காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முஸ்லிம் அரசியல் அரங்கு: வெற்றுச் சிலுசிலுப்புகளும் வெகு ஒரு சில பலகாரங்களும்! 22 பிப்ரவரி 2008

Filed under: அரசியல் — Mabrook @ 1:09 முப

color-dot.gifமப்றூக் 

னது கைத்தொலைபேசிக்கு சிலவாரங்களுக்கு முன்னர் ஒருநாள் பிற்பகல் நேரமளவில் அழைப்பொன்று வந்தது. அது பிரதியமைச்சர் ஒருவரின் இலக்கம். பதிலளித்தேன். பிரதியமைச்சர் பேசினார். அரசாங்கம் வரவூ – செலவூத்திட்டத்தில் வெற்றிபெற்றமைக்கு, தானே மிகப்பிரதான காரணமென்றும் அதுபற்றி பத்திரிகையில் பிரத்தியேகக் கட்டுரையொன்றை எழுதுமாறும் பிரதியமைச்சர் கேட்டுக் கொண்டார். நான் சிரித்துச் சமாளித்துக் கொண்டேன். அந்தக் கூற்றிலிருந்த கோமாளித்தனத்தை நினைத்து வேறென்னதான் செய்ய? குறித்த பிரதியமைச்சர் தன்னை சமூகக் காவலனாகவூம், சேவையின் சிகரமாகவூம் அடிக்கடி காண்பிக்க பெரும் பிரயத்தனம் எடுக்கும் ரகத்தவர். மக்கள் சேவைக்காகவே, தான் பிறப்பெடுத்ததாக அவரின் பேச்சுக்களில் பொருள் தொனிக்கும்.

தொழில் ரீதியான உதவியொன்றைப் பெற்றுக்கொள்றும் பொருட்டு குறித்த பிரதியமைச்சரிடம் வெளியூரிலிருந்து நபரொருவர் அண்மையில் தொலைபேசி மூலம் உதவியொன்றைக் கேட்டிருந்தார். பிரதியமைச்சரும் செய்து தருவதாகக் கூறி, குறித்த நபரைக் கொழும்புக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு சொல்லியிருந்தார். கடனை, வூடனைப்பட்டுக் கொண்டு கொழும்பு வந்த குறித்த நபர், அமைச்சரின் அமைச்சுக் காரியாலயத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் அலைந்தும் அமைச்சரைச் சந்திக்க முடியவேயில்லை. ஆனாலும், தனது தொழில் பிரச்சினைகள்; எழுதப்பட்ட, சிபாரிசு கோரும் கடிதத்தினை அமைச்சில் ஒப்படைத்து விட்டு, நபர் சென்று விட்டார். ஆனால், பிரதியமைச்சரோ குறித்த நபரின் விடயத்தில் கருசனையேயின்றி காலம் கடத்திவிட்டார். பாவம், வறுமையில் வாடும் நபரும்இ குடும்பமும் பிரதியமைச்சர் ஏதோ பெரிதாகக் கிழித்து விடப்போகிறார் எனும் எதிர்பார்ப்பில் இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

மேலுள்ள விடயம் சிலருக்கு மிகச்சிறிதொன்றாகத் தோன்றலாம். ஆனால் – பாதிக்கப்பட்டவரினதும், அவரின் மனைவி, பிள்ளைகளினதும் வாழ்க்கையே இந்த தொழில் விடயத்தில்தான் தங்கியிருக்கின்றது என்பதே இங்கு மிக முக்கியமானதாகும். ஆனால், பிரதியமைச்சர் இன்னும் தன்மை மக்கள் சேவகன் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

நமது அரசியலில் இப்படி நிறையவே ‘மக்கள் சேவகர்கள்’ இருக்கின்றனர். வெறும் சிலுசிலுப்புகளுக்காகவே பலகாரம் சுடுவதாகக் காட்டிக்கொள்றும் ரகத்தவர் இவர்கள்! இவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக, நமது எழுத்துக்களால் அவர்களுக்கு முதுகு சொறிந்து விட முடியாது. அதற்கு ஒரு அகப்பைக் கணையே போதுமானது!

மக்களின் பிரதிநிதிகளாகச் சொல்லிக்கொள்ளும் இவ்வாறான அமைச்சர்கள்இ பிரதியமைச்சர்களைப் பார்த்துப் பார்த்து அரசியலில் அலுத்துப்போய் விட்டது. இவ்வாறானவர்களுக்கு முதுகு சொறிவதை விடவூம், தன்னால் முடிந்தவரை மக்கள் நலன்சார்ந்து சிந்தித்துச் செயற்படுகின்ற வளரும் அரசியல் முகங்களைத் தட்டிக்கொடுக்கலாம், தப்பில்லை! அந்தவகையில் இவ்விடத்தில் நாம் தட்டிக்கொடுக்க முற்படும் வளர்ந்துவரும் அரசியல் பிரமுகத்தின் பெயர் எஸ்.எம். சபீஸ்! துடிப்பான இளைஞர். அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர். உழைப்பதற்காகவே அரசியலுக்குள் நுழையூம் பலருக்கு மத்தியில், தனது உழைப்பின் கணிசமானதொரு பகுதியை ஏழை மக்களுக்காகச் செலவூ செய்து வருகின்றார் இவர்! தனிமனிதனாக பல சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவரின் செயற்பாடுகள் தட்டிக் கொடுக்கப்படவேண்டியன! 

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து ,தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பலருக்கு கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக சபீஸ் பல்வேறு உதவிகளைச் செய்து ஊக்குவிப்புகளையூம் வழங்குகின்றார். குறிப்பாக ஒவ்வொரு மாணவரின் பெயரிலும் வங்கிக் கணக்கினை ஆரம்பித்து அதில் குறிப்பிட்ட தொகையொன்றை வைப்புச் செய்து வழங்கி வருகின்றார். மட்டுமன்றி ஏழை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலைப் பொருட்களையூம் மிக நீண்ட காலமாக இவர் கொடுத்துதவி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் அவரின் சொந்தப்பணத்திலிருந்து செய்யப்படும் சேவைகள் என்பதுதான் இங்குள்ள முக்கிய செய்தியாகும்!

அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பெருந்தொகை வாக்குகளைப் பெற்றதன் மூலன் அச்சபையின் உதவித் தவிசாளராக தேர்வூ செய்யப்பட்ட சபீஸ், அத்தேர்தலுக்கு வெகுசில மாதங்களுக்கு முன்னர்தான் அரசியலுக்குள் நுழைந்தார். அமைச்சர் அதாஉல்லாவால் இனங்காணப்பட்ட பொறுப்பு மிக்க அரசியல் இளைஞராக இவரைக் குறிப்பிட முடியூம்! 

பாடசாலைகள் மற்றும் மதரஸாக்கள் போன்றவைகளுக்கு குடிநீர் இணைப்புகளை தனிப்பட்ட பணத்திலிருந்து பெற்றுக் கொடுத்து வருவதோடுஇ சபீஸ் – மின்சார வசதியற்ற ஏழைகள் பலருக்கு தனது செலவில் புதிய இணைப்புகளையூம் பெற்றுக் கொடுத்துள்ளார். இதில் குறித்துச்சொல்லத்தக்க விடயம் என்னவென்றால், அரசாங்க மற்றும் பொதுப்பணத்திலிருந்து மக்களுக்கு சில சிறிய சேவைகளைச் செய்யூம்போது கூடஇ அதை ஊருக்கெல்லாம் பறைசாற்றி, விழாவெடுத்து விட்டே செய்யூம்

நமது அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஏழை மக்களுக்கான தனது உதவிகளை சபீஸ், மிக சாதாரணமாகச் செய்து வருவது அழகாகும்! இன்னும் சொன்னால், நமது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரே, அரசியலில் வளர்ந்துவரும் இவ்வாறான இளைஞர்களிடம் படித்துக்கொள்ள இருக்கின்றன நிறைய விடயங்கள்!

காதும் காதும் வைத்தாற்போல் நிகழும் மேற்சொன்ன தர்மங்களைப் போல், ஆங்காங்கே சில இடங்களில் கையாடல்களும் நிகழ்ந்துதான் வருகின்றன என்று நாம் கடந்த வாரக்கட்டுரையில் கூறியிருந்தோம். மட்டுமன்றி அட்டாளைச்சேனைப் பிரதேசசபையில் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் பணத்தில் கையாடல் நிகழ்ந்துள்ளதாக அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கூறியிருந்ததும் அக்கட்டுரையில் விபரிக்கப்பட்டிருந்தது. குறித்த கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த அந்தக் குற்றச்சாட்டுக்கு ஏதாவது மறுப்புகள் அல்லது எதிர்வினைகள் இருந்தால் அவைகுறித்து ஞாயிறு தினக்குரலுக்கு தெரிவிக்குமாறு நாம் கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போல் எழுதியூமிருந்தோம். ஆயினும், அட்டாளைச்சேனைப் பிரதேசசபையின் ஆட்சியாளர்களின் நெருக்கத்துக்குரியவர்கள் சிலரும், கொந்தாராத்துக்களுக்காக அலைந்து கொண்டிருக்கும் சில வெற்றுச் சூனியங்களும் குறித்த கட்டுரை தொடர்பில் நம்முடன் பல்வேறு தடவைகள் தர்க்கிக்க முயன்றும், நாம் அதனை நாகரீகம் கருதி தவிர்த்து விட்டோம்! 

ஆக, இத்தால் நாம் மேலும் ஒருதடவை கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில்@ எழுத்துக்களையூம், கருத்துக்களையூம் அதே பாணியில் முகம்கொள்வதை விடுத்து, சும்மா சத்தமிட்டு, குழப்படி செய்து திரிவதில் ஆகப்போகும் நல்லவை எதுவூமேயில்லை. குறித்த பணத்தொகையில் கையாடல் நிகழ்ந்ததை ஆட்சேபித்துத் தர்க்கம் செய்ய முயன்ற எவருமே, முறையான ரீதியில் அதை நிரூபிப்பதற்குரிய எவ்வித எத்தனங்களையூம் இக்கட்டுரையை எழுதும்வரை மேற்கொள்ளவேயில்லை என்பது கவலை தரும் விடயமாகும். மேலும், அந்தக் குற்றச்சாட்டினை ஒழுங்கு முறையில்இ நீதியான ரீதியில் மறுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், இவ்வாறு ‘கொல்லைப்புறமாக’ வந்து அணுகும் அத்தரப்பாரின் நடவடிக்கைகளைக் காணும் போது, பணக்கையாடல் பற்றிய சந்தேகம் இன்னும் வலுவடைகின்றது என்கின்றனர் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் படித்த மக்கள் பலர்!

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட அட்டாளைச்சேனைப் பிரதேசசபையில் இடம்பெற்றதாகச் சந்தேகம் வெளியிடப்படும் இப்பணக்கையாடல் விடயம் குறித்து, மு.கா. எவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகிறது என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நாம் கேட்டோம். அதற்கு ஹக்கீம் பதிலளிக்கையில்@ ”நீர்க்குழாய்களைப் பொருத்தும் நடவடிக்கையின் போது, தாம் தோண்டீய வீதிகளை மீண்டும் செப்பனிடுவதற்காகவே தேசிய நீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையானது, குறித்த பணத்தொகையினை அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு வழங்கியூள்ளது. ஆனால், இப்பணத்தொகை அப்பிரதேச சபைக்குட்ட ஊர்களான பாலமுனை, ஒலுவில் போன்ற பகுதிகளுக்கு உரிய முறையில் பங்கிடப்படவில்லை எனும் குற்றச்சாட்டொன்றும் கூறப்பட்டு வருகிறது. இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளருடன் பேசியபோது, அந்தப் பணத்தில் பெருந்தொகையை தான் இன்னும் செலவிடவில்லை என்றும், வீதிகளைச் சீர் செய்த பின்னர் மீதமாகும் பணத்துடன் இன்னும் ஒரு தொகையைச் சேர்த்து, தாம் சில அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடவூள்ளதாகவூம் அவர் உத்தரவாதம் வழங்கியூள்ளார். ஆயினும், மேற்படி பணவிடயம் தொடர்பான குற்றச்சாட்டினை மு.காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது” என்றார்.

இது இவ்வாறிருக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்களுக்கு வழங்குமாறு கூறி, பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கும் உதவிப் பொருட்களைஇ பல சபைகளின் ஆட்சியாளர்கள் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வருவதாகவூம் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மண்வெட்டி, சவள் போன்ற பொருட்களை அரச சார்பற்ற நிறுவனமொன்று ஒதுக்கீடு செய்திருந்தது. அந்தவகையில் அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களுக்கான பொருட்களை அப்பகுதி பிரதேச சபையிடம் ஒப்படைத்த அந்நிறுவனம் அப்பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்குமாறு கூறியிருந்ததாம். ஆனால், வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் அப்பொருட்களை மக்களுக்கு வழங்காமல், கடந்த சுதந்திர தினத்தன்று அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் ஆட்சியாளர்கள் தமது ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கி வைத்ததாக மக்கள் விசனப்படுகின்றனர்.

மேற்படி விடயத்திலுள்ள கோமாளித்தனம் என்னவென்றால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்நிலப்பகுதி மக்களாவர். ஆனால், உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டவர்களில் அதிகமானோரோஇ மேட்டுநிலப் பகுதி மக்கள் என்பதாகும் என்கிறார் நமது ஊடக நண்பரொருவர்! 

ஆக, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் இவ்வாறு மக்களுக்காக வழங்கும் பல சேவைகள், இவ்வாறு அரசியலாக்கப்படுவதால், தொண்டு நிறுவனங்கள் இவ்விடயம் குறித்து எதிர்காலங்களில் சற்று ஜாக்கி;ரதையாக நடந்து கொள்தல் உசிதமாகும். மற்றவர்களின் பொருளைக் கொண்டு இவ்வாறு சுய லாபம் தேடும் கயமைத்தன நடவடிக்கையை, கிழக்கு மாகாண முஸ்லிம் கிராமிய வழக்கில் ”ஊரான் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுதல்” என்பார்கள்! அதாவது ஒருவன் தனது இறந்து போன தாயின் பெயரில் அன்னதானச் சடங்கொன்றை செய்வதற்காக, மாற்றானின் கோழியைக் களவாக எடுத்துக் கறிசமைத்துக் கொடுப்பது என்பதே மேற்சொன்ன கிராமியச் சொற்றொடருக்கான அர்த்தமாகும்!

தாயின் பெயரில் அன்னதானம் செய்தாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு சிலர் கொடுத்துக் கொண்டிருப்பதோ தமது ‘சின்ன வீடு’களுக்கு என்பதுதான் கொடுமையாகும்!!


(இந்தக் கட்டுரையை 17 பெப்ரவரி 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s