இரண்டு முட்டாள்களுக்கிடையில் நடைபெறும் உரையாடலாய் அர்த்தமற்றுக் கரைகிறது பொழுதுகள் சிலவேளை!
எழுத்துக்களையும், இலக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள இங்கு எவருமில்லை. இருந்தாலும் அவரவர் பற்றிப் பேசிப் பேசிப் பெருமை தீர்க்கவே பொழுதுகள் போதாமலிருக்கின்றன!
இந்த லட்சணத்தில் எதைப் பேசுவது…. எங்கே பேசுவது?
அதுதான் வலைப் பக்கம் வந்தேன். அனுபவங்களையும், படைப்புக்களையும் பதிந்து கொள்வதும்… பகிர்ந்து கொள்வதும் அலாதியான விடயம்தான்!
0
எழுதுவதற்கு நல்ல களமில்லை என்பது இப்போதுள்ள மிகப்பெரும் பிரச்சனை. நண்பர் ஒருவர் கவலைப்பட்டார் தனது கவிதையொன்றை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகை, செய்தி மாதிரி பிரசுரித்து விட்டதாக….!
மிகப் பெரும் அத்து மீறல், குற்றமும் கூட – ஒரு நல்ல படைப்பை இவ்வாறு மோசமாகப் பிரசுரிப்பதென்பது!
ஆக – வலையில் எழுதுவது வாசியானது! நானே ராஜா… நானே மந்திரி!!
எழுதுவது என்பது துறையாகி பின்னர் தொழிலாகவும் போயிற்று! வாசிக்காமலும், எழுதாமலும் இருக்கவே முடியாது என்பது மிகப் பெரும் பலஹீனம் எனது!
– மப்றூக் –
mabrook anna super i need to talk to you.
//
நன்றி சஞ்சீபன்!
கட்டாயம் பேசுங்கள்.
ஆதங்கங்களைப் பதிவுசெய்யாமல் போகும்போது ஏற்படுகிற மன உளைச்சல் பற்றி புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியும். இன்றைய பத்திரிகைகளில் இவர்கள் இல்லை. தொடரட்டும் வெப் எழுத்து.
Mabrook
முடிந்தால் உங்களை பற்றிய அறிமுகத்தை பதிவிக்கலாமே..
தொடருங்கள் இது பற்றி நிறைய பேசலாம்.தனிமை. இதை எங்கு கொண்டு சென்று தொலைப்பது? சந்தோசங்களை தொலைத்ததால் தனிமை நம்வசமானதா? அல்லது புத்தகமும் பேனாவுமாய் வாழ்ந்ததாலா? எது உண்மை?இவற்றோடு மட்டுமே வாழ்ந்ததால் சந்தோசங்களை நண்பர்களை தொலைத்தோமா? ஒரு சமயம் அதாயும் மறுசமயம் மற்றதாயும் தோற்றம் தருகிறதே. ஆனாலும் ஏதோ பேனாவும் புத்தககுவியல்களும் சந்தோசம் தருகிறது நமக்கு. ஓ நமக்கு என்று விட்டோனோ. இது எத்தனை பேருக்கு சாத்தியம். என்றொரு கேள்வி மறுபுறம். எனக்கு என்றே எழுதிறேனே. சரி தொடருங்கள் இது பற்றிய பேச்சை. கேட்போமே.
Very nice pls keep it go your way………..
வணக்கம் மப்றூக் அண்ணா,
உங்களை வலைப்பதிவில் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி.
எழுதி வைக்கப்படாத்தாவை எவையும் நிலைத்ததாக சரித்ரம் இல்லை.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
–வதீஸ் வருணன்–
வணக்கம் மப்றூக் அண்ணா,
உங்களை வலைப்பதிவில் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி எழுதி வைக்கப்படாத எவையும் நிலைத்ததாக சரித்த்திரம் இல்லை. எனவே தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.
–வதீஸ்வருணன்–
வணக்கம் மப்றூக் அண்ணா!
அருகிலிருந்து ரசித்தவற்றை இப்போது தொலைவிலிருந்து பார்க்கும் நிலையைக் காலம் தந்தாலும், இந்த வலைப்பக்கம் ஞாபங்களைக் கிளறிவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வானொலியில் இறவாதகாலங்களைக் கேட்க முடியாவிட்டாலும், எழுத்துருவில் பாப்பதில் ஒரு நிறைவு. தொடர்ச்சியான உங்களுடைய எழுத்துக்களை எதிர்பார்த்து, வாழ்த்துக்களோடு…
என்றும் அன்புடன்
-கிருஷ்ணா-