காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

வராமற் போனவள்! 11 ஜூலை 2007

Filed under: கவிதை — Mabrook @ 5:07 பிப

மப்றூக்

sad-girl-1.jpg
நீ சந்திக்க வராத
அந்தக் கறுப்பு அந்திகளில்
மனசு சோம்பலாய்
வெறுமையோடு முனகும்!

ஆயினும் வழமை போல்
உன் சின்னத் தெருவின்
கிறவல் சிவப்பு
மௌனமாய் என்னோடு
சிரித்துக் கொள்ளும்!
யாராரோ வருவர், யாராரோ போவர்…
ஆனாலும் நீ வரவே மாட்டாய்!

மனசு சோம்பலாய்
வெறுமையோடு முனகும்


வீதியிலிருந்தே
என் விழிகள் பார்வையை
உன் வீட்டுக்குள் எறியும்.
காகம் குந்திய குரோட்டன் அசைவில்
மனசு உந்தன் வரவு தேடும்!
ஒரு நேர்த்தியான கவிதைக்கென
தவமிருக்கும் இரவுகளாய்
உனக்காகக் காத்திருக்கும்
அந்த அவஸ்தைகளில்
உயிர் உமியும்!!


விழிகள் நோக… நெஞ்சு கடுக்கும்.
காத்துக் காத்து அந்தி கரையும்.
ஆயினும்,
ஒரு மூட நம்பிக்கையில்
மனசு உந்தன் வரவு நோக்க
போ… போ… என்று
உன் முற்றத்து மாமரம்
பச்சிலை அசைக்கும்!


திரும்பிப் போக திரும்பும் போது
இருளும் நாயும்
தெருவைப் பிடிக்கும்.


அப்போதும்
உன் சின்னத் தெருவின்
கிறவல் சிவப்பு
மௌனமாய் என்னோடு
சிரித்துக் கொள்ளும்!

(தடைசெய்யப்பட்ட கவிதை தொகுதியிலிருந்து…)

Advertisements
 

5 Responses to “வராமற் போனவள்!”

 1. நல்ல கவிதை மப்றூக் அண்ணா

  கீழே உள்ள வரிகளைப் பாருங்கள் எழுத்துப்பிழையிருப்பதாக நினைக்கிறேன்.
  “சிரித்துக் கொள்ளும்!
  யாராரோ வருவர், யாராரோ போவர்…
  ஆனாலும் நீ வரவே மாட்டார்”
  //
  ஆமாம் அகிலன், ‘வர மாட்டாய்’ என்பதற்கு பதிலாக ‘மாட்டார்’ என்று ஆகி விட்டதல்லவா?

  சரி, திருத்தி விட்டேன்.

  தொடர்ந்து பாருங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள்! நன்றி!!

 2. மிக அருமையான கவிதை.ஏற்கெனவே தினமுரசில் படித்து,உங்கள் கவிதைத் தொகுப்பில் மீண்டும் மீண்டும் ரசிக்கப்பட்டு இங்கு மீண்டும் பார்க்கக் கிடைத்ததில் சொல்ல முடியாப் பேருவகை உள்ளத்தில் அலை மோதுகிறது.
  நன்றிகள்.

 3. Nirshan Says:

  நல்லாருக்கு மப்றூக். இன்னும் எழுதுங்க.(மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்)

 4. saboor Says:

  மப்றூக், உங்கள் கவிதை மப்றூக்(பிரமாதம்) தொடருங்கள் …உங்கள் பணி இனிதாய் அமைய எல்லாம் வல்ல இறைவணை பிரார்த்தித்தவனாய்…

  அரேபியாவிலிருந்து..
  சபூர் ஆதம்
  அக்கரைப்பற்று

 5. Anbalagan Says:

  hi brother mabrook.i see your web last one week.several time im reding your poyams.VARTHIGAL ULAGIL VARALARUGALI PADITHULANA.EDU VARAI INDA AKKINI KUNJI EGE ADDI KATHU YTHRGAL,PERLAYAGALI THOTRE VEKUK VRTHIGALIL SELABATAM AADI ERUKU RERGAL.UNGAL PENEVIN MYGAL EGAL MALLIGALIL THALIR KILLUM MANITHARGALIUM PADAVENDUM.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s