாகத் தெரிவூ செய்த மக்களுக்கு இது நல்ல தண்டனைதான் என்கிறார்.

யோசித்துப் பார்த்தால், அந்தக் கருத்தில் உண்மையில்லாமலுமில்லை!

 

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s