காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நாங்கள் அவர்கள் வாக்கிழத்தல்! 12 செப்ரெம்பர் 2007

Filed under: கவிதை — Mabrook @ 12:55 பிப

மப்றூக்

art-1.jpg

த்தியங்களால் அவர்கள்
எம்மைச் சமரசம் செய்தது
ஆறு கோடைகளுக்கு முன்னதான
ஆவணி மாதமொன்றின்
இளவெயில் பொழுதினில்தான்

வெந்து கிடந்த எங்கள் ரணங்களை
அவர்கள் முன் விரித்து வைத்தோம்
வசிய வார்த்தைகளால்
வருடிக் கொடுத்தார்கள்

எங்கள் வாழ்வுக்கும் வயிற்றுக்குமாய்
தங்கள் ஊண் உறக்கம் துறப்பதாக
மீண்டும்
சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சம்மதிக்கச் செய்தார்கள்

எல்லோரும் ஒரு முறை கரகோசித்தோம்
நண்பன் தேநீர் பகிர
எங்கள் விடியலை நினைத்து
சுவைத்தோம்
அவர்களுக்காகப் பிரார்த்தித்து
வழியனுப்பி வைத்தோம்
அவர்களின் பெயரில்
வாக்குகளை இறைத்தோம்

இன்றைய இரவும் என்றும் போலவே
கஞ்சிதான் உணவு
நேற்று வாப்பா
குண்டடிபட்டு மௌத்தாகிப் போனதாய்
கய்யாம் அழுதான்!
தூக்கம் மறந்த நடு நிசிப்பொழுதில்
அவர்களை நினைத்தோம்
வெள்ளிகளை எண்ணினோம்
அழுதோம்!

ஆறு கோடைகள் கடந்துபோன
மெல்லிய மழை மாத
ஒரு புரட்டாதித் திங்களில்
மீண்டும் அவர்கள்
எங்களுர் வந்தார்கள்

திரும்பிப் பார்த்த போது
ஆறு கடல் குளங்களெல்லாம்
தூர்ந்து போய் காய்ந்து கிடந்தன

கய்யாம் சொன்னான்
இதயத்தை தொலைத்தவர்களின்
சத்தியத்தை
இனி
நம்பக் கூடாது என்று!

(தடைசெய்யப்பட்ட கவிதை தொகுதியிலிருந்து…)

Advertisements
 

5 Responses to “நாங்கள் அவர்கள் வாக்கிழத்தல்!”

 1. nilam zainulabdeen Says:

  very good poem mabrook keep going on the top.

 2. latha Says:

  This is not an article, not a poem, not even a story too. But I m seeming these triple mixture in this
  ‘Art of Lingual.’ You are very kind and thankful guy to your passed Jimmy. Really I am very interesting with this article.

 3. cassim Says:

  அன்பு மப்ரூக்,
  ஊரை விற்று அரசியல் பிழைப்பு நடத்தும் முதுகெலும்பில்லாத அவர்கள் பற்றி- தலைமுறை வழியாக பேசிக்கொண்டிருப்பதே விதியாகி விடுமோ என பயமாக இருக்கிறது.

 4. Addalai Rini Says:

  இக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.. நூற்றுக்கு மேற்பட்ட தடவை என்னால் வாசிக்க முடிந்த கவிதை இது. அருமை அருமை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s