காற்று

வேட்டை!
மப்றூக்

சில பாடல்கள் சில முகங்களை ஞாபகப்படுத்தும், சில முகங்கள் சில பாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனால், இப்போதெல்லாம் கேட்கும் எல்லாப்பாடல்களும் உன்னையே ஞாபகப்படுத்துகின்றன.

ஆனாலும், சந்தோசப்பாடல்களில் வெட்கத்துடன் தலைகாட்டி விட்டு மட்டுமே செல்லுகின்ற நீ, சோகப்பாடல்களிலோ சீவியம் நடத்துகின்றாய்!

உன் காதல் கடிதங்களில் கூட, அதிகமாய் நீ அனுப்பி வைத்ததெல்லாம் கண்ணீரைத்தானே!

பாலைவனைத்தில் தனித்தலையும் பசிகொண்டதொரு ஒட்டகம் மாதிரி, உன்னைத் தேடியலைகிறேன். நிழலாய்க் கூட நீ வருகிறாயில்லை?

காதல் இத்தனை சுயநலமிக்கதென்றால் உன்னைச் சந்தித்திருக்கவே மாட்டேன்!

உண்மையில் இந்த வலியை காதல்தான் தருகின்றதா இல்லை நீ தருகிறாயா?

ஓடி ஒளிய இடமற்றதொரு பரந்த வெளியினில்,  கழுகளால் விரட்டப்படும் ஒரு கோழிக்குஞ்சு போல், உன் நினைவுகளால் நான் வேட்டையாடப்படுகின்றேன்!

எரிகிறது என் இரவுகள்! நீயோ பனிப்பூக்களோடு விளையாடிக் கொண்டிருப்பாய்!

நீ சிரித்தது, நீ சினந்தது

நீ அழுதது, நீ அணைத்தது

ஒற்றை வார்த்தை சொல்லாமல்

நீ மறைந்தது, மறந்தது

இதில் – எதை

காதல் என்கிறாய்??

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

காதலின் குறுக்கெழுத்து!
மப்றூக்

சிறுவர்களின் பெருநாட்களைப் போல மனசு கிடந்து குதூகலிக்கின்றது,

இன்று உன் பிறந்த நாள் என்பதால்!

ஆணின் விலா எலும்பிலிருந்தே அவனுக்கான பெண் படைக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே. அப்படியென்றால், நீ எனது அங்கமா? நீ என் உடற் கூறா?

நீ என்பது நானா? நினைத்துப் பார்க்கப் பார்க்க நெஞ்சப் பரப்பெல்லாம் இனிப்புக்கசிகிறது.

முன்பெல்லாம் காதல் வயப்பட்டவர்களின் நடத்தைகளை சிறுபிள்ளைத் தனமானதென நான் நண்பர்களிடம் சொல்லி நகைத்ததுண்டு. காதலியின் அல்லது காதலனின் கைபட்ட காய்ந்து போன ரோசாவைக்கூட, ஒளித்து வைத்துப் பாதுகாக்கும் நடத்தைகளை கேலி செய்ததுண்டு.

ஆனால், இப்போதெல்லாம், நீ அனுப்பி வைக்கும் கடித உறைகளைக் கூட, கவனமாக வைத்திருக்கும் என்னை நினைக்க… ஆச்சரியக் குறிகளால் நான் நிறைந்தே போகிறேன்!

உன் பிறந்த தினத்துக்கு எதைப் பரிசளிப்பது என்பதிலேயே பல இரவுகள் தூங்காமல் கழிந்து போயிற்று! என் காதலை ஒரு ரோஜாவால், ஒரு கண்ணாடி பொம்மையால், அல்லது ஒரு கைக்குட்டையால் வெளிப்படுத்த முடியும் என்றால் அது காதலாகவே இருக்க முடியாது!

உன் பிறந்த நாளுக்காக நான் நேற்று இரவு எழுதத் தொடங்கிய கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் தமிழைத் தவமிருந்த கதை உனக்குத் தெரியுமா??

பாதி இரவையும், முழு அதிகாலையையும் நான் கடன்வாங்கியே

உனக்கான  நேற்றைய கடிதத்தின் ஒற்றைப் பக்கத்தை எழுதி முடித்தேன்!

நான் இடைவெளி

பொருத்தமான வார்த்தை நீ!

உன்னைப் பொறுக்கி

என்னை நிரப்பிப் போயிற்று

காதல்!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

நாணம்!
மப்றூக்

சில வேளை உன் நாணத்தை என்னால் ரசிக்க முடியவில்லை!

இன்று முன்னிரவில் உன்னைச் சந்தித்தபோது, வெறுமனே நிலம் பார்த்து நீ வெட்கப்பட்டது, வெறும் அபத்தம் என்றே சொல்வேன் காதலி!

ஒரு தீவிரவாதி ராணுவக் காவலரண்களைக் கடப்பது போல, தடைகள் கடந்து உன்னைச் சந்திக்க வந்தால்… நீ மௌனங்களைத்தான் அதிகம் தருகிறாய்!

ஆயிரம் பேச வேண்டும் என வரும் எனக்கு, ஒரு யாசகனுக்கு கொடுப்பது போலாயினும் சில வார்த்தைகளை நீ அன்பளித்திருக்கலாம்!

‘வேறென்ன’ என்று – இருவரும் மாறி மாறிக் கேட்டது தவிர வேறென்ன இருந்தது நம் சந்திப்பில்?

சிலவேளைகளில், உன் நாணத்தைக் கட்டுடைக்கும் கலை அறியாமல்,

நானும் – வார்த்தைகளின்றி உன்னுடன் தவித்து விட்டே திரும்புகிறேன்.

காதலில் சில சமயம் பேசிக்கொண்டேயிருப்பது சுகமானது.

சில சமயம் பேசாமல் இருப்பதே சுகம்!!

ஆனால், நீயோ ஒரு வவ்வால் மாதிரி தலை கீழாய் நிற்கிறாய்.

ஆம், பேச வேண்டிய சமயங்களில் பேசாமல் இருக்கின்றாய்!!

என்னதான் நாணம் பெண்ணுக்கு அழகென்றாலும்,

இன்றைய உன் நாணத்தை என்னால் ரசிக்கவே முடியவில்லை!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

அழகிய பொய்கள்!
மப்றூக்

காதலை முதலில் வெளிப்படுத்தியவர்கள் பெண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கணக்கிட்டால், அது பெரியதொரு தொகையை நமக்குத் தராது! பெண்கள் நாணம் அதிகம் கொண்டவர்கள், அதுதான் இதற்கான காரணம் என்று இதற்கு வியாக்கியானம் வேறு வைத்திருக்கிறார்கள் சிலர்!

ஆண்கள்தான் தமது காதலை முந்திக் கொண்டு, அதிகமாய் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இதற்குக் காரணம் ஆண்களிடமுள்ள அளவுகடந்த தைரியம் அல்லது வீரம்தான் என்று வாதிடுகின்றனர் வேறு சிலர்!!

மேலேயுள்ள காரணங்கள் இரண்டோடும் எனக்கு உடன்பாடுகள் இல்லை. அப்படியென்றால் தனது காதலை முதலில் சொல்லும் பெண், நாணம் கெட்டவளா? காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் ஆண், தைரியமற்றவனா?

சொல்லப்படாத காதல்கள் கதைகள் அதிகமாய் பெண்களிடம்தான் உள்ளன. எங்கே நான் என் காதலை இழந்து விடுவேனோ எனும் பயத்தில்தான் ஆண்கள் தமது காதலை முந்திக் கொண்டு சொல்லி விடுகிறார்கள்.

காதலைச் சொல்வதில் பெண்கள் ஆமை போலானவர்கள்

ஆண்கள் கோழிகள் மாதிரி!

ஆயிரம் கனவுகள் மனசுக்குள் கிடந்தாலும், பெண்கள் அதை முதலில் சொல்வதேயில்லை. ஆனால், ஆண்கள் தமது காதல் குறித்த ஒற்றைக் கனவையே தனது காதலுக்குரியவளிடம் ஒப்புவித்து விடுகின்றனர்!

எங்கே நான் காதலைச் சொல்லப்போக, அது மறுக்கப்பட்டு விடுமோ? அப்படி மறுக்கப்பட்டால், அது எனக்கு அவமானமில்லையா என்பது பெண்ணின் முன்னெச்செரிக்கை மிகுந்த கவலை! அவமானப்பட்டாலும் பரவாயில்லை மனசுக்குப் பிடித்த அவளிடம் காதலை ஒப்புவித்து விட வேண்டும் என்பது ஆணின் கவலை!

பெண்கள் காதலை விடவும் கௌரவத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்.

ஆண்களோ, காதலுக்காக கொளரவத்தைக் கூட, தூக்கி எறிபவர்கள்!

முதன் முதலில் எனக்குள் கிடந்த காதலை நான்தான் சொல்லியனுப்பினேன்!

காதலை மிக அதிகமாக நேசிப்பவர்கள் பெண்கள்தான் என்பது – உண்மையாகவே, பெண்களைச் சந்தோசப்படுத்த ஆண்கள் கூறும் அழகிய பொய்கள்!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

பச்சையழகு!
மப்றூக்

உலகிலுள்ள நிறங்களில் உன்னதமானது பச்சை நிறம்தான்!

பச்சை – குளிர்மையைக் கொண்டது. பச்சை ஈரம் நிறைந்தது!!

மனதை வருடி ஆழ்ந்த உறக்கம் தரும் பண்புகள் கொண்டது இந்த பச்சை நிறம்.

வைரமுத்துவின் பாசையில் சொன்னால்…

இச்சை மூட்டுவது பச்சை நிறம்தான்!

அதனால்தான், படுக்கையறைக்கு ஏற்ற நிறம் பச்சைதான் என்கிறார்கள்.

பச்சை என்பது களங்கமில்லா நிறம். அதனால்தான், வெளிப்படையான பேச்சுக்களை பச்சையானதென்கிறார்கள்!

‘பச்சைப் பொய்’ என்பதில் வருகின்ற, பச்சைக்கான அர்த்தம் – முழுமை அல்லது முழுசு என்று பொருளாய் வரும்! ஆக, பச்சை என்பது முழுமை!

பச்சை நிறம் என்பது, அங்கீகாரத்தின் அடையாளம்! அதனால்தான் போக்குவரத்தின் போது கூட, போ எனும் சமிக்ஞைக்காய் பச்சையைப் பாவிக்கின்றனர்.

பச்சை என்பது கறைகளற்றது. அதனால்தான், குழந்தைகளை நாம், ‘பச்சைக்’குழந்தை என்று அடைமொழியால் அழைக்கின்றோம்!

பச்சையுடன் மஞ்சள் சேர்த்தால் நீல நிறம் கிடைக்கும்! மஞ்சள் என்பது மங்கலமானது, அது உற்சாகம் தரும் பண்பினைக் கொண்டது. நீல நிறம் என்பதோ மனதுக்கு எப்போதும் அமைதியைக் கொடுக்குமாம். ஆக, பச்சையுடன் தொடர்புபட்டாலே சிறப்புகள் வந்து சேருகிறது!

பச்சைத் தண்ணீர், பச்சைக் குழந்தை என்பது மாதிரி…  பச்சையழகானவள் – நீ, பச்சையழகானது – நம் காதல்!!

உனக்குப் பிடித்த நிறம் பச்சையென்று நேற்று நீ சொன்ன பின்னர், இப்படித்தான் பச்சை நிறம் பற்றி பெருமை பேசிக் கொள்கிறது மனசு!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

விதி!
மப்றூக்

நான் காதலால் கொல்லப்பட்டுக் கிடப்பதாக – நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்!

அது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்பது பற்றி இப்போது ஞாபகமில்லை. ஆனால், ஒரு கொலையை நிகழ்த்திய பரபரப்பேயின்றி காதல் என் உடலருகே நின்றது.

என் உடலுக்கருகில் நீயும் நின்றாய், ஆனால் என் உடலைக் காட்டி அது நானில்லை என்றாய். கனவைக் கண்டு கொண்டிருந்த நான் பதறிப்போனேன். உன்னை உருகி உருகி காதலித்த என்னை, நான் இல்லை என்று நீ சொன்னதால் – நான் அதிர்ந்து போனேன்.

நீ நேசித்தது  எனது ஆத்மாவை என்றாய். ஆத்மா என்பது வெற்று உடலல்ல என்றாய். என்னை கொலை செய்த காதல் அனைத்தையும் கேட்டு நின்றது.

அப்படியென்றால் உடல் என்பது நானில்லையா? ஆத்மா என்பது என்னிலிருக்கும் வேறொன்றா? அல்லது ஆத்மாதான் நானா? சிலவேளை, உடலென்பதுதான் நான் என்று எண்ணிக்கொண்டிருப்பது எனது மூட நம்பிக்கையா?

நீ  எனது பெயரைச் சொல்லி அழைத்தாய் – வேறேதோ திசையைப் பார்த்து! அந்தக் கணத்தில் எனது உடல் உன்னை ஏக்கத்துடன் பார்த்ததை நீ கவனிக்கவேயில்லை!

கூடியிருந்தவர்கள் நிகழ்ந்தது ஒரு விபத்தென்று கூறி, காதலை மன்னித்தார்கள்!

காதல் இன்னுமொரு கொலையை நிகழ்த்தும் தீர்மானத்தோடு அங்கிருந்து மிதந்து சென்றது!

நீ என் ஆத்மாவை அழைத்துக் கொண்டேயிருந்தாய்.

எனது உடல் தனித்துக் கிடந்தது.

அதில் குந்த வந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தது விதியின் கரம்!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

எரிதல்!
மப்றூக்

இன்று உன் திருமணம்!

ஒரே நேரத்தில் சொர்க்கத்தை உனக்கும், நரகை எனக்கும் தந்து போக, ஒரே நிகழ்வால் எப்படியடி முடிந்தது?

இது தோல்வியா? அப்படியென்றால் யாருக்கு?

இது அவமானமா? அப்படியென்றால் எனக்கா, உனக்கா?

இது துயரமா? அப்படியென்றால் எவர் தந்தது?

துக்கத்தை மறைத்து சாதாரணமாக இருப்பதாய் காண்பிப்பதற்கான எனது ஒவ்வொரு அசைவிலும் செத்துச் செத்துப் பிழைத்தேன் இன்று!

இரவு – ஊரே உறங்கிப்போயிற்று. ஆனால், இன்னும் நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன்.

பூமி – எதிர்த் திசையில் சுற்றுவது போல உணர்கிறது மனம்!

எல்லாம் பொய் போலவே தெரிகின்றன!!

நானும், நீயும் நமக்காக கண்ட கனவுகள் அருவருப்புகள் நிறைந்த வாசத்தோடு காற்றில் கரைந்து போயின. நமக்குள் நிகழாமல் போன திருமணம் மட்டும் சாத்தான்களின் கல்லறைகளில் நிச்சயிக்கப்பட்டிருக்க வேண்டும்!

எவருக்கும் தெரியாமல் சாமங்கள் கடந்த பிறகு பாரம் தீர அழுதேன்! அழுதேன்!! அழுது கொண்டேயிருந்தேன்!!! நீ தந்த காதலை விடவும், இப்போது அழுகை எனக்கு ஆறுதலாகிறது.

உன் பிரிவை விடவும், நீ தந்த ஏமாற்றங்கள்தான் கொடுமை நிறைந்தவை!

‘காற்றுப்பட்டால் கல்லும் கரையும், காதல் கரையாது’ என்கின்ற சினிமாப் பாடல் வரிகளை, உன் கடிதமொன்றின் இறுதியில் எழுதி, சத்தியங்களால் முடித்து அனுப்பி வைத்திருந்தாயே ஞாபகமிருக்கிறதா?

சொல்லடி, பொய்த்துப் போனது பாடலா? அல்லது உன் சத்தியங்களா??

உன்னை மறக்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருப்பது போல், இந்த இரவில் நீயும் என்னை சிலவேளை நினைத்துக் கொண்டிருக்கலாம் என்று இன்னும் எண்ணித் தொலைக்கும் இந்த மனசின் அப்பாவித்தனத்தைத்தான் காதல் என்பதா?

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

நிறைவேறாத பிரார்த்தனைகள்!
மப்றூக்

உனது திருமணத்துக்குப் பிறகு நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒரு விபத்தாகக் கூட உன்னை நான் சந்தித்து விடக் கூடாது என்பதே!

ஆனால், நமது விடயத்தில் இறைவன் எனது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதேயில்லை! இன்று பிந்திய மாலைப் பொழுதில் அல்லது முன்னிரவின் மங்கல் வேளையில் உன்னை நான் கண்டேன்! அந்தக் கணம் உள்ளுக்குள் ஓருதரம் உயிர் உதறித் துடித்தது!

அது நீதான், கணவனுடன் கையில் குழந்தையோடு நின்ற உன்னைக் கடந்து வந்த பிறகுதான் கவனித்தேன், நீயும் எனது திசையையே பார்த்து நின்றாய்!

எத்தனை வருடங்களாயிற்று உன்னைப் பார்த்து. கடைசியாய் காதலர்களாகத்தான் பிரிந்தோம். இப்போது – அந்நியர்களாகச் சந்திக்கின்றோம்!

கையில் நீ வைத்திருந்த குழந்தை பற்றி உன் தோழியிடம் விசாரித்தேன். ஆண் பிள்ளையென்றாள். நிச்சயமாக தமிழ் சினிமாக் கதாநாயகிபோல் உன் குழந்தைக்கு நீ என் பெயரை வைத்திருக்க முடியாது என்று நம்புகிறேன்! தனக்குப் பிடித்த பெயரை தன் குழந்தைக்குச் சூட்டுகின்ற சுதந்திரத்தைக் கூட, இந்த சமூகம் உன்போல் பெண்களுக்கு கொடுக்கவில்லை என்பதை அறியாதவனில்லையடி நான்!

விசித்திரங்களால் நிறைந்தது வாழ்க்கை!

பேசிக்கொள்ள வேண்டுமென்கின்ற தவிப்போடு நாம் அலைந்து திரிந்த போது – சந்திப்புகள் நமக்குள் சாத்தியமற்றுப் போயின. இப்போது முகம் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் – பேசிக்கொள்ளத்தான் எதுவுமேயில்லை.

இரவில் இலை மூடித் தூங்கும் வாகை மரம், விடியலில் விரிவதைப் போல் – இன்று உன்னைக் கண்ட பிறகு, எனக்குள் காணாமல் போய்க்கிடந்த நினைவுகள் கண்விடுக்கத் துவங்கின!

காதலித்த காலத்தில் நீ எழுதிய கடிதங்களை ஒரு முறை தூசு தட்ட வேண்டும் போல் மனசு துடித்தது. தட்டினேன்! மோசமானதோர் அரசியல்வாதியைப் போல், உன் மடல்கள் முழுக்க நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே நிறைந்து கிடந்தன! என்னைப் பிரிந்தால் மறு கணமே இறந்து போய் விடுவேன் என்று ஒரு கடிதத்தில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தாய் நீ!

திரும்பத்திரும்ப படித்துப் பார்த்தபோது, அப்போதெல்லாம் நான் விழுந்து விழுந்து ரசித்த உன் காதல் கடிதங்களின் ஏராளமான வரிகள் இப்போது எனக்கு– கோமாளித்தனமாகவே தெரிந்தன!

இப்போது ஓர் ஆசை! உனக்கும் எனக்குமிடையில் தனியாக ஒரு சந்திப்பு நிகழ வேண்டும். அப்போது உன்னை கேட்பேன்,

”உண்மையில் நீ என்னைக் காதலித்தாயா?”

ஆனால், நமது விடயத்தில்தான் இறைவன் எனது ஆசைகளை நிறைவேற்றியதேயில்லையே

கனவில் வந்து                                                                        பொழிந்து விட்டுப் போன

மழை மாதிரி

தடயமற்றுப் போயிற்று…

தீராது என்று – நீ

சத்தியங்கள் செய்து தந்த

காதல்!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

காதலின் வயது!
மப்றூக்

நமது காதலுக்கு இன்றுடன் ஆறு வயது ஆகிறது!

குழந்தை என்றால் இது பாடசாலைக்கு சேர்க்கும் வயசு!!

என்னைப் போலவே குழந்தைகள் என்றால் உனக்கும் பிரியம் அதிகம் என்பதை அறிந்த போது, குழந்தையாகித் துள்ளிக் குதித்தது மனசு!

நாமும் ஏழு, எட்டுக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஒரு தடவை சொன்ன போது, வெட்கம் தாண்டி உன் விழிகளில் தெரிந்த ஆர்வம் குழந்தைகள் மீதான உன் ஆசை குறித்துச் சொன்னது!

குழந்தைகளை எங்கு கண்டாலும், அள்ளியெடுத்து நீ அணைத்துக் கொள்ளும் ஆவலைப் பார்த்த பிறகுதான், அழுக்குக் குழந்தைகளைக் கூட – நான் முத்தமிடத் தொடங்கினேன்.

அழுக்காயிருந்தாலும் – அழகு கெடாமலிருப்பவை பூவும், குழந்தைகளும்தானே!

பூக்களாலும் ஓடி விளையாட முடியும் என்பதை நீ குழந்தைகளுடன் கழிக்கும் சந்தோசக் கணங்களில்தான் அறிந்து கொள்கிறேன் என்று, நான் உனக்கு எழுதியனுப்பிய கடிதத்தைப் படித்து விட்டு, நீ பூப்போட்டு அனுப்பி வைத்தாயே ஒரு கைக்குட்டை… அது இன்னுமிருக்கிறதடி என்னிடம்!

கைக் குட்டைகள் எதற்கானவை?

வியர்வை ஒற்றவா?

அழுக்குத் துடைக்கவா?

இல்லை ஒரு நாகரீகத்துக்காக கையில் வைத்துக் கொள்ளவா?

எதற்காகவும் இருக்கலாம்,

ஆனால் நீ பரிசளித்த கைக்குட்டைகளோ, ஞாபகங்களை மீட்டுவதற்கானவை!

நீ அனுப்பி வைத்த ஓவ்வொரு கைக்குட்டைக்குள்ளும் தேங்கிக் கிடங்கின்றன,

காதல் நம்மைப் பற்றிப் பின்னி வைத்த ஓராயிரம் நினைவுகள்!!

கைக்குட்டைகளைப் பரிசளிக்கும் காதல் பிரிந்து போய்விடும் என்கின்ற ஐதீகம் மூளையின் எங்கோ ஒரு மூலையில் பயமுறுத்தினாலும், எனக்கென்று நீ தந்ததால் அவைகளைத் திருப்பி விட முடியவில்லை!

நமது காதலுக்கு ஆறு வயது ஆகிறது என்றால், காதல் என்பது இந்த பிரபஞ்சத்தில் மொத்தமாக எத்தனைதான் இருக்கிறது? எனக்கென்று, உனக்கென்று வேறு வேறானதா காதல்?

காதல் என்பது பன்மைகளாலானதா? அல்லது ஒருமையா? ஆதாம் – ஏவாளின் காதலும், நமது காதலும் ஒன்றில்லையா? காதல் நமக்குள் விளைகிறதா அல்லது நம்மில் தொற்றுகிறதா? காதலுக்குள் நாமிருக்கின்றோமா அல்லது நமக்குள் காதலிருக்கின்றதா?

உண்மையில், வயதுகளால் கணிக்கப்படக் கூடியதா காதல்? அல்லது அது காலவெளிகளுக்கப்பாலானதா?

நமது காதலுக்கு இன்றுடன் ஆறு வயதாகிறது என்பது சரிதானா? இல்லை காதலுக்குள் நாம் விழுந்து வருடங்கள் ஆறாகிறது என்பது சரியா?

நமது சராசரி  – சரிகளுக்கும் பிழைகளுக்கும் அர்த்தங்கள் வேறுவேறு ஆகிப்போகும் மாயக் கணங்களில்தான் துளிர்க்கத் துவங்குகிறது காதல்!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)

காதல் கடிதங்கள்!
மப்றூக்

தென்னிந்தியத் திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் பிரபல்யம் – ஏதோவொரு வீதத்தில் இங்கு வானொலி அறிவிப்பாளர்களுக்கு இருக்கின்றது அல்லது இருந்தது! அதிலும், சூரியன் எப்.எம். உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதன் அறிவிப்பாளர்களுக்கு நம்ப முடியாத ரசிகர் பட்டாளம் இருந்தது.

சூரியனின் ஆரம்ப காலங்களில் – ஒவ்வொரு நாளும் அறிவிப்பாளர்களைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்துக்கு ரசிகர்கள் வந்து கொண்டிருப்பார்கள். சில நாட்களில் பத்து, இருபது தடவைகள் நம்மைச் சந்திக்க ரசிகர்கள் வருவார்கள். புதிதில் இது சுவாரசியமாகத்தான் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அலுத்துவிட்டது.

ஒவ்வொரு தடவையும் வேலைகளை இடையில் விட்டுவிட்டு (அலுவலகத்தில் அறிவிப்பு மட்டும் வேலையல்ல, நிகழ்ச்சிகளுக்குத் தயாராவது, பாடல்களைத் தெரிவு செய்வது என்று ஆயிரம் வேலைகள் உள்ளன) வரவேற்பிடத்துக்குச் சென்று – நேயர்களுடன் பேசி, அவர்களுக்கு ஓட்டோகிராப் எழுதிக் கொடுத்து, சிலவேளைகளில் அவர்களுடன் போட்டோவுக்கு நின்று போஸ் கொடுத்துவிட்டு வருவதற்குள் போதும் என்றாகிவிடும்.

நேயர்கள் நேரடியாக வருவது ஒருபுறம் இருக்க – அலுவலகத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் இன்னொருபுறம்! சில நேயர்கள் தாம் பேச விரும்பும் அறிவிப்பாளரைப் பெயர் குறித்துக் கேட்பார்கள். சிலரின் புதினம் வித்தியாசமானது. அவர்களுக்கு யாராவது ஒரு அறிவிப்பாளருடன் பேசினால் சரி! தாங்கள் வானொலியில் கேட்கும் குரலுடன் தொலைபேசியில் பேசுவதில் அவர்களுக்கு அத்தனை ஆனந்தம்!

இப்படி வரும் நேயர்களின் அழைப்புகளும் பல சமயங்களில் அசௌகரியங்களைத் தருவதுண்டு. நாம் மிக முக்கியமான வேலைகளில் இருக்கும் போது வரும் அழைப்புக்கள் – நம்மை விடாது! கடைசியில், பேசி முடித்து வைக்கும் போது நமது முக்கியமான வேலையில் மண்விழுந்திருக்கும்.

எனக்கென்றால் நேயர்களுடனான தொடர்புகளில் பிடித்தமானது அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான். நேரடியாகச் சந்திப்பவர்களும், தொலைபேசியில் உரையாடுகின்றவர்களும் அநேகமாக ‘உங்கள் நிகழ்ச்சி பிரமாதம், உங்கள் குரல் நன்றாக இருக்கிறது’ என்கிற வகையறாக்கள். கடிதங்கள் அப்படியல்ல. அவற்றினை எழுதும் நபருக்கும் நமக்கும் நேரடித் தொடர்பிருக்காது என்பதால், அவை நம்மை விமர்சிக்க முயற்சிக்கும், நேர்மையாக இருக்கும்!

வானொலி நாட்களில் நேயர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் பழக்கமொன்று என்னிடமிருந்தது. கடிதங்களை எழுதுபவர்கள் இந்த மாதிரியானவர்கள்தான் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. பல வகைப்பட்டவர்களிடமிருந்தும் வரும். சில கடிதங்கள் வாழ்த்தி வரும், சில – நமது சின்னச் சின்ன தவறுகளைக் கூட எழுத்தில் படம் பிடித்துக் காட்டும். இன்னும் சில கடிதங்கள் நிகழ்ச்சிகளுக்கு அப்பால் நின்று பேசும். வேறு சில – காதல் கடிதங்களாக இருக்கும்!

நான் யாரோ ஒரு பெண்ணால் விரும்பப்படுகின்றேன் என்பது – ஒருவகையில் சந்தோசமான விடயம்தான். ஆனாலும், அந்தக் கடிதத்துக்குரிய பெண்மீது கடைசியில் பரிதாபமே ஏற்படும். வானொலில் அறிவிப்பாளனாக இருக்கும் ஒரேயொரு தகுதியை அடிப்படையாக வைத்து வரும் இந்தக் காதலை என்ன கணக்கில் சேர்ப்பது?!

சில காதல் கடிதங்களை நான் நேசித்திருக்கின்றேன் (கவனிக்க: கடிதங்களை மட்டும்தான்). காரணம், அந்தக் கடிதங்களின் மொழி நடை, கிண்டல், புத்திசாதுரியம் என்பவை ரசிக்கும் படியானவையாக இருக்கும்! சில கடிதங்கள் கண்டதும் கிழித்துப் போடும் வகையிலானவை!

அவள் – இரண்டாவது வகையான கடிதங்களை எழுதுபவள். அவளுக்கென்று ஒரு நிஜப்பெயர் இருக்கிறது. ஆனாலும், அவளை நான் உங்களுக்கு ‘அவள்’ என்றே அறிமுகம் செய்கிறேன்.

அவளிடமிருந்து வரும் கடிதங்கள் என்னைக் காதலிப்பதாகச் சொல்லும், நான் இல்லா விட்டால் வாழ்க்கையில்லை என்று அடம்பிடிக்கும், கட்டியணைக்கும் – முத்தங் கொடுக்கும்! ஆனாலும், அவளின் கடிதங்கள் ஏனோ என்னை ஈர்க்கவேயில்லை. வாரத்துக்கு ஆகக்குறைந்தது மூன்று கடிதங்காளவது அவளிடமிருந்து வரும். இடையில் தொலைபேசி அழைப்புக்கள் வேறு!

அலுவலக தொலைபேசிக்கு அவள் அடிக்கடி வருவாள். அது பெரும் தொல்லையாகி விட்டது.  அவளின் காதலும், குரலும் அலுவலகத்துக்கே பழக்கப்பட்டு விட்டது. அவள் என்னைக் கேட்டால் இல்லை என்று சொல்லி விடுங்கள் என்று அலுவலக நண்பர்களிடம் கூறி வைத்தேன். இல்லை என்றாலும் கேட்க மாட்டாள்! திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டேயிருப்பாள்!

திடீரென ஒருநாள் என் கைப்பேசிக்கு அவள் அழைத்தாள். பெண்ணின் குரலில் வழியும் யாரோ ஓர் ஆண் அறிவிப்பாளன் அவளுக்கு என் இலக்கத்தைக் கொடுத்திருந்தான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்! அவளிடம் எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தேன். அழைப்பெடுப்பதை அவள் நிறுத்தவேயில்லை. இடையில் எனது தொலைபேசி இலக்கத்தினையும் மாற்றினேன். புதிய இலக்கத்துக்குள்ளும் புகுந்து கொண்டாள். ஒரு நாள் நூற்றுக்கும் அதிகமான தடவை அவளிடமிருந்து அழைப்புக்கள் வந்தன. கோபம் தலைக்கேறியது. நாகரீகமற்ற வார்த்தைகளால் அவளைத் திட்டினேன். பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாகக் கூறினேன். சிரித்து விட்டு, ‘‘ஐ லவ் யு” என்றாள்!

இந்தப் பிரச்சினை குறித்து நடா அண்ணாவிடம் விபரமாகக் கூறினேன். பொலிஸில் முறையிடப் போவதாகச் சொன்னேன். சம்பந்தப்பட்ட நபர் ஒரு பெண் பிள்ளை என்பதால், அந்த முயற்சியில் இறங்க வேண்டாம் என்று நடா அண்ணா சொல்லி விட்டார்!

கடித உறையில் விலாசம் எழுதப்பட்டிருக்கும் கையெழுத்தை வைத்தே, அது அவளிடமிருந்து வரும் கடிதம்தான் என்பதை அலுவலகத்திலுள்ள அநேகர் இனங்காணத் தொடங்கினர். அவளிடமிருந்து வரும் கடிதங்களைப் படிப்பதை நான் நிறுத்தியிருந்தேன். அவளின் கடிதங்கள் அநாதரவாகக் கிடக்கும்.

இந்த காதல் கடித விவகாரத்தை வைத்து சூரியன் நண்பிகள் என்னை பகிடி பண்ணுவார்கள். ‘பாவம் மப்றூக் அந்தப் பிள்ளைக்கு வாழ்க்கை கொடுத்தால் என்னவாம்’ என்று சீண்டுவார்கள். நான் தூக்கியெறிந்த அவளின் கடிதங்களை என்னிடம் சொல்லி விட்டு  – நண்பிகள்  சத்தமாக நளினத்துடன் படிப்பார்கள். ஏனையோர் வளைத்திருந்து கேட்டுச் சிரிப்பார்கள். கடிதத்தில் அப்படி ரசம் சொட்டும்!!

இப்படித்தான் ஒரு நாள் – அவளிடமிருந்து வந்த கடித உறையை நண்பிகள் உடைத்தார்கள். உள்ளே ரத்தக் கையெழுத்துடன் ஒரு கடிதம்! வாசித்ததில் – அவளைக் காதலிப்பதாக நான் முடிவு சொல்ல வேண்டுமென்றும், அப்படியில்லாது போனால் – வீட்டைவிட்டு சூரியன் அலுவலகத்துக்கு ஓடி வந்து விடுவேன் என்றும் அதில் அவள் எழுதியிருந்தாள்! வழமைபோல், குப்பைக் கூடைக்குள் கடிதத்தை வீசி விட்டு – வேலையில் மூழ்கிப் போனேன்!

சனிக்கிழமை எனக்கு ஓய்வு நாள்! வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தேன். அறிவிப்பாளர் கௌரியின் கைப்பேசியிலிருந்து வந்த அழைப்பு என்னை எழுப்பியது! என்ன என்று கேட்டேன். அந்த காதல் கடிதங்களின் சொந்தக்காரி வீட்டை விட்டு ஓடிவந்து சூரியன் கலையகத்தில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிப்பதாகவும் கௌரி தாழ்ந்த குரலில் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!

சில கணங்கள் யோசித்தேன். அந்த விவகாரத்தை நான் கையாள விரும்பவில்லை. எனவே, அதை அலுவலக ரீதியாகக் கையாளும்படி கௌரியிடம் கூறினேன். அந்த நிலையிலும் என்னைப் பகிடி பண்ணிச் சிரித்தார் என் அன்புள்ள நண்பி கௌரி!

அன்று இரவு 07 மணிவரை அவள் சூரியன் வரவேற்பறையிலேயே இருந்திருக்கின்றாள். அங்கிருந்து செல்லுமாறு அவளை பலர் வேண்டிக் கொண்ட போதும் – அவள் அகலவில்லை! கடைசியில் பொலிஸாரின் உதவியுடன் கொழும்பிலிருந்த அவளின் உறவினர்களை அழைத்து அவளைப் பாரம் கொடுத்திருக்கின்றார்கள் அலுவலகத்து ஆட்கள்!

கௌரி சொல்லித்தான் இதையும் அறிந்து கொண்டேன்!

மறுநாள் – ஞாயிற்றுக்கிழமை! அலுவலகத்தில் ஆறுமணிவரை வேலை செய்து கொண்டிருந்தேன். பசித்தது. கீழே – சாப்பிட்டு வரச் சென்றிருந்தேன். அலுவலகத்துக்குத் திரும்பி வரும்போது ஏழு மணியிருக்கும்! வரவேற்பறையில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

என்னைக் கண்டதும் வரவேற்பு உத்தியோகத்தர் – ”மப்றூக் உங்களுக்குத்தான் விசிற்றஸ்” என்றார்! வந்திருந்தவர்களிடம் என்ன விடயம் என்று விசாரித்தேன். அப்போது அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆமாம், கடிதங்களின் சொந்தக்காரியும், அவளின் உறவு முறைப் பெண்ணும்தான் (இவரும் இளமையானவர். 35 வயதுக்குள் இருக்கும்) வந்திருந்தார்கள்.

எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. மிகவும் சத்தமாக, அவளைத் திட்டத் தொடங்கினேன். ஒரு பெண் பிள்ளை இப்படி நடந்து கொள்ளும்வரை வீட்டிலிருப்பவர்கள் என்ன செய்தார்கள் என்று, அவளின் உறவுக்காரப் பெண்ணையும்  திட்டினேன். மேலும், இப்படி அவள் நடந்து கொள்வதால் எனக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்தும் கூறினேன்.

அவளின் உறவுக்காரப் பெண் – அப்படியே அதிர்ந்து போனதை நான் அவதானித்தேன். அவர் என்னிடம் ‘‘தயவு செய்து சத்தம் போடாதீர்கள். நாங்களும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விடயத்தை மெதுவாகப் பேசுங்கள்” என்று கெஞ்சினார். நான் ஓரளவு நிதானமானேன்.

அந்த உறவுக்காரப் பெண்ணின் அருகில் உட்கார்ந்தேன். கடிதங்களின் சொந்தக்காரியின் காதல் விவகாரத்தை ஆதியிலிருந்து அந்தம் வரை விபரித்தேன். நான் சொல்வதையெல்லாம் அவர் வியப்பான முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். நான் அப்படியே பேச்சை நிறுத்தினேன். ‘‘கொஞ்சம் இருங்கள்” என்று கூறிவிட்டு – அலுவலகத்துக்குள் வந்தேன். அவளின்  ரத்தக் கடிதத்தை வீசி எறிந்த குப்பைக் கூடைக்குள் தேடினேன். அடியில் கிடந்தது. எடுத்துக் கொண்டு சென்று அவளின் உறவுக்காரப் பெண்ணிடம் காட்டினேன். அவர் அதை வாசித்து முடித்தபோது –  அந்தக் கடித்ததை அவள் பறித்தெடுத்தாள். துண்டு துண்டாகக் கிழித்தாள்.

அந்த உறவுக்காரப் பெண் என்னிடம் கூறினார்,  “மப்றூக் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். இவள் என்னை இங்கு அழைத்து வரும்போது, நீங்களும் இவளும் காதலிப்பதாகவும், அந்தக் காதலைச் சேர்த்து வைக்கும் படியும் என்னிடம் கேட்டுக்கொண்டார். வீட்டை விட்டு இவள் ஓடிவந்து விட்டதால் – எப்படியோ நல்லது நடக்கட்டும் என்பதற்காகத்தான் இவளைக் கூட்டிக் கொண்டு உங்களிடம் பேச வந்தேன். ஆனால், இவள் சொன்னவை அனைத்தும் பொய் என்று இப்போது புரிந்து கொண்டேன். உங்களை அசௌகரியப்படுத்திதற்கு என்னை மன்னித்து விடுங்கள்”என்றார்.

நான் அவரிடம் கனிவாகப் பேசத் தொடங்கினேன். எனது கோபத்தில் இருந்த நியாயங்களைக் கூறினேன். அவரை ஆரம்பத்தில் திட்டியதற்காக நானும் மனம் வருந்துவதாகத் தெரிவித்தேன். இவ்வளவு நடந்தபோதும் – கடிதங்களின் சொந்தக்காரி ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை!

திரும்பிப் போகும் போது மட்டும், ஒரு முறை…..  ஒரேயொருமுறை புன்னகைத்தாள்!

0

(சூரியனில்  ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)