காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

காகம் குந்த விழுந்த – ஹக்கீமின் பனம்பழம் குறித்த கதை! 4 ஜனவரி 2008

Filed under: அரசியல் — Mabrook @ 2:06 முப

color-dot.gifமப்றூக்

விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இந்த ஆட்சியில் அவஸ்தைகளோடு இருந்து கொண்டிருந்த மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையவே, அடித்தார் ஒரு அந்தர் பல்டி!

எப்போது இந்த அரசிலிருந்து  விலகுவது என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அவருக்கு, அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கிழக்கிலங்கை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருந்த அறிக்கையானது  இனிக்கும் செய்திதான்.

தன்னை முன்னிலைப்படுத்தாத,  தன் அரசியல் எதிரிகளைப் போஷித்து வளர்க்கின்றதொரு அரசோடு நீடித்திருக்க விரும்பாத மு.கா. தலைவர், ஆட்சியிலிருந்து விலகும் அந்தக் கணங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும்.  இவ்வாறானதொரு நேரத்தில்தான் பள்ளிவாயல்களில் பாங்கு சொல்வது குறித்த சர்ச்சை, பசு கொல்தலுக்கான தடை மற்றும் முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு போன்ற விடயங்கள் சற்றே உரத்தும் பேசப்பட்டன.  இதைச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு ஹக்கீம் நினைத்த நேரத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அறிக்கையும் வெளிவரவே அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேறினார் அவர்.

சரி, மு.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் மூலம் என்னதான் சாதித்தது? அரசாங்கத்தில் இணைந்த போது, ஆறு பா.உ.களைக் கொண்டிருந்த அந்தக்கட்சி இப்போது நான்கு பேரை மட்டுமே தன்னகத்தே வைத்துள்ள பரிதாபகரமானதொரு நிலையை வலிந்து பெற்றுக் கொண்டதைத் தவிர, வேறெதையும் அறுவடை செய்யததாகத் தெரியவேயில்லை! உண்மையாகவே, வரவு  செலவுத் திட்ட வாக்கெடுப்பை அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கானதொரு சந்தர்ப்பமாக மு.கா. பயத்தியிருக்கக் கூடாது என்பதே  புத்தி ஜீவிகளின் கருத்தாகும். வாக்கெடுப்பில் தனது விசுவாசத்தை காண்பித்த பின்னர் பிரச்சினைகள் குறித்து அரசுடன் மு.கா. பேசியிருக்க வேண்டும். அப்போதும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்தியிருக்கவில்லையெனில், அறிவித்து விட்டு மு.கா. வெளியேறியிருக்கலாம். அதுவே கனவான்தனமாகம் அமைந்திருக்கும்.

தற்போதைய மஹிந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ அல்லது ஐ.தே.கட்சி தலைமையில் ஆட்சியமைப்பதற்கான சாதக சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ ஜே.வி.பி. ஒரு போதும் முன்வராது என்பதை  ஞாயிறு தினக்குரல் கட்டுரையொன்றில் மிகத் தௌவாக நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், பெரும் கட்சியொன்றின் தலைவரான ஹக்கீமுக்கு ஏன் இது விளங்காமல் போயிற்று? ஐ.தே.கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டுமெனும் தீராத மோகமும், மஹிந்த அரசு மீதான கடுங்கோபமுமே ஹக்கீமை இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான அரசியலைச் செய்யத் தூண்டியிருக்க வேண்டுமென்கிறார் மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர்!

இப்போதின் அரசாங்கம் ஏதோ எள்ளளவும் குறைபாடுகளற்ற ஆட்சியை நடத்தி வருவதாகச் சொல்வதோ அல்லது மேற்கூறிய விடயங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கினைக் கொண்டதல்ல என்று நிறுவவுவதோ நமது நோக்கமல்ல. ஆனால், இப்பிரச்சனைகள் தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துக் கொண்ட தீர்மானம் சமூக நன்மை தொடர்பில் புத்தி சாதுர்யமுள்ளதொன்றாக நமக்குத் தெரியவில்லை!

//z.about.com/d/healing/1/0/w/M/gtotem_crow.jpg” cannot be displayed, because it contains errors.உதாரணமாக, அம்பாரை மாவட்டத்தின் தீக்கவாப்பிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் காணிகள்இ பௌத்த மேலாக்கவாதிகளினால் அபகரிக்கப்பட்டுவரும் விடயமானது, இன்று நேற்றுத் தொடங்கியதல்ல! அது முப்பது, நாப்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகின்றதொரு பிரச்சினையாகும்!

மட்டுமன்றி, கிழக்கில் நிலவி வரும் முஸ்லிம் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான விடயங்கள், ஹக்கீம் நினைப்பது போல், வரவு  செலவுத் திட்டத்தின் இரண்டு வாசிப்புகளுக்கிடையிலான வாக்கெடுப்பு நாட்களுக்குள் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளல்ல! அவை பொறுமையோடு இருந்து, கலந்து, பேசி முடிவெடுக்க வேண்டியதொரு சிக்கலாகும். சிலவேளைகளில் அந்த பேச்சுக்கள் வெற்றியடையலாம், சிலவேளை தோல்வியிலும் முடியலாம். ஆனாலும், தளராமல் தொடர வேண்டும். காரணம், குறித்த பிரச்சினையின் ஆதி மூலம் அப்படியானது! உதரணமாக, பொன்னன் வெளி எனும் பகுதியில் தமது வயற் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்களிடம் பறிகொடுத்த முஸ்லிம்களுக்குஇ தீக்கவாப்பிய பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் மாற்றுக்காணிகளைப் பகிர்ந்து கொடுக்கும் பொருட்டு மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் சந்திரிக்கா ஆட்சியின் போது, நடவடிக்கையொன்றினை மேற்கொண்டிருந்தார். ஆனால், இதைத் தடுத்து நிறுத்தும் வகையில் மு.கா. தலைமையகம் முன்னால் புத்த பிக்குகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்இ அத்திட்டத்தை உடனடியாகக் விட்டுவிடும் படி அப்போதைய ஐனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேட்டுக்கொண்டதற்கமைய அஷ்ரபும் தனது முயற்சியைக் கைவிட்டிருந்தார்.

சந்திரிக்காவை ஐனாதிபதியாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர்களில் அஷ்ரபும் ஒருவர். அதேவேளை, அப்போதைய அரசாங்கத்தில் அவர் சக்தி மிக்கதொரு அமைச்சராகவூம் பதவி வகித்தார். இருந்தபோதும், தீகவாபி உட்பட சில விடயங்களில் சந்திரிக்காவோடு அவர் முரண்பாடு கொண்டிருந்த போதும், ஆட்சியைக் கவிழ்க்கும் கோதாக்களில் குதித்திருக்கவில்லை. காரணம், அரசியலில் அஷ்ரப் சாணக்கியமும் ராஜதந்திரமும் மிக்கவராக இருந்தார். மட்டுமன்றி, இப்பிரதேசங்களிலேயே பிறந்து, வளர்ந்தவர் என்பதால்… குறித்த பிரச்சனையின் ஆதி, அந்தங்கள் குறித்தும் அவர் மிகத் தௌவாக அறிந்துமிருந்தார். இன்னும் சொன்னால், எடுத்தேன் – கவிழ்த்தேன் எனும் பாணியில் கையாளும் பிரச்சனை அல்ல இதுவென்பதை அஷ்ரப் போன்ற அரசியல் தலைவர்கள் அறிந்தே இருந்தனர்!  ஹக்கீம் இதை அறியாமலுள்ளமை துரதிஷ்டமானதே!

எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவூமில்லாமல் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைதான் முஸ்லிம் காங்கிரஸ் செய்த மிகப் பெரும் பிழையாகும். ஆனால், தாம் எழுத்து வடிவிலான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே அரசுடன் சேர்ந்து கொண்டதாக மு.கா.வின் தலைவர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை நம்பவைத்தனர். ஆனால், அவைபோன்ற எவ்வித ஒப்பந்தங்களும் எழுத்து வடிவில் செய்யப்படவில்லை என்பதை மு.கா.வின் முன்னாள் தேசிய அமைப்பாளர் கே.ஏ. பாயிஸ்தான் முதன் முதலில் போட்டுடைத்தார். (ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியொன்றில் பாயிஸ் இது குறித்து விபரமாகக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது) உண்மையாகவே, எழுத்து மூலமான உடன்பாடுகள் அரசுடன் எட்டப்பட்டிருக்குமாயின் மு.கா.வுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கவே மாட்டாது!
முஸ்லிம்கள் தொடர்பிலான இந்தப் பிரச்சனைகளை ஹக்கீம் தனது அரசியல் நலனுக்காகவே இவ்வாறு பயன்படுத்துகின்றார் என்றுதான் அவருடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் குற்றம் கூறுகின்றனர். 2002 ஆம் ஆண்டு ரணில் பிரதமராக பதவி வகித்த காலத்திலும் தீகவாயிய காணிப்பிரச்சனை இருந்ததுதானே! அப்படியென்றால், ஏன் அப்போதிருந்த சாதக நிலைகளைப் பயன்படுத்தி ஹக்கீம் அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கக் கூடாது? ரணில் விக்ரமசிங்கவை அப்போது பிரதமராக வெற்றி பெற வைப்பதற்கு ஹக்கீம் மிகத் தீவிரமாக உழைத்திருந்தார் என்பதும் அந்த ஆட்சியில் மிக பிரதானமான அமைச்சுப் பதவியை அவர் கொண்டிருந்தார் என்பதும் முக்கியமானது. மேலும் அஷ்ரப் வகித்த அமைச்சுப் பதவிகளை விடவூம் ஹக்கீம் அதிகமானதும் பெறுமதி மிக்கதுமான அமைச்சுக்களையூம் பெற்றிருந்தார். ஆக – இத்தனைகளைப் பெற்றிருந்தும் மு.கா. தலைவர் அப்போது எதுவூம் செய்யாமல், ஏன் இப்போது கூப்பாடு போடுகின்றார் என்று கேட்கும் பாமர வாக்காளர் ஒருவரின் கேள்வியை அத்தனை சுலபமாக எவரும் தட்டிக்கழித்துவிடவூம் முடியாது!

மேலும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தொடர்பான சில பழைய விடயங்களை இங்கு மீட்டுப் பார்த்தல் இக்கட்டுரைக்கு மிகப் பொருத்தமானதாகும்! கரையோர மாவட்டத்தை 100 நாட்களுக்குள் வழங்கா விட்டால் ஆட்சியிலிருந்து வெளியேறப் போவதாக சந்திரிக்காவுக்கு ஹக்கீம் சவால் விட்டதும்,  பின் அதில் தோற்றுப் போனதும் மறந்து போகும் விடயமல்ல. அது போலவே, ரணில் விக்ரமசிங்க கடைசியாக பிரதமராக இருந்த ஆட்சியின் போது, மூதூர் மக்கள் மீது இடம்பெற்ற தமிழ் ஆயூததாரிகளின் தாக்குதல் சம்பவம் கோரம் நிறைந்தவை. இதன்போது, அப்பகுதிக்குச் சென்ற ரஊப் ஹக்கீம் அங்கு ரணில் விக்ரமசிங்க வரவேண்டுமென்றும்இ வராவிட்டால் –  தான் மூதூரை விட்டு வரப்போவதில்லை என்றும் கர்ஜித்து அறிக்கை விட்டிருந்தமையூம் மறந்து விடும் விடயங்களல்ல! அந்த வேண்டுகோளை ரணில் கணக்கில் எடுக்காமல் விட்டபின்பு, மு.கா. தலைவர் அடங்கிப் போனதும்,  தன் ஊர் வந்து சேந்ததும் வரலாற்றின் வெட்கம் நிறைந்த பதிவுகளாகும்! இவ்வாறான வேளைகளிலெல்லாம் மு.கா. தலைவருக்கு வராத கோபமோ, அவமானமோ இப்போது மட்டும் வந்து தொலைத்ததின் மர்மம்தான் என்ன என்று கேட்கும் அரசியல் விமர்சகர்களின் சந்தேகங்களுக்கு மு.கா. தலைவர், வைத்திருக்கும் பதில் பற்றி அறிய நமக்கும் ஆவல்தான்!

மு.கா. இவ்வாறு அரசிலிருந்து பிரிந்து போகும் நிலையொன்று வருமானால், அப்போது மு.கா.வின் பா.உ.கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர்  தொடர்ந்தும் ஆட்சியில் இணைந்தே இருப்பார்கள் என எமது முன்னைய கட்டுரையொன்றில் நாம் கணித்துச் சொல்லியிருந்தமையூம் இங்கு ஞாபகம் கொள்ளத்தக்கது. ஆக, அவ்வாறு இரண்டு பா.உ. களை இழந்தாலும் பரவாயில்லை எதிரணிக்குச் சென்றுதான் ஆக வேண்டும் என்கிற ஹக்கீமின் அத்துணை அவசரத்துக்கு காரணம் என்ன என்றுதான் தெரியவேயில்லை என்கிறார் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுத்தீன். மக்கள் நலன் என்பதற்கப்பால் இவரின் இந்த அவசரத்துக்கு வேறௌரு தேவை இருப்பதாகவே தான் கருதுவதாகவம் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இதேவேளை – கிழக்கிலங்கை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆ//news.bbc.co.uk/olmedia/1705000/images/_1706117_wickap300.jpg” cannot be displayed, because it contains errors.ட்சியிலிருந்து விலகுங்கள்   என்று ஆணையிடும் தொனியில் கடிதமொன்றை அனுப்பி வைத்தார்களே தவிர, அதற்கு முன்னர் தம்மோடு இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான சந்திப்புகளையோ பேச்சுவார்த்தைகளையோ மேற்கோள்ளவில்லை என்று முஸ்லிம் பா.உ.கள் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, பொறுப்புமிக்க இவ்வாறான அமைப்பொன்றில் உள்ளோர், உணர்ச்சிவசப்பட்டு அதிரடிப் பாணியில் தமது சமூகப் பிரதிநிதிகளை வழிநடத்த முயல்வதை விடுத்து, பிரச்சினையொன்று வரும்போது இனி மேலாவது சம்பந்தப்பட்டோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்பட முயற்சிக்க வேண்டுமென்று அழுத்திக் கூறுகின்றார் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்!

இதேவேளை, ஒரு தேசிய பிரச்சினை தொடர்பில் இவ்வாறான முடிவொன்றினை மேற்கொள்ளும் முன்னர், கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தார் ஏன் நமது முஸ்லிம் பாரளுமன்றப் பிரதிநிதிகள் அனைவரையூம் சந்தித்துப் பேசவில்லை என்பதற்கான விளக்கத்தினையூம் இக்கட்டுரை இவ்விடத்தில் கோரி நிற்கின்றது.
இதுதவிர, ஹக்கீம் இந்த அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற பின்னர் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாரை மாவட்டத்துக்கு எவ்விதமான அபிவிருத்திப் பணிகளையூம் மேற்கொள்ளவில்லை என்பதும், அவரின் கட்சி வெற்றிக்காக உழைத்த இளைஞர்களுக்குக் கூட தொழில்வாய்ப்புகளை வழங்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் அவர் மீதான கோபமாகும். ஆனால் ரஊப் ஹக்கீமோ,  இந்த ஆட்சியில் தனக்கு அவ்வாறான எதையூம் செய்கின்றதொரு நிலை இருக்கவில்லை என்று தன்னிலை விளக்கம் கூறுகின்றார். ஆப்படியென்றால் கடந்த ரணில் ஆட்சியின் போதாவது அவர் இவ்வாறு ஏதும் செய்தாரா என்று திருப்பிக் கேட்கும் மக்களின் கேள்விகளுக்கு நிச்சயமாக மு.கா. தலைவரிடம் பதில்கள் எதுவும் இருக்கப்போவதில்லை என்பதே உண்மை!

கப்பல் துறை அமைச்சோ அல்லது கிழக்கு அபிவிருத்தி அமைச்சோ கையில் இருந்தால்தான் சேவை செய்யலாம் என்பது போலவும் அவ்வாறான அமைச்சுக்களை இந்த அரசு வழங்காததால்தான் தன்னால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பது போலவும் ஹக்கீம் நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவரின் அரசியல் எதிராளியான அதாஉல்லாவோ, தான் பெற்றுக் கொள்ளும் அனைத்து அமைச்சுக்களினூடாகவும் மக்களுக்குப் பல்வேறு சேவைகளைப் புரிந்து வருகின்றார் என்பதை குறிப்பிடாமலும் இருக்க முடியாது (இதில் அவரின் பிரதேச பாகுபாட்டு அபிவிருத்திகள் இருப்பது வேறு கதை). குறிப் பாக அஷ்ரபுக்குப் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் அதிக தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருபவர் அதாஉல்லா என்பது ஹக்கீமுக்கு இந்தக் கட்டுரையினூடாக நாம் வழங்கும் கசப்பான செய்தியாகும்.

இந்த அமைச்சு இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்பதற்கப்பால், எந்த அமைச்சு இருந்தாலும் சேவை செய்ய முடியும் என்பவர்களே இனி நமது மக்களின் தெரிவுகளாய் இருக்க வேண்டும்.

அரங்கைப் பிழையென்றாளாம் ஆடத் தெரியாதவள்!
இது நமது மு.கா. தலைவருக்கும் பொருந்தும்!!


(இந்தக் கட்டுரையை 30 டிசம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும்
http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s