காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பன்மைகளை ஆளுகின்ற ஒருமை: அம்பாரை மாவட்டத்தின் வரலாற்று விசித்திரம்! 15 பிப்ரவரி 2008

Filed under: அரசியல் — Puthithu @ 1:11 முப

color-dot.gifமப்றூக்

நூறு, நூற்றைம்பது பேரை நம்பியார் தலைமையில் இரண்டு மூன்று வில்லன்கள் கட்டிவைத்து சாட்டையால் அடிப்பதையூம், அவர்களின் கட்டளைப்படி செயற்பட வைப்பதையூம் சினமாக்களில் (குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில்) நாம் பார்த்திருக்கின்றௌம். ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் கற்பனைத்தனம் என்று பின்னாட்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் நமது சினமாத்தனங்கள் சிலவேளை நடைமுறை வாழ்க்கையில் நிகழ்கின்றபோது அவைகளை அதிர்ச்சியாக அல்லது விசித்திரமாகவே நாம் காண்கின்றௌம். நாம் மேற்சொன்னது போன்ற நம்பியார் ரக விசித்திரங்களில் ஒன்று அம்மாரை மாவட்டத்தின் வரலாறு முதல் நிகழ்ந்து வந்தாலும், இன்னும் அது ஒரு விதித்திரம் என்பது பலருக்குத் தெரியாது. சரி, அப்படி என்னதான் விசித்திரம் அங்கு நடக்கிறது? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா? அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு வாழும் மொத்தச் சனத்தொகையில் 44.0 வீதமானோர் முஸ்லிம்களாவர். சிங்களவர்கள் 37.5 வீதம், இலங்கைத் தமிழர்கள் 18.3 வீதமாகும். இந்தவகையில் இனரீதியிலான அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்வோர் முஸ்லிம் மக்களாவர். இதை இன்னும் பரந்த பார்வையோடு கூறினால் முஸ்லிம்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்த நிலையில் இம்மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசுவோரின் வீதாசாரம் 62.3 வீதமாகும். ஆனால், அம்பாரை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையோ 37.5 வீதத்தைக் கொண்ட சிங்களவர்களின் கையிலேயே இருந்து வருகிறது என்பது விசித்திரமல்லாமல் வேறென்ன? மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு தனி மாவட்டமாகப் பிரித்தெடுக்கப்பட்ட அம்பாரையை நிருவகிக்கும் கச்சேரி அல்லது மாவட்ட செயலகத்தின் தலைமைப் பதவியான மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது மாவட்ட செயலாளர் பதவிக்கு இதுவரை சிங்களவர்களே தொடர்ந்தும் அமர்த்தப்பட்டு வருகின்றமையானது பௌத்த பேரினவாதத்தின் மிகமோசமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதை இன்னும் விளக்கமாகச்; சொன்னால், சுமார் 3 லட்சத்து 81 ஆயிரம் தமிழ்பேசும் மக்களை, வெறும் 2 லட்சத்து 29 ஆயிரம் மக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மிக நீண்ட காலமாக நிருவகித்து வருகின்றனர். ஆகஇ இதற்கும் அந்த நம்பியார் சமாச்சாரத்துக்கும் பெரிதாக வித்தியாசமொன்றும் இருப்பதாக நமக்குப் படவேயில்லை! ஆனால், இந்த விசித்திரத்துக்கெதிராக முஸ்லிம், தமிழ் அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதிலும் இதுவரை ஈடுபடாமல் வெறும் கூச்சல்இ குழப்படி அரசியலில் ஈடுபட்டு வருகின்றமையானது சமூக சிரத்தையற்ற செயலாகுமென்று கோபத்தோடு கூறுகிறார் அம்மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களில் ஒருவர்! அம்பாரை மாவட்டத்தின் நிருவாகத் தலைமைப் பதவியானது சிங்களவர்களுக்கே தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, அதன் நிருவாகத் தலைமையகமான கச்சேரியூம், நூறு வீதம் சிங்கவர்கள் வாழும் அம்பாரை நகரில் அமைக்கப்பட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். மட்டுமன்றி இக்கச்சேரியில் கடமையாற்றும் மிக அதிகமான உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியை மட்டுமே பேசத் தெரிந்தவர்களாவர். இதனால் அங்கு தமது அலுவல்களை நிறைவேற்றச் செல்லும் தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பொதுமக்கள் பலர் தொடர்பாடல் ரீதியான பல சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ஒரு மாவட்டத்தின் பெரும்பான்மை இனமக்கள் சமூகம் எதுவோஇ அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களே குறித்த மாவட்ட கச்சேரிகளில் செயலாளர்களாகவூம் இருந்து வருகின்றனர். இதுவே சாதாரண நடைமுறையாகும். உதாரணமாக யாழ்ப்பாணம்இ மட்டக்களப்பு, வவூனியா போன்ற தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களின் செயலாளர்கள் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், முஸ்லிம்களை மிக அதிகமாகக் கொண்ட அம்பாரை மாவட்டத்தின் செயலாளராக ஏன் ஒரு முஸ்லிம் நியமிக்கப்படக் கூடாது என்று கேட்கும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த புத்தி ஜீவிகளின் கேள்வியில் நியாயம் நூறு வீதம் நிறைந்தே கிடக்கிறது. அம்பாரை மாவட்டக் கச்சேரியின் செயலாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பதற்கு சிங்களப் பேரினவாதம் நிச்சயமாக உடன்படாது! அப்படியாயின் இதற்கான மாற்றுவழி தமிழ்பேசும் மக்களுக்கான பிரத்தியேக மாவட்டமொன்றை பெற்றுக்கொள்வதேயாகும். இவ்வாறானதொரு மாவட்டத்தை பெறவேண்டும்இ பெற்றுத் தருவோம் என்கின்ற கோசங்களை முன்வைத்தே சில காலமாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், ஆனபலன்தான் இதுவரை ஒன்றுமேயில்லை! சுனாமி அழிவூ நாட்டில் ஏற்பட்டிருந்த காலத்தில்இ அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன்போது இம்மாவட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் கரையோரப் பகுதிக்கென எதிர்காலத்தில் பிரத்தியேக மாவட்ட செயலகமொன்று உருவாக்கித் தரப்படும் என்றும்இ அச்செயலகத்துக்கான மாவட்ட அதிபராக முஸ்லிம் ஒருவரை தாம் நியமிப்போம் என்றும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைச்சர்கள் வாக்குறுதியளித்திருந்தனர். நமது அமைச்சர்கள் நட்டுவிட்டுப் போகும் பல கற்கள், கட்டடமாகாமலேயே ஆண்டாண்டு காலமாக புற்புதர்களுக்கிடையில் மறைந்து சிதைந்து கிடப்பதுபோல்இ கரையோர மாவட்ட செயலகம் குறித்த வாக்குறுதிகளின் நிலையூம் ஆயிற்று! தமிழ்பேசும் மக்களுக்கான பிரத்தியேக மாவட்டமொன்று இவ்வாறு உருவாக்கப்படுமானால், அதன்போது அம்மாவட்டத்தின் நிலப்பரப்பானது இன அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என்கின்றனர் இம்மாவட்டத்தின் அரசறிவியலாளர்கள். காரணம், இம்மாவட்டத்தின் மிகப்பெரும் பகுதி நிலப்பரப்பானது அம்பாரை மாவட்டத்தின் சிறுபான்மையினமான சிங்களவர்களிடம் சிக்கிக்கிடக்கின்றது. கள்ளக்குடியேற்றம், அபகரிப்பு நடவடிக்கை போன்றவைகளால் சிங்களப் பேரினவாதம் இவ்வாறு பெரும் நிலப்பரப்பை அம்பாரை மாவட்டதில் தனதுடமையாக்கிற்று! இதேவேளை இங்கு கசப்புத் தரும் உண்மையொன்றை எழுதவேண்டியூள்ளது. மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில், அதற்கு எதிராக தமிழர் தரப்பிலிருந்து சில குரல்கள் ஒலித்தமையையூம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியூள்ளது. அவ்வாறானதொரு நியமனமொன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படுமானால்இ தமிழர்களுக்கும் அதேபோன்று கொடுக்க வேண்டும் என்று அக்குரல்கள் கோசமெழுப்பின. அது, சிங்களப் பேரினவாதச் சித்தாந்தவாதிகளைக் குஷி ஏற்படுத்தம் விடயமாக மாறியது! தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இருந்து வரும் முரண்பாடுகளும், சந்தேகங்களுமே இவ்வாறான நிகழ்வூகளுக்குக் காரணமாகும். தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் இவ்வாறு எதிரெதிர் பாசறைகளில் இருந்து கொண்டு இயங்கும்போது, நிச்சயமாக இவர்களால்; அம்பாரை மாவட்டத்திலுள்ள சிங்களப் பேரினவாதத்தின் நிருவாகப் பிடிக்குள் இருந்து மீளவே முடியாமல் போய்விடும். இதுதான் யதார்த்தம். ஆகஇ இரண்டு சமூகங்களும் ஒன்று பட்டுச் செயற்படும்போதே தமிழ்பேசும் மக்களுக்கான மாவட்ட செயலகமொன்று சாத்தியமாகலாம்! இவ்வாறான மாவட்ட செயலகத்தின் தேவை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப்பட்டு வந்தாலும் கூடஇ இப்போது இது அவசரத்தேவையாகி விட்டது. காரணம், மாவட்டத்தின் தலைமை நிருவாகிகள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்வர்களாக இருப்பதால்இ இவர்கள் பௌத்த பேரினவாதத்தின் கயமைகளுக்கு உடன்பட வேண்டிய அல்லது பலியாக வேண்டியதொரு நிலையே இங்கு உள்ளது. இதைப் பயன்படுத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்ற இன்றைய பௌத்தக் குறுஞ்சிந்தனைவாத தலைவர்கள் இம்மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை நடவடிக்கைகளிலும் இடையூறுகளின்றி ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இங்கு தமிழ்பேசும் மக்களுக்கான தனி மாவட்ட செயலகமொன்று இருக்குமாயின் இந்த சம்பிக்க ரணவக்க ரகத்தாரின் பாச்சாவெல்லாம் பலிக்காமலேயே போய்விடும். ஆக, இவ்விடயம் குறித்து முஸ்லிம், தமிழ் அரசியல் தலைவர்கள் இனியாவது கொஞ்சம் சொரணையூடன் செயற்பட வேண்டும் என்று நமக்கு இக்கட்டுரை தொடர்பில் புள்ளிவிபரங்களை வழங்கிய ஒரு பிரதேச செயலாளர் கூறினார். சிலவேளை இக்கட்டுரையைப் படிக்கும் அமைச்சர்கள், அப்படிக் கூறிய பிரதேச செயலாளர் யாரடா என்று கோபங் கொள்ளவூம், கொதித்தெழவூம் கூடும். முடிந்தால் அந்த செயலாளரை தண்ணியில்லாக் காட்டுக்கு இடமாற்றம் செய்து விட்டு அதைத் தமது சமத்துக்களில் ஒன்றாகக் கூறி மகிழவூம் கூடும். நமது அமைச்சர்கள் பலருக்கு இதைத் தவிர வேறுறெதுவூம் தெரியாது என்பதே நமக்கான அவமானமாகும்!


(இந்தக் கட்டுரையை 10 பெப்ரவரி 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

 

பின்னூட்டமொன்றை இடுக