காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தீக்குளித்தல் பற்றிய குறிப்பு! 10 மே 2007

Filed under: கவிதை — Mabrook @ 7:52 பிப

மப்றூக்

phone-girl.jpg

நேற்றும் நீ நினைக்கப்பட்டாய்.
பாற்கடலாகினாய், பொங்கினாய்,
பூனையாகி நான் தவிக்க!

பாடல்களில் நீ உயிர்த்தாய்.
மொழியிலும், இசையிலும்,
இரண்டும் புணரும்
கேள்தகவற்ற மீடிறன்களின்
மர்மப் புள்ளிகளிலும்
தோன்றா எழுவாய் போல
நீ இருந்தாய்,
இல்லாமலுமானாய்!

என் கனவுகளெல்லாம் நீ தீப்பிடித்தாய்!
உனக்குப் பிறகான
இரவுகளில் எரிவதைப்போல்
நேற்றும் எரிந்தேன்.
அன்பே
நினைவுகளின் வெம்மை
எத்தனை விசித்திரமானது!

காதல் கடிதங்களில் விடப்பட்ட
உன் எழுத்துப் பிழைகள்
நட்சத்திரங்களுக்கப்பால் நின்று
நடனம் புரிந்தன!
உனது தவறுகள்
ஈரம் துவட்டாக் கூந்தலுடன்
குளித்துவரும் உன்போல்
எத்தனை அழகானவை!

நினைவுகள் இருளில்
உன்னைப் பூசின!
உயிரின் அந்தப்புரக்கரைகளிலே
பெயர் தெரியாப் பூவாகி
நீ மணத்தாய்!

காதல் – நாம் செய்த பாவம்!
பாவம்,
நாம் செய்த காதல்!!

Advertisements
 

5 Responses to “தீக்குளித்தல் பற்றிய குறிப்பு!”

 1. nilam zainulabdeen Says:

  It’s fantastic 2read ur lovely poem

 2. அன்புள்ள மப்றூக்,
  நம் கிழக்கின் கவிதைகள் உயிர் வாழ்தலின் ஒவ்வொரு நொடியையும் சிரித்து, அழுது அனுபவிக்கும்படி செய்து விடுகின்றன. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  -ஹைராத், பொத்துவில்.
  //
  நன்றி ஹைராத்!

 3. nalayiny Says:

  விழிகளில் நீர் ததும்பிற்று.
  //
  நன்றி நளாயினி!

 4. Risath A.C Says:

  verry good ,உங்கள் வலை தளத்தை update செய்யவும் .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s