காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முஸ்லிம் ஜனநாயக அரசியலும் உணர்சிவசப்படுத்தும் வெற்றுச் சொல்லாடல்களும்! 2 பிப்ரவரி 2008

Filed under: அரசியல் — Mabrook @ 12:41 முப

 color-dot.gifமப்றூக்

ழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைத் தொகுதியொன்றை அண்மையில் படிக்கக் கிடைத்தது. அதில் ‘ராஜதுரோகம்’ எனும் சொற்பதத்தை இன்னும் ஏன் நமது குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் பொருத்தமற்ற வகையில் பயன்படுத்துகிறாரக்களோ தெரியவில்லை என்று அவர் அலுத்துக் கொள்கிறார். ராஜாவே இல்லாத காலத்தில் இந்தச் சொற்களின் பயன்பாட்டுத் தேவை குறித்து அவர் கேள்வியூம் எழுப்புகின்றார். இதைப்படித்தபோது, நமது முஸ்லிம் அரசியலில் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம் ஜனநாயக அரசியலில் இவ்வாறு பொருத்தமற்று, பயன்பாட்டுக்குள்ளாகிவரும் வெற்றுச் சொற்பதங்கள் சில நினைவூக்கு வந்துபோயின!

நமது சில அரசியல் கட்சிகள் குறிப்பாக மு.காங்கிரஸார் தங்களுடைய கட்சியின் தீவிர தொண்டர்களை ‘போராளி’ எனும் சொற்பதத்தால் அழைத்து வருகின்றமை ராமகிருஷ்ணன் கூறியது போன்ற, பொருத்தமற்ற சொல்லாடல் முறைமைக்கு ஓர் நல்ல உதாரணமாகும். உண்மையாகவே போராளி எனும்
சொல் உட்பட மு.காங்கிரஸார் பயன்படுத்தும் விடுதலைப் பாதை, விடுதலைப் போராட்டம், இயக்கம் மற்றும் போராட்டம் போன்ற ஏனைய பல சொற்களை புழக்கத்துக்குள்ளாக்கி, அவைகளை மக்கள் மயப்படுத்திய பெருமை தமிழ் ஆயூத இயக்கங்களுக்கே உரித்தானதாகும்.

போர் என்பது இரண்டு நாடுகளுக்கிடையில் இடம்பெறுவது! அதில் ஈடுபடுகின்றவர்களை ‘போராளிகள’ என்று அழைக்கலாம். அர்த்தப் பிழையில்லை. இந்த வரைவிலக்கணத்தின்படிதான் தமிழ் ஆயூத இயக்கங்கள் தமது உறுப்பினர்களைப் போராளிகள் என அழைத்தனர், அழைக்கின்றனர். ஈழம் என்பதும் சிறிலங்கா என்பதும் இரண்டு தேசங்கள் எனும் அவர்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் அரசாங்கப் படைக்கும்,  இயக்கத்தினருக்கும் இடையிலான ஆயூத முரண்பாட்டினை அவர்கள் ‘போர்’ என்று அழைக்கலாயினர். ஆனால், இலங்கையின் அரசியல் யாப்புக்கமைய உருவாக்கப்பட்ட ஜனநாயக அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், அதன் தீவிர தொண்டர்களை ஏன் ‘போராளிகள்’ என்று அழைத்து வருகின்றது எனத் தெரியவேயில்லை. அர்த்தங்களற்ற இந்த வெற்றுச் சொல்லாடலினூடாக, அக்கட்சியின் அதிதீவிரம் கொண்ட தொண்டர்களை உசுப்பேற்றி, உணர்ச்சிவசப்படுத்தி கட்சியிலுள்ள சிலர் தமக்கான அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்ள முற்படுவதைத் தவிர, இதற்கு வேறெதுவூம் காரணங்கள் இருக்கவே முடியாது என்கிறார் புத்திஜீவி ஒருவர்.

மேலும்இ  ஆயூதம் ஏந்திச் சண்டையிடுதல் மற்றும் அதன் வன்முறை வழிகள் குறித்து இதுவரை அனுபவ ரீதியான புரிதல்களேயில்லாத இவ்வாறான தொண்டர்களை ‘போராளிகள்’ என்று அழைப்பது வெறும் பத்தாம்பசலித்தனம் என்றும், இப்பத உபயோகத்தினூடாக ஏற்படப்போகும் எதிர்கால ஆபத்துக்கள் குறித்தும் அந்தப் புத்திஜீவி வருத்தம் தெரிவிக்கின்றார்.

தமிழ் ஆயூத இயக்கங்கள் முன்னர் மக்களிடம் பெற்றிருந்த வசீகரத்தை தாமும் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அவ்வியக்கங்களின் புழக்கத்திலிருந்த சொற்களை மு.கா பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரைத் தொடர்கிறது. ஆனால், காங்கிரஸார் இவ்வாறான சொற்களைப் பயன்படுத்தும் போது, அவைகளை எதுவூமற்ற வெறும் சூனியச் சொற்களாகவே நம்மால் இனங் காணமுடிகிறது!

இந்த ப.ப.தனச் சொல்லாடலை (ப.ப.தனம்: பத்தாம் பசலித்தனம்) மு.கா.விலிருந்து பிரிந்துவந்து அரசியல் செய்யூம் ஒரு சிலரும் பழக்கதோசத்தில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான் இங்கு இரட்டை வேடிக்கை! பாவம், இந்தச் சொற்களின் பின்னால் மறைந்து நிற்கும் நயவஞ்சக அரசியலின் அர்த்தம் புரியாமல், நடந்து, ஆபத்துக்களை விலைகொடுத்தும் வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர்.

உதாரணமாக, அம்பாரை மாவட்டத்தில் கடந்த முறை இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது, இவ்வாறு உணர்ச்சிக் கொப்பில் ஏற்றப்பட்ட பல இளைஞர்கள் சிறைவாசம் சென்றதையூம், அவர்களின் அரசாங்கத் தொழிலைக் கூட,  நமக்குத் தெரிந்த சில நண்பர்கள் இன்னும் அந்தத் தேர்தல்கால வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படாமல் விசாரணைஇ விசாரணை என்று இரண்டு மூன்று வருடங்களாக அலைக்கழிந்து வருகின்றார்கள்.

ஆக, ஜனநாயக அரசியல் அரங்கில் பயன்படுத்தப்பட்டுவரும் இவ்வாறான ஆபத்துக்குரிய சொல்லாடல்கள் குறித்து நமது மக்கள்தான் மிக அவதானமாக இருத்தல் வேண்டும்!

தலைவர்கள் மையங்கொள்ளும் மட்டக்களப்பு தேர்தல் களம்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்படாமல் எஞ்சியிருந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்ட கையோடு அங்கு வன்முறைகளும் ஆரம்பித்தாயிற்று! குறிப்பாக நமது முஸ்லிம் அரசியல் அரங்கு அங்கு அதி உட்சபட்ச சூட்டிலிருக்கிறது. இப்போதைக்கு பற்றியெரியாத குறை மட்டும்தான்! போகிற போக்கைப் பார்த்தால், சொல்கின்றன.

அங்கு இடம்பெற்ற கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது, கோரளைப்பற்று மேற்குப் பிரதேச சபையினை சற்றும் எதிர்பாராமல் அமைச்சர் அமீரலியின் தரப்பு கைப்பற்றிக் கொள்ள மு.காங்கிரசும் அதன் தலைமையூம் ஆடித்தான் போயிற்று. ஏனெனில், கடந்த காலங்களில் அது காங்கிரசின் கைக்குள்ளிருந்த சபையாகும்! மட்டுமன்றி வேறுசில சபைகளில் எதிர்த்தரப்பினர் எதிர்பார்த்திராதளவூ உறுப்பினர்களையூம் அமீரலி பெற்றும் கொண்டார். இதன் காரணமாக அப்பகுதி மு.கா. ‘தலை’கள் பல, தலைவர் ஹக்கீமிடம் தலைகுனிய வேண்டியேற்பட்டதோடு, தலைவரின் கோபப் பார்வைக்கும் உள்ளாகின. காரணம், அந்தத் தேர்தலை அமீரலியூடனான கௌரப் போரொன்றாக நினைத்தே தலைவர் ரஊப் ஹக்கீம் செயற்பட்டார் என்கிறார் உள்ளிருக்கும் ஒருவர்.

எனவே, இம்முறை இடம்பெறவூள்ள தேர்தலில் எப்பாடுபட்டாவது அமீரலியின் தரப்புக்கு வெற்றி கிடைக்காமல் செய்ய வேண்டுமென்பதில், மு.கா. படுதீவிரமாக களமிறங்கியூள்ளதாக அக்கட்சியின் காத்தான்குடிப் பிரதேச முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடம் நட்போடு பேசுகையில் தெரிவித்தார். மட்டுமன்றி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது வேட்பாளர் பட்டியலில் தமது பெயரும் இடம்பெற வேண்டுமெனும் தவிப்பிலுள்ள ஒரு சிலர், அமீரலி தரப்பைத் தோற்கடித்து அதனூடாக தலைவரின் கடைக்கண் பார்வையைப் பெறலாம் எனும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த நட்புக்குரிய நபர் மேலும் கூறினார்.

இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் ஓட்டமாவடிப் பிரதேசத்துக்குச் சென்றிருந்த மு.கா. பிரமுகரும் முன்னாள் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாவின் வாகனம், ஒரு சிலரால்  தாக்கப்பட்டிருந்தது. இது அமைச்சர் அமீரலியின் ஆசிர்வாதத்தோடு நிகழ்த்தப்பட்டதொரு வன்முறை நடவடிக்கை என்கிறது மு.கா. தரப்பு. ஆனால்,  “குறித்த சம்பவத்துக்கு மு.கா. தரப்பு கூறுவதுபோல எந்தவிதமான அரசியல் பின்னணியூம் கிடையாது” என்று மறுக்கும் அமைச்சர் அமீரலி தனக்குக்  கிடைத்த தகவல்களின் படி, ஹிஸ்புல்லாவின் அறிக்கையொன்று குறித்து கோபப்பட்ட சிலரின் நடவடிக்கையொன்றாகத்தான் அது இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இது இவ்வாறிருக்க, நடைபெறப்போவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் என்ற போதும், கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர், அரசாங்கம் அங்கு நடத்தும் முதல் தேர்தல் என்பதால்;  இதில் தனதும், தனக்குப் பிடித்தமானவர்களினதும் வெற்றிகளைக் குறிவைத்தே அரச தரப்பும் செயற்படப் போகிறது. ஆக, அமைச்சர் அமீரலி தனது குழுவினை அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் களமிறக்கவூள்ளதால், மட்டக்களப்பு மாவட்டதில் அமைச்சர்கள் படையொன்றும் மையம் கொள்ளப்போகிறது. குறிப்பாக, மு.கா. தலைவர் ஹக்கீமின் வைரிகளான அதாஉல்லா, றிசாத் பதியூத்தீன், நஜீப் ஏ மஜீத் உள்ளிட்ட பலர் அமீரலியோடு அங்கு கைகோர்த்து இயங்குவார்கள். இந்த அசுர பலத்தை மு.கா. எவ்வாறு முகம் கொள்ளப்போகிறது என்பதே இங்கு கேள்விக்குறியாகும்.

சுமார் 24 ஆயிரம் வாக்குகள் உள்ள அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தல் கடந்த முறை நடைபெற்ற போது, மு.காங்கிரசை வெறும் 900 வாக்குகளை மட்டுமே பெறுமளவூக்கு அங்கு பலவீனப்படுத்தியவர் அமைச்சர் அதாஉல்லா! மட்டுமன்றி அப்பிரதேச சபையை மிகக் கணிசமான அளவூ உறுப்பினர்களால் அவர் வெற்றியூம் கொண்டிருந்தார். எனவே, அதாஉல்லாவின் அந்த அனுபவங்களும் அமீரலிக்கு இத்தேர்தலின் போது பெரிதும் உதவலாம்.

இவைகளையெல்லாம் கூறி;  “இத்தேர்தலில் இவ்வாறான பாரிய படைகளையூம்” தடைகளையூம் எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொள்ளப் போகிறது” என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரிடம் கேட்டபோது, மக்கள் பலம் தமது தரப்புக்கே இருப்பதாகவூம், அப்பலம் கொண்டு தாம் வெற்றியடையப் போவது உறுதி என்றும் கோரஸாகக் கூறினர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் அமீரலி செய்து வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளே – இந்தத் தேர்தலில், அவரின் தரப்பு வெற்றிபெறப் போதுமானதாகும் என்கிறார் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் அப்பிரதேச பொறுப்பாளர் ஒருவர்!

முஸ்லிம் அரசியல் தரப்பினர் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியூள்ள இத்தேர்தல் களத்திலுள்ள சுவாரசியமான விடயம் என்னவென்றால், செலுத்துமளவூ வெற்றி கொள்ள முடியாது என்பதேயாகும். அனைத்துச் சபைகளும் தமிழ் மக்களின் ஆட்சிக்குட்பட்டதாகும். ஆக, முஸ்லிம் மக்கள் தரப்பில் சில உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு தேர்தலை முகம்கொள்வதற்காகத்தான் இவ்வாறானதொரு யூத்த காண்டத்தை உருவாக்கிஇ அதில் நமது தலைவர்கள் ஆக்ரோசத்துடன் முட்டி மோதக் குதித்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது, வெட்கப்படாமலிருக்க முடியவில்லை!

தமிழர் தரப்பின் ஆளுகைக்குள்தான் குறிப்பிட்ட அனைத்து சபைகளும் வரப்போகின்றன என்று நூறுவீதம் அறிந்த இவ்வாறான தேர்தலொன்றில், முஸ்லிம் தரப்புக்கள் அனைத்தும் இணைந்து போட்டியிடும் யோசனையொன்றிலாவது ஏன் நீங்கள் ஈடுபடவில்லை என அங்குள்ள சில அரசியல்வாதிகளிடம் கேட்டால்; “அவ்வாறானதொரு விடயத்தைப் பற்றிச் சிந்திக்க கூட, முஸ்லிம் காங்கிரஸார் இடம் வைக்கவில்லையே… தாம் தனித்தே போட்டியிடவூள்ளதாக அவர்கள்தான் ஊருக்கு முன்னரே அறிவித்து விட்டார்களே” என்கின்றனர்.

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அரங்கில்  வயிறு வலிக்கச் சிரிக்குமளவூ நகைச்சுவையொன்றை அண்மையில் அறிக்கையாக விட்டிருக்கின்றார் ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. அதாகப்பட்டது, தமது கட்சியானது குறிப்பிட்ட இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதே அவர்; விட்டிருந்த அந்த மாபெரும் நகைச்சுவை அறிக்கையாகும். மட்டக்களப்பில் தனது பாராளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானா இருந்தபோதே குற்றுயிரும் குலையூயிருமாகக் கிடந்த ஐ.தே.கட்சியானது, இப்போது அங்கு மரணித்தே விட்டது. இன்னும் சொன்னால், அங்கு தனக்கான வேட்பாளர்களைத் தேடிப்பிடிப்பதென்பதே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைபோகும் காரியமாகும். நிலைவரம் இப்படியிருக்க இந்தத் தேர்தலில் தமது கட்சி போட்டியிட மாட்டாது என்று அவர் கூறியருப்பது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது!

“திஸ்ஸ அத்த நாயக்க…!  நீங்க ஒன்றும் காமடி, கீமடி விடலயே?”


இந்தக் கட்டுரையை 27 ஜனவரி 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s