
சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சமரசம் செய்தது
ஆறு கோடைகளுக்கு முன்னதான
ஆவணி மாதமொன்றின்
இளவெயில் பொழுதினில்தான்
வெந்து கிடந்த எங்கள் ரணங்களை
அவர்கள் முன் விரித்து வைத்தோம்
வசிய வார்த்தைகளால்
வருடிக் கொடுத்தார்கள்

சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சமரசம் செய்தது
ஆறு கோடைகளுக்கு முன்னதான
ஆவணி மாதமொன்றின்
இளவெயில் பொழுதினில்தான்
வெந்து கிடந்த எங்கள் ரணங்களை
அவர்கள் முன் விரித்து வைத்தோம்
வசிய வார்த்தைகளால்
வருடிக் கொடுத்தார்கள்
![]()
நீ சந்திக்க வராத
அந்தக் கறுப்பு அந்திகளில்
மனசு சோம்பலாய்
வெறுமையோடு முனகும்!
•
ஆயினும் வழமை போல்
உன் சின்னத் தெருவின்
கிறவல் சிவப்பு
மௌனமாய் என்னோடு
சிரித்துக் கொள்ளும்!
யாராரோ வருவர், யாராரோ போவர்…
ஆனாலும் நீ வரவே மாட்டாய்!
•

( எனது தடைசெய்யப்பட்ட கவிதை தொகுப்பிலிருந்து….)

யாருண்டு?
இன்றின் என் துயரங்களை
ஒரு பாடல் கொண்டு
அன்றி,
ஒரு பருக்கையளவேனும்
பிரார்த்தனைத் துளி கொண்டு
துடைத்து விட யாருண்டு இங்கு?
•
சிறு கணமும் நிதானியாது
கருணையின்றி ஓர் உயிர் கொய்த
துயரத்தின் உறுத்தலில் தீய்க்கிறது நெஞ்சு!
•

உனக்கும் எனக்குமிடையிலான
தூரங்களின் தவிப்புகளால்
ஒரு கவிதை செய்து
நான் பாடுவேன்!
•
இரண்டு பாடல்களுக்கிடைப்பட்ட
மௌன வெளி
பிரித்தறிய முடியாததோர் ராகத்தில்
உரத்துச் சொல்லும்
உன்னை எனக்கு!
•