காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஒன்பது எனும் இலக்கத்தினால் அழைக்கப்படும் அரவாணிகள் பற்றிய உரையாடல்! 10 மே 2007

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 8:40 பிப

color-dot.gifமப்றூக்

alikal-1.jpgற்றே நளினத்துடனான முக மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்திப் பேசிக்கொண்டிருந்த ஒருவனை நண்பன் கேலியாக ‘பொன்ஸ்’ என்று பழித்தான்! நளினம் காட்டியவனும் விட்டபாடில்லை வேறோர் சொல் கொண்டு நண்பனுக்கு பதிலடித்தான்! (கவனிக்க: பதிலளித்தான் என்பதன் எழுத்துப் பிழையல்ல)

இந்த ‘பொன்ஸ்’ எனும் கீழ்நிலைச் சொல்லாடல் அரவாணிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. ஒன்பது எனும் இலக்கம் கொண்டும் (ஒம்போது எனும் உச்சரிப்புடன்)சிலர் இவர்களை அடையாளப்படுத்துவதுண்டு!

அந்தவகையில் அப்பு திரைப்படம் மறக்க முடியாதது! வசந்தின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படம். (”நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்” பாடல் கேட்க கேட்க மனம் வருடும் வசீகரம் கொண்டது) எல்லாவற்றுக்கும் அப்பால் அந்தப்படத்தை எனக்கு ஞாபகப்படுத்துவது பிரகாஷ்ராஜ் ஏற்று நடித்த ‘ராணி’ என்றழைக்கப்படும் அந்த அரவாணி பாத்திரம்தான்.

அடிப்படையான பால் நிலையிலிருந்து திரிபடைந்தவர்களே இந்த அரவாணிகள்! மிக அதிகமாக, ஆரம்பத்தில் ஆணாகப் பிறக்கும் இவர்கள், நாளடைவில் உள மற்றும் உடல் ரீதியாக பெண்மைக்குரிய தன்மையினை அதிகளவில் பெறுவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. பிறவிப் பெண்களும் ஆணாகத் திரிபடைதலும் உண்டு. எனினும் மிக குறைவே!

இவ்வாறானவர்களை ஏன் ‘ஒன்பது’ என்று அழைக்கிறார்கள் என அறிய முனைந்ததில் ஒன்பது எனும் எண் பற்றி நிறையவே வியப்புகள் கிடைத்தன. (இதைத்தான் ‘ஏதோ’ பிடிக்கப்போய், ‘ஏதோ’ ஆன கதை என்பதோ?)

நிமிர்த்திப் போட்டால் ஒன்பது, தலைகீழாக்கினால் ஆறு! பாருங்கள், ஒரே எண் – ஒரு மாற்றத்தினால் வேறு வடிவமும் பெறுமானமும் பெறுகிறது. இதனால்தான் சிலவேளை அரவாணிகளைச் சிலர் ஒன்பது என்கிறார்களா? தெரியவில்லை!

ஆனால், இலக்கங்களிலேயே மற்றுமொரு விசித்திரமும் ஒன்பதுக்கு உண்டு.  ஏதாவதொரு தொகையை ஒன்பதால் பெருக்கி வரும் விடையின் கூட்டெண்ணும் ஒன்பதாகவே அமையும்!

உதாரணமாக,
1266 x 9 = 11394 ( 1+1+3+9+4 = 18) ஆக, 1+8 = 9 ஆகும்.

இன்னுமொன்று,
172 x 9 = 1548 (1+5+4+8 = 18) எனவே, 1+8 = 9 ஆகிறது.

இவ்வாறு எந்த எண்ணை முயற்சித்தாலும் விடை ஒன்பதாகவே அமையும்! (ஆனால், இதற்கும் அரவாணிகளுக்கும் என்ன தொடர்பென்று புரியவேயில்லை)

அரவாணிகள் தம்மை ‘பாலியல் திரிந்தவர்கள்’ என்று அழைக்கப்படுவதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தியாவின் தமிழக பொலிஸ் அதிகாரியொருவர் 1977 ஆம் ஆண்டு ‘அலி’ என்கின்ற சொல்லால் கேலியாக இவர்களை அழைக்காமல் (இப்போதும் அலி என்றும் இவர்களை அழைப்பதுண்டு) ‘அரவாணிகள்’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துமாறு ஊடகங்களை வேண்டியிருந்தார். இப்போது அரவாணி என்பதும் கேலிச் சொல்லாய் மாறிப்போச்சு!

உலகில் இவர்கள் பெருந்தொகையாகிப் போன பின்பும், இவர்களுக்கான சமூக அந்தஷ்தும், மூன்றாம் பாலின அடையாளமும் இதுவரை மறுக்கப்பட்டே வருகிறது.alikal-2.jpg நமது சூழலிலும் அரவாணிகள் இருக்கின்றனர். ஆனால், நாம் அவர்களை நமது நகைச்சுவைக்கான கிண்டல் நபர்களாகவே அடையாளப் படுத்தி வருகிறோம்! ஆனால், இவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலும், அவமானங்களும் நிறைந்தவை!

அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள் பற்றி ரேவதி எனும் அரவாணி ஒருவரே ‘உணர்வும் உருவமும்’ எனும் தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார்.

நீண்ட தேடல்களுக்குப் பிறகு, கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின்போது ‘ரேவதி’ யின் புத்தகம் கிட்டியது!

முடிந்தால் தேடிப்படியுங்கள்!
அவை – வலி நிறைந்த கதைகள்!!

Advertisements
 

7 Responses to “ஒன்பது எனும் இலக்கத்தினால் அழைக்கப்படும் அரவாணிகள் பற்றிய உரையாடல்!”

 1. Sundar Says:

  Makkalin mananillai ippothuthan mara Aarmpithuullathu
  so veguvirivill evarkaliyum makkal nanbarkalaai parparkal.

 2. A.DHANDAPANI Says:

  manitharkal berappil mattum verupadukal odayaverkal hennru ninyathal ourkal manitharkal alla

 3. நான் Says:

  மக்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.

  இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

  அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.

  பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.

  நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.

  ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.
  இந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

  இதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.

  திருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.

  இவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.
  அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.

  இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.

  இவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.

  இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

 4. இவர்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடிப்பது அரசின் கடமையாகும்

  • M.Isham - http://www.facebook.com/mohammed.isham.73 Says:

   இவர்கள் உண்மையில் ஆண்கள் தான். இவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு முக்கிய காரணம் – இவர்கள் தனிமைப் படுத்தப்படுவதுதான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, எனக்கு தெரிந்த ஒரு திருநங்கையின் மனக்குமுறல்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s