காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கடலின் அக்கர போனோரே! April 25, 2008

கோப்பு வகை: பொதுவானவை — mabrook @ 2:14 மு.பகல்

உப்புக் கரிக்கும் மீனவர் வாழ்க்கை! 

color-dot.gifமப்றூக் 
ங்களுரில் ஓர் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றைப் போல் இலங்கையில் எங்கும் இல்லை என்று எங்கள் பெரியப்பா ஒருவர் அடிக்கடி கூறுவார். ஊரின் வயிற்றுப் பகுதியால் வலமிருந்து இடமாகக் கிடையாக ஓடும் இந்த ஆறு, ஊரினது ஆரம்ப எல்லையில் தொடங்கி நிறைவூ எல்லையில் முடிவடைகிறது! இப்படி ஊரின் ஆரம்பம், முடிவை தனது எல்லையாகக் கொண்டோடும் ஆறு, இலங்கையில் எங்கும் இல்லை என்பதே பெரியப்பாவின் வாதமாகும். 

இன்னும் வாசிக்க….

 

அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா:கோடைகளுக்குப் பின்னரான நாளின் மழை! ஜனவரி 3, 2008

கோப்பு வகை: பொதுவானவை — mabrook @ 3:46 பிற்பகல்

color-dot.gifமப்றூக்

baner1.jpgமாபெரும் கலாசார விழாவொன்றினை niyas.jpgவெற்றிகரமாகச் நடத்தி முடித்து விட்டு, தனக்கும் அதற்கும் சம்மந்தம் எதுவும் இல்லாதது மாதிரி அதற்கடுத்த நாட்களில் தனது அன்றாடக் காரியாலயக் கடமைகளில் மிகச்சாதராணமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் யூ.எல். நியாஸ்! விழா பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகம் சென்று செயலாளர் நியாஸின் அறைக் கதவைத் தட்ட, சிரித்த முகத்துடன் ‘வாங்க’ என்றார்!

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் கலை, இலக்கியவாதிகளினது மிக நீண்ட நாள் கனவாக இருந்த இந்த விழா ஒரு பெருநாள் மாதிரி நடந்து முடிந்ததில் எல்லோருக்கும் இரட்டிப்பு மகிழ்சி! கடந்த நொவம்பர் மாதம் 25 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாதான் இப்பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான முதல் கலாசார விழா என்கிறார்கள் நமது மூத்த கலைஞர்கள். 
இன்னும் வாசிக்க….

 

ஒன்பது எனும் இலக்கத்தினால் அழைக்கப்படும் அரவாணிகள் பற்றிய உரையாடல்! மே 10, 2007

கோப்பு வகை: பொதுவானவை — mabrook @ 8:40 பிற்பகல்

color-dot.gifமப்றூக்

alikal-1.jpgற்றே நளினத்துடனான முக மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்திப் பேசிக்கொண்டிருந்த ஒருவனை நண்பன் கேலியாக ‘பொன்ஸ்’ என்று பழித்தான்! நளினம் காட்டியவனும் விட்டபாடில்லை வேறோர் சொல் கொண்டு நண்பனுக்கு பதிலடித்தான்! (கவனிக்க: பதிலளித்தான் என்பதன் எழுத்துப் பிழையல்ல)

இந்த ‘பொன்ஸ்’ எனும் கீழ்நிலைச் சொல்லாடல் அரவாணிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. ஒன்பது எனும் இலக்கம் கொண்டும் (ஒம்போது எனும் உச்சரிப்புடன்)சிலர் இவர்களை அடையாளப்படுத்துவதுண்டு!

இன்னும் வாசிக்க….

 

இலங்கை: இன்னுமொரு சுனாமி வந்தாலும் பரவாயில்லை எனக்கொன்றும் ஆகிவிடக் கூடாது! மே 5, 2007

கோப்பு வகை: பொதுவானவை — mabrook @ 7:53 பிற்பகல்

சுனாமிக்குப் பின்னரான ஒரு சிலரின் மோசமான மனநிலைhouse-edit.jpg

 

color-dot.gifமப்றூக்
 

சுனாமி நிகழ்ந்து கடந்த டிசம்பர் 26 ஆம் திகதியுடன் இரண்டு வருடங்களாகின்றன. ஆனால் அது ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் இழப்புக்களிலிருந்து ஏராளமானோர் இன்னும் விடுபடவில்லை. உலகிலேயே சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று! சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அனர்த்தத்தின்போது இலங்கையில் உயிரிழந்ததாக கணிப்பீட்டு அறிக்கைகள் கூறுகின்றன. முழு நாட்டின் 70 வீதமான கரையோரப் பகுதியில் சுனாமி அழிவினை ஏற்படுத்தியிருந்தது.

இன்னும் வாசிக்க….