மப்றூக்
உனக்கும் எனக்குமிடையிலான
தூரங்களின் தவிப்புகளால்
ஒரு கவிதை செய்து
நான் பாடுவேன்!
•
இரண்டு பாடல்களுக்கிடைப்பட்ட
மௌன வெளி
பிரித்தறிய முடியாததோர் ராகத்தில்
உரத்துச் சொல்லும்
உன்னை எனக்கு!
•
தாமரையின் வரிகளுக்குள்
உன் காதல்
தலைகாட்டி மறைவதுவும்
சிலவேளை
தலைகீழாய் தொங்குவதும்…
இசைத்தட்டின் ஓடையினுள்
தேங்கிப்போயிற்று மனசு.
•
உன்னிடமிருந்து திருடப்பட்ட
ஒற்றை மல்லிகை,
முடிக்கப்படாத சில கவிதைகள்,
சொல்லி மகிழ உன்னோடு சேதிகள்…
சேமித்து வைத்திருக்கிறது மனசு!
எப்போது உன் விடுமுறை?
•
இதயம் கழற்றி வைத்து
‘காற்றில்’ நீந்தும்
என் துயர் நிறைந்த இரவுகளின்
கடைசித் துளி ஆறுதலும்
கரைந்து போயிற்று உன்னோடு…!
•
இப்போதெல்லாம்
ஒலிக்குறியாய் நதிகள்
என்மீது கொட்டும்
ஒவ்வொரு கணப்பொழுதும்
என் தாகிப்பு இரட்டிப்பாவதை
அறிவாயா நீ?
•
நட்சத்திரங்களை வேட்டையாடி
கொறித்துக் கொண்டிருக்கிறது
கோபங்கொண்ட என் ஞாகங்கள்.
•
‘சந்திரனை’ தொலைத்த
இரவுக்கு
உன் ஊரில்
என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்??
(தடைசெய்யப்பட்ட கவிதை தொகுப்பிலிருந்து…)
adaadaaa!!
//
அடடாக்களுக்கு அர்த்தங்கள் பல!
இந்ந ‘அடடா’ வுக்கு என்ன அர்த்தமோ?
ஓ அதுவா. நல்ல கவிதையை இந்தளவு நாளும் மிஸ்பண்ணியிருந்தனே என்றதன் அர்த்தம். உடனடியாக எனது உயிர் நண்பர் ஒருவருக்கு கொப்பி பேஸ்ற் பண்ணி அனுப்பியும் இருந்தேன். உங்கள் பக்கத்தையும் அறிமுகம் செய்துவைத்தேன்.
dear,supero super