மப்றூக்
சிறுவனொருவன் முன்னிலையில் அவனுடைய தந்தை கட்டி வைத்துக் கொலை செய்யப்படுவார். வில்லன்களால் தாய் பாலியல் வன்புணர்வூ செய்யப்படுவாள். இரண்டு மொட்டைத்தலைக் குண்டர்கள், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை அமுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். சிறுவனும் தாய் புணரப்படுவதையூம், தந்தை சாகடிக்கப்படுவதையூம் எதுவூம் செய்ய முடியாத நிலையில் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பான். 1980 களில் வெளிவந்த அனேக தமிழ் சினிமாக்களின் கதைகள் இவ்வாறுதான் இருக்கும். (பின்னர் அந்தச் சிறுவன், வளர்ந்து பெரியவனாகி வில்லன்களைத் தேடித் தேடிப் பழி வாங்குவது வேறு கதை). இப்படி, அந்தச் சினிமாச் சிறுவனின் கையாலாகாத நிலைதான் இன்றின் அரசியலில் நமது முஸ்லிம் பா.உ.களின் நிலைமையாகும்!
ஒரேயொரு மாற்றம்! படத்தில் வரும் தாய், தந்தையருக்குப் பதிலாக இங்கு பறிக்கப்படுவன முஸ்லிம் சமூகத்தின் நிலங்களும், நிம்மதிகளும்!
ஒரு காலத்தில் ஒற்றுமைக்கென்று உதாரணமாகப் பேசப்பட்டவர்கள் நமது முஸ்லிம் அரசியல்வாதிகள். பல கட்சிகளில் பாராளுமன்றம் சென்றிருந்தாலும், பொதுப் பிரச்சினை என்று வரும்போது ஒன்று சேர்ந்து விடுவார்கள். இது குறித்து அப்போதெல்லாம் சகோதர இனங்களைச் சேந்த ஊடகவியலாளர்களே வியந்து பேசக் கேட்டதுண்டு. ஆனால், அந்த வியப்பு இன்று கேலியாக மாறியூள்ளது.
பிரிந்து போய்க்கிடக்கும் நமது முஸ்லிம் பா.உ. களினால் இப்போது அவர்களின் சமூகத்துக்கெதிராக நடைபெறும் எந்தவிதச் செயற்பாடுகளையூம் தட்டிக்கேட்க இயலவில்லை!
பொத்துவில், தீக்கவாப்பிய என்று நீளும் பிரதேசங்களில் முஸ்லிம்களின் காணிகள், பௌத்த மேலாக்கச் சிந்தனைவாதிகளின் சண்டித்தன அரசியலால் அபகரிக்கப்படுவது தெரிந்திருந்தும், அரசோடு இணைந்திருக்கும் நமது பாவப்பட்ட பா.உ.களாலும், அமைச்சர்களாலும் எதுவூமே செய்ய முடியவில்லை. முஸ்லிம் அரசியல் வரலாற்றின் துயர் நிறைந்த பதிவூ இது! இன்னும் சொன்னால், இது நமது சமூகத்துக்கான அவமானம்! ஆனால், இந்த அவமானம் நாம் தேடிப்பெற்றது. இன்னும் சொன்னால், நமது ஒற்றுமையின்மைக்கான தண்டனைதான் இது!
தனது சமூகத்தை நோக்கி குறிவைத்து அடிக்கப்படுகின்ற ஒவ்வொரு இனவாதக் கல்லின் வலி குறித்தும் நமது முஸ்லிம் அமைச்சர்கள் அறிந்திருந்தாலும், எதிர்த்துப் பேசினால் இருக்கும் கதிரைக்கு ஏடா கூடமாய் ஏதாவது ஆகிப்போய் விடுமோ என்று பயப்படுகிறார்கள். தாம் வகிக்கின்ற அமைச்சுக்களை வைத்துக் கொண்டு தமக்கான எதிர்கால அரசியலைத் திட்டமிடும் இவர்களால், அந்தப் பதவியை இழப்பதென்பது முடியாத காரியம்தான்.
இன்று அரசோடு இணைந்திருக்கும் முஸ்லிம் பா.உ.கள் குறிப்பாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்களில் அனைவரும் அல்லது அதிகமானோர் முஸ்லிம் காங்கிரசை சேந்தவர்களும், அதிலிருந்து பிரிந்தவர்களுமேயாவர். அதனால், இந்த இரண்டு பிரிவினர்களுக்குமிடையில் மறு தரப்பாரைத் தோற்கடிக்க வேண்டுமெனும் ஆத்திரமும், எதிர்த் தரப்பால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயமும் இருந்து வருகிறது. காரணம், இவர்களுக்கிடையில் நீண்டு வளர்ந்திருக்கும் குரோதங்களாகும்.
தாம் பெறுகின்ற அதிகாரங்களைக் கொண்டு எதிர்த் தரப்பாரை முறியடிக்கவூம் (அல்லது தோற்கடிக்க), தமது அரசியலை நிறுவிக் கொள்வதற்காகவூமே இவர்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்றனர். அரசோடு தாம் சேர்ந்திருப்பது சமூகத்தின் நன்மை கருதியே தவிர வேறில்லை என்று இவர்கள் முழங்குவதெல்லாம் வெறும் ‘புரூடா’ என்கிறார் மிக மூத்த முன்னாள் அரசியல்வாதியொருவர்!
மு.காங்கிரஸாரும் இதற்கு விதிவிலக்கல்ல! இவர்கள் அரசோடு சேர்ந்தமைக்கான முக்கிய காரணங்களில் இதுவூம் ஒன்றுதான்! ஏலவே, அரசோடு இணைந்துள்ள தமது எதிர்த்தரப்பாரின் வெட்டுக்குத்துகளில் இருந்து ஆகக்குறைந்தது தம்மைப் பாதுகாத்தாவது கொள்ளலாம் என்பதை நோக்கமாகக் கொண்டே அவர்கள் இந்த அரசோடு இணைந்தனர். ஆனால், அதுவூம் நடக்கவில்லையென்றான பிறகே மு.கா.வினர் அரசாங்கத்தாரிடமிருந்து ‘விவாகரத்துப்’ பெற்றனர்.
நமது முஸ்லிம் பா.உ.களுக்கிடையேயான இந்தக் ‘கத்திச் சண்டை,க்கான காரணம், மிக அற்பமானது! ஓவ்வொருவரிடமும் ஆழ வேரூன்றிக் கிடக்கும் சுயநலமும், தான் எனும் முனைப்புமே (ஈகோ) இந்த குரோதம் வளர்ந்து விருட்சம் விடக் காரணமாகும்!
இவர்கள் அனைவரும் இணைந்து செயற்படுவதற்கு வேறொதுவூம் தடையாக இருப்பதாக நமக்குப்படவில்லை. இவ்வாறு ஏன் இணைந்து செயற்படக்கூடாது என்று நமது முஸ்லிம் பா.உ.கள் பலரிடம் கேட்டோம். இவ்வாறு பிரிந்துபோய் கிடப்பதற்கு என்னதான் காரணம் என விசாரித்தோம். அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள் வருத்தத்துக்குரியன. மக்களின், சமூகத்தின் நலன் குறித்து இவர்களில் பலர் யோசிக்கவேயில்லை என்பது அதன்போது புரிந்தது. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களாவது முதலில் ஒரு அணியில் இணையூங்களேன் என்றால், தானும் தனது அணியைச் சேரந்த அமைச்சர்களான ரிசாத் பதியூதீன் மற்றும் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் மற்றவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவூம், ஆனால் அவ்வாறு இணைவதென்றால், குறித்த அணியியினது தலைமைப் பதவியை தமக்கே தரவேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் ஏனையோரில் பலர் இருப்பதாகவூம் அமைச்சர் அமீர் அலி கூறுகிறார்.
பழைய படி மு.கா.வூடன் சேர்ந்து ஒற்றுமைப்பட்டு செயற்படுங்களேன் என்று அதாஉல்லாவிடம் கேட்டால், ஹக்கீம் தலைமை வகிக்கும் கட்சியொன்றில் இணையவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ, என்றும் – எங்கும் – எப்பொழுதும் தானே ‘தலை’யாக இருக்க வேண்டுமெனும் ‘தலை வீக்கம்’ கொண்டவர் என்று, அந்தக் கட்சிக்குள் இருக்கும் மிக முக்கிய புள்ளி ஒருவரேஇ ரஊப் ஹக்கீம் குறித்துப் பேசும் போது அலுத்துக் கொள்கிறார்! மு.கா.வூடன் அதாஉல்லா இணைந்திருந்தபோது அதாஉல்லாவூக்கு அமைச்சரவை அந்தஷ்துள்ள பதவியொன்றைப் பெறக் கூடிய அத்தனை சாத்தியங்களும் இருந்தன. ஆனால், ஹக்கீம் அதனைப் பெற்றுக் கொடுக்கவில்லை. காரணம், தனக்கு நிகரான பதவியைக் கூட, கட்சிக்குள் மற்றொருவர் வகிப்பதை ஹக்கீம் விரும்பவில்லை. அதாஉல்லாவின் பிரிவூக்கு இந்த நிகழ்வூம் ஒரு காரணம் என்று அந்த முக்கிய புள்ளி கவலையோடு கூறினார். ஹக்கீமின் இந்த மனநிலைக்குக் காரணம், அடுத்தவரால் தனது தலைமைக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ எனும் பயந்தானாம்.
ஆக – நமது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குள் வளர்ந்து கிடக்கும் இந்த நச்சுச் செடிகள் அவசரமாகப் பிடுங்கியெறியப்பட வேண்டியவை! சமூகத்தை முதன்மைப்படுத்திச்; சிந்திக்கும் போது, இவர்களின் தனிமனித பிரச்சினைகளெல்லாம் இரண்டாம், மூன்றாம், நான்காம் பட்சங்களே!
ஒரு உதாரணத்துக்கு, மு.கா.வில் மீண்டும் ஏன் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என்ற ஒரு கேள்வியை முன்வைப்போம்!
”எவரும் கட்சிக்குள் வரலாம், கதவூ திறந்தேயிருக்கிறது” என்கிறார் ஹக்கீம். ஆனால், இது மரியாதையான அழைப்பல்ல. சண்டை பிடித்து, கோபித்துக் கொண்டு, பிரிந்து நிற்கும் எவரையூம், மீண்டும் அழைக்கும் பாணி இதுவல்ல என்பதை சிறு குழந்தை கூட அறியூம்! ”பாருங்கள் எதிர்பார்ப்புகளோடு விடுக்கப்படும் அழைப்பா இது. சும்மா, தன்னை தூய்மையானவராகக் காட்டிக்கொள்வதற்காக ஹக்கீம் மேற்கொள்ளும் நாடகமே இது” என்கின்றனர் எதிர்த்தரப்பார்.
சரி, ஹக்கீம் உரிய முறைப்படி அழைத்து கட்சிக்குள் பெறுமதியான பதவிகளை தமக்குத் தர வேண்டும் எனும் எதிர்பார்ப்பிலுள்ளவர்கள் அனைவரும் அதன்பிறகு உள்ளிருந்தே கூட்டுச் சேர்ந்து தலைவருக்கே ‘தண்ணி’ காட்டி விட மாட்டார்களா என்று கேட்டால்… அப்படி நடக்காது என்று துணிந்து கூறிவிடவூம் முடியாமலுள்ளது. ஆக – என்னதான் இதற்கு வழி? முதலில், பேச்சுவார்த்தைகள் மூலம் இரு தரப்பாரும் தமக்கிடைடே நம்பிக்கையை வளர்த்தல் அவசியமாகும். பின்னர், ஒரு இணக்கப்பபாட்டுக்கு வந்து ஒன்று சேர முடியூம் என்கிறார் ஒரு அனுபவஸ்தர்.
மு.கா.வில் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் இல்லையென்றால், அவரவர் தமது கட்சிகளிலும் அணிகளிலும் இருந்தவாறே சமூக நலன்கருதி ஒரு கூட்டு முன்னணியொன்றை அமைத்து அதன்மூலமாக இணைந்து செயற்படவூம் முடியூம். இவ்வாறானதொரு கூட்டு முன்னணி பற்றி மு.கா.வூக்குள் உள்ள ஒரு தரப்பார் சிந்தித்து வருவதாகவூம் தெரிகிறது. இதேவேளைஇ பிரதியமைச்சர் பாயிசும் இவ்வாறானதொரு கூட்டு முன்னணியொன்றை அமைத்துச் செயற்படுவதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியூள்ளார். எல்லோரும் மு.காங்கிரசில் இணைந்து செயற்படுவது என்பதை விடவூம், இவ்வாறானதொரு முன்னணியொன்றை அமைத்து, அதன் மூலம் இணைந்து இயங்குவதென்பது சாத்தியம் மிகுந்ததொரு விடயமாகும்!
இதை விடுத்து, வெறுமனே நமது தலைவர்கள் ‘தத்துவங்களை’ உதிர்த்துக்கொண்டிருப்பதில் ஆகப்போவது எதுவூமில்லை.
முஸ்லிம்கள் இன்று அதிகமாகவூம், அதேவேளை பெரும்பான்மையாகவூம் வசிக்கின்ற மாவட்டம் அம்பாரையாகும். ஆனால்இ பௌத்த மேலாக்கவாதிகளின் பின்னணியில் நிகழும் தற்போதைய கள்ளக் குடியேற்ற நடவடிக்கைகளாலும், முஸ்லிம்களின் காணி அபகரிப்புகளாலும் அந்த சமூகத்தின் பெரும்பான்மை நிலை இல்லாமல் போகின்றதொரு அபாயம் தோன்றியள்ளது. இது புதிதாகத் முளைத்துள்ளதோர் அபாயமல்ல என்றாலும், தற்போது நிலைமை கட்டு மீறிப்போயூள்ளது.
ஊதாரணமாக அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட, சுமார் 615 பௌத்த குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் குக்கிராமமான தீக்கவாப்பியவை தற்போது தனி பிரதேச செயலகமாக உருவாக்கும் திட்டமொன்று பெரும்பான்மை மேலாக்கவாதிவாதிகளால் வரையப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான நிலப்பிரதேசம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஏக்கர்களாகும். அதில் 3100 பேரை மட்டும் கொண்ட தீக்கவாப்பிய 4900 ஏக்கர்களைக் கொண்டுள்ளது. (முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளும் இதில் உள்ளடக்கம்) இந்தவகையில் பார்க்கும் போதுஇ தீக்கவாப்பிய கிராமத்தில் வசிக்கும் ஒரு பௌத்தருக்கு சராசரியாக 8.1 ஏக்கர் நிலம் சொந்தமாகிறது. ஆனால்இ அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம், இந்து நபரொருவருக்கு வெறும் 0.16 பரப்பளவைக் கொண்ட காணியே உரித்தாகிறது.
ஆக, இந்த நிலையிலும் நமது பிரதிநிதிகள் வெறுமனே மௌனிகளாக இருப்பார்களாயின், அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் இந்தத் தலைவர்களே பொறுப்புதாரிகளாக்கப்படுவர்.
ஹக்கீமே கூறுவது போல மு.காங்கிரசுக்கும், அதன் தலைமைத்துவத்துக்கும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. காரணம்இ அந்த மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சியது! எனவேஇ ஏனைய நமது பிரதிநிதிகளை விடவூம் மு.கா.வினர் சமூக விடயங்கள் தொடர்பில் மிகவூம் கருசணையோடும், இயங்கு தன்மையூடனும் செயற்படுதல் அவசியமாகும். ஆனால், மு.கா.வின் தற்போதைய நடவடிக்கையில் அவ்வாறானதொரு போக்கை நம்மால் அவதானிக்க முடியவில்லை. ஆகக்குறைந்தது அரசாங்கத்துக்குள் இருந்தபோது காட்டிய தீவிரத்தைக் கூட, இப்போது அவர்களிடம் காணக்கிடைக்கவில்லை.
மேடைகளில் மட்டும் மு.காங்கிரசை மக்கள் இயக்கமாகக் கூறிக்கொள்ளும் அதன் தலைமை, முஸ்லிம்களுக்கெதிரான தற்போதைய பேரினவாத உச்ச நடவடிக்கைகளுக்கெதிராக ஆகக்குறைந்தது மக்களை ஒன்று திரட்டி ஜனநாயகப் போராட்டங்களையாவது நடத்த வேண்டும். அதன் மூலம், குறித்த பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துவதோடு, சர்வதேசத்தின் பார்வைக்கும் கொண்டு செல்ல முடியூம்! ஆனால், இதைக்கூட திட்டமிட்டு நிகழ்த்த முடியாத தமது கட்சியின் இயலாமையைக் கூறி, கெட்டவார்த்தைகளால் திட்டித் தீர்த்தார் ஒரு உள்ளுர் மு.கா. பிரமுகர்!
ஆக, நமது முஸ்லிம் பா.உ.. கள் கொஞ்சமாகவேனும் சமூகம் குறித்து இந்த வேளையில் கருசணைப்படுதல் வேண்டும். சுவரைப் பறிகொடுத்து விட்டுஇ உங்கள் சித்திரங்களையல்ல…. சிறு கோட்டினைக் கூட பின்னர் உங்களால் வரைந்து பார்க்க முடியாமல் போய்விடும். உதாரணமாக, முஸ்லிம்களின் பெரும்பான்மை அம்பாரை மாவட்டத்தில் இல்லாமல் போனால், இப்போதுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளில் பலர் தமது பாராளுமன்ற வாய்ப்புகளை இழந்தே போய்விடுவர். ஆக, இப்போதுள்ள இருக்கையைக் காப்பாற்ற நினைத்து, பின்னர் ஆயூளுக்கும் அதில் இருந்து பார்க்க முடியாததொரு நிலையை உங்களுக்கு நீங்களே உருவாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வருத்தத்துடன் கூறுகிறார் பல்கலைக் கழகப் புத்திஜீவி ஒருவர்!
தலைவர்களே… ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மக்கள் நலன் கருதியேனும் நீங்கள் ஒன்றுசேராது போய் விடின், மக்கள் ஒன்று சேர்வார்கள்…
அப்போது – மிக அருவருக்கத்தக்க ஓரிடத்தில் நீங்கள் தூக்கியெறியப்பட்டுக் கிடப்பீர்கள்!
வரலாறு அதுதான்!
•
இந்தக் கட்டுரையை 13 ஜனவரி 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)