காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மேய்ப்பர்களின் கூத்துமேடை! 24 மார்ச் 2014

Filed under: அரசியல் — Mabrook @ 11:09 முப

color-dotமப்றூக்

Voting‘நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்’ என்பார்கள். ஆனால், சிலர் வேஷம் போடாமலேயே குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் குரைப்பதற்காகவே நாய் வேஷங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இந்த வேஷங்களை நிஜம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். வேறுசிலர் – நமது வீடுகளைக் காப்பதற்காகவே, இந்த ‘நாய்’கள் குரைத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், நாடகம் முடியும் போது, தமது வேஷங்களை இந்த ‘நாய்கள்’ கலைத்து விட்டு, குரைப்பதை நிறுத்தி விடும் என்பதுதான் இங்குள்ள பெரும் உண்மையாகும்.
இன்னும் வாசிக்க….

Advertisements
 

மந்தையிலிருந்து விலகும் ஆடுகள்! 16 மார்ச் 2014

Filed under: அரசியல் — Mabrook @ 10:06 முப

color-dot மப்றூக்

‘ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும்போது மந்தையிலிருந்து

Ziras - 001

சிராஸ்

விலகிக் கொள்கின்றன’ என்பது கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற வாசகமாகும்.

அண்மைக் காலமாக, அரசியல் கட்சிகள் என்கிற மந்தைகளிலிருந்து சில ஆடுகள் அடுக்கடுக்காக விலகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவ்வாறு மந்தைகளிலிருந்து விலகும் ஆடுகள் – உண்மையாகவே, தம்மை ஆடுகள் என்பதை உணர்ந்து கொண்டனவா என்று புரியவில்லை. ஏனெனில், தாங்கள் ‘யார்’ என்பதை உணர்ந்து கொண்டு, மந்தையிலிருந்து வெளியேறும் ஆடுகள் – இன்னுமொரு மந்தைக் கூட்டத்துடன் இணைந்து கொள்வதென்பது சாத்தியங்கள் குறைந்ததொரு செயற்பாடாகும்.

இருந்தபோதும், கடந்த வாரங்களில் தேசிய காங்கிரசிலிருந்து விலகிக் கொண்ட கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் – முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார். இன்னும் வாசிக்க….

 

ஊதி அணைக்க வேண்டிய நெருப்பு! 22 பிப்ரவரி 2014

Filed under: அரசியல் — Mabrook @ 6:00 பிப

color-dotமப்றூக்

ட்டத்துக்கு கருணையில்லை என்பார்கள். சட்டத்தின் வழியாக Tharvai roadவழங்கப்படும் நீதியும் அப்படித்தான். ஆனால், நியாயம் – வேறு விதமானது. அது – மனச்சாட்சியின் அடிப்படையில் செயற்படும். நியாயத்துக்கு கருணையிருக்கின்றது. நீதி என்பது சட்டப் புத்தகத்துக்குள் மட்டுமே நின்று செயற்படும். நியாயத்தின் எல்லை விசாலமானது.

கல்முனை மநாகர சபை எல்லைக்குட்பட்ட வீதியொன்றுக்கு பெயர் சூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும், அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிகச் சாதாரணமான, வீதி விவகாரமொன்று – அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம், நியாயத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய இந்த விடயத்தினை, சட்டம் – நீதியின் அடிப்படையில் கையாள நினைத்ததால், விவகாரம் – விகாரமடைந்திருக்கிறது.
இன்னும் வாசிக்க….

 

சூது கவ்வும்! 29 ஒக்ரோபர் 2013

Filed under: அரசியல் — Mabrook @ 3:27 பிப

color-dotமப்றூக்
Casino‘சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்’

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூதாட்டம் குறித்து வள்ளுவர் சொல்லி வைத்த குறள்தான் மேலே நீங்கள் படித்தது. ‘கீழ்நிலை அடைந்து, சீரழிந்து வறுமை பெருகுவதற்கு – சூதாட்டத்தை விட, வேறொன்றும் இல்லை‘ என்பது – அதன் பொருளாகும்.

சூதாட்டத்துக்கு ஆயிரத்தெட்டு முகங்களும், பெயர்களும் உள்ளன. மகாபாரதத்தில் பகடைக் காய்களால் உருட்டி ஆடப்பட்டது, இன்று – கசினோவாக நவீனமடைந்து நிற்கிறது.
இன்னும் வாசிக்க….

 

ரெட்டைச் சுழி! 7 ஒக்ரோபர் 2013

Filed under: கிறுக்கல் மூலை — Mabrook @ 6:23 பிப

color-dotமப்றூக்

விஞ்ஞானத்தை மிஞ்சிய கதை

6எழுத்தாளர் ‘குறூசு’க்கு அந்த சந்தேகம் சரியாக எப்போது தோன்றியது என்று தெரியவில்லை.

ஆனால், தனக்கு ஏற்படும் அந்த சந்தேகம் உண்மைதான் என்று ‘குறூஸ்‘ தனக்கு நெருக்கமானவர்களிடம் அழுது புலம்புவார்.

தனக்கு – தந்தையர் இருவராக இருப்பார்களோ என்பதுதான் ‘குறூசி’ன் சந்தேகமாகும்.

விஞ்ஞான ரீதியாக ஒருவருக்கு – ஒரு தந்தைக்கு மேல் இருக்க முடியாது என்பதை எவ்வளவுதான் விளக்கிச் சொல்லியும் ‘குறூசு’க்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

“விஞ்ஞான ரீதியாக இல்லா விட்டாலும், சிலவேளை – வானியல், புவியியல் ரீதியாக இரண்டு தந்தையர்கள் இருக்க மாட்டார்களா?” என – ‘குறூஸ்’ நம்மிடம் திருப்பிக் கேட்பார்.
இன்னும் வாசிக்க….

 

நாட்டாமையின் இரண்டு நாய்கள்! 26 ஜூலை 2013

Filed under: கிறுக்கல் மூலை — Mabrook @ 1:42 முப

color-dotமப்றூக்

முதலில் இதை நீங்கள் கதை என்று நம்ப வேண்டும்

dog - 06ந்த ஊர் நாட்டாமையிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவை நாட்டாமையால் வளர்க்கப்பட்ட நாய்களல்ல. இடையில் வந்து ஒட்டிக் கொண்டவை.

நாய்கள் என்று சொல்வதால் – அவை அல்சஸன், பொமேரியன் போலெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்து விடக்கூடாது. இரண்டும் வழிநாய்கள்.  முதல் நாய் நன்றாகக் கொழுத்தது. ஊரில் கிடக்கும் அழுக்குகளையெல்லாம் ஒன்று விடாமல் தின்னும். அதிலும் மலம் என்றால் அதற்கு உயிர். மற்றையதுக்கு கொஞ்சம் முடம். முதல் நாயின் வால் பிடித்துக் கொண்டு திரிவதே அதற்குத் தொழில்.
இன்னும் வாசிக்க….

 

தெ.கி.பல்கலைக்கழகம்: கற்க மறந்த பாடம்! 20 ஏப்ரல் 2013

Filed under: அரசியல் — Mabrook @ 1:23 பிப

 color-dotதம்பி
SEUSL - Logoரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிம் (Politics is the last refuge of the scoundrels) என்றார் சாமுவல் ஜோன்சன். இதை அவர் சொல்லி 250 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக, படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் முதல் புகலிடமாக அரசியல் இன்று – மாறிப் போயுள்ளது!

மதஸ்தலங்களுக்குள்ளும், கல்விக் கூடங்களுக்குள்ளும் இன்றுள்ள கேடுகெட்ட அரசியல் நுழையக் கூடாது என்பதுதான் நல்ல மனிதர்களின் விருப்பமாகும். ஆனால், அரசியல் என்கிற பிராணி தனது மூக்கை – இந்த இரண்டு இடங்களிலும்தான் முதலில் நுழைக்கத் தொடங்குகிறது.
இன்னும் வாசிக்க….