காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

உன் சிரிப்பு மாதிரி பெய்த இன்றின் மழை! 14 திசெம்பர் 2007

Filed under: இறவாத காலம் — Mabrook @ 6:03 பிப

color-dot.gifமப்றூக்

raining-girl.jpgன் சிரிப்பு மாதிரி பெய்தது இன்றின் மழை! கொஞ்சம் கொஞ்சமாய் தூறி நனைத்தது!

மழையில் நனைந்து திரிந்த காலங்கள் எத்தனை இனிப்பானவை.

ஆனால்  இந்த நகர்ப்புறத்தில் மழை கொடுமையிலும் கொடுமை!

மரவள்ளி அவித்து அதனுடன் இடி சம்பல் சேர்த்து சாப்பிடும் சுகம்… மழைக்காலச்சுகம்!

மழையை தள்ளி நின்று ரசித்த அனுபவங்கள் அதிகமில்லை!

மழையோடு மழையாய் விழுந்து, தெறித்து, நனைந்து, வழிந்து, ஓடி.. ஓடித் திரிய… நான் மழையாகி, மழை நானாகி….. அது ஒரு காலம்!

மழை நாட்களிலான நம் சந்திப்பு குறித்து இன்றைய ஈர நாள், மனசுக்குள் கிடந்த மறக்கவே முடியாத குறிப்புக்களை நனைத்து விட்டுப் போயிற்று! நனைந்த ஈரம் மீண்டும் உலர நாளாகும் என்கின்ற சேதியை யாருடன் நான் பகிர்ந்து கொள்வேன்.

கம்பளித் துணி அல்லது உம்மாவின் பருத்திப் புடவையால் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுக்க… மழைக்காய்சலும் இதம்தான்!

மழை வெள்ளத்தில் சாரனை உயர்த்திக் கட்டிக் கொண்டு ஊரெல்லாம் அலைவதும், ஆற்றில் இருந்து குதித்தோடி வரும் ‘செப்பலி’ மீன் வாங்கி முறுகப் பொரித்துத் தின்று விட்டு, உறைக்கும் உதட்டில் ஒரு சிகரட் கொழுத்துவதும்… உள்ளிழுத்த புகையை உடம்புக்குள் வைத்த படி, ஒரு கணம் கண்மூடி ரசித்து, பின் விடுவதும், கிராமத்து இன்பங்கள்!

நாட் கணக்கில் பெய்யும் நீண்ட மழைக்குப் பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிப் பார்ப்பது இந்த நகரத்தில் எங்ஙனம் சாத்தியம்!?

மழை எழுதி விட்டுப் போனவைகளைப் படிக்க வரும் சாக்கில், உன் தெரு வழியாய் வந்ததும், நீர் சொட்டும் குரோட்டன்களுக்கிடையில் நீ நின்று சிரித்ததும் இன்னுமிருக்கிறது என் நெஞ்சுக் கூட்டுக்குள்!

இப்படியெல்லாம், மனசுக்குள் குஞ்சுபொரித்துக் கிடக்கும் நினைவுகளை கிறுக்கிப் போடுவது தவிர வேறு ஆறுதல்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை…!


(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

Advertisements
 

7 Responses to “உன் சிரிப்பு மாதிரி பெய்த இன்றின் மழை!”

 1. “நீர் சொட்டும் குரோட்டன்கள்” என்ற வரிகள் மழைக்காலத்தில் கிராமத்தின் வீட்டுவாசல்களை நினைக்க வைக்கும் ஆனந்த அனுபவம்!

  “காற்றில்” கவிதைகள் இன்னும் அதிகமாய்க் கலக்கட்டுமே!!

  வாழ்த்துக்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 2. nilam Says:

  wow, excellent mabrook,
  accepting the facts of life and favoring practicality and littoral truth.

 3. Anbalagan Says:

  KIRAMATHU VALKYIN PADIMAGALI NAGARA NIRISALIN PODU THAN SUGAMAGA ASSIPODA MUDIGIRADU.oru muri varitigalil vadivathi kati vitirgal.ungal passil paratukal molli thandiya vaarthigalil.

 4. A.C.Risath Says:

  hai
  wonderfull poem mabrook bro,
  thanks lot of thanks

 5. Razana Manaf Says:

  மழையோடு மழையாய் விழுந்து, தெறித்து, நனைந்து, வழிந்து, ஓடி.. ஓடித் திரிய… நான் மழையாகி, மழை நானாகி….. அது ஒரு காலம்

  இன்னும் மறக்க முடியவில்லை இவ்வாறான நினைவுகள் ஒவ்வொருக்குள்ளும் நிச்சயம் ஒழிந்திருக்கும்.

 6. Lunugala Sri Says:

  இப்படியெல்லாம், மனசுக்குள் குஞ்சுபொரித்துக் கிடக்கும் நினைவுகளை கிறுக்கிப் போடுவது தவிர வேறு ஆறுதல்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை…

 7. Mushafi Says:

  //மழை எழுதி விட்டுப் போனவைகளைப் படிக்க வரும் சாக்கில், உன் தெரு வழியாய் வந்ததும், நீர் சொட்டும் குரோட்டன்களுக்கிடையில் நீ நின்று சிரித்ததும் இன்னுமிருக்கிறது//
  இந்த வரிகள் வழியே என் பழைய ஞாபகம் ஒன்று உதடு விரித்துச் சிரித்தது.
  எழுத்து வழியே மீண்டும் கிராமத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றமைக்கு கோடி நன்றிகள். கிராம வழக்கில் வாழ்த்தத் தோனுகிறது ‘ நீ அனுபவஸ்தன்டா’


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s