காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நான் – வெள்ளையன் – மலைப்பாம்பு! ஜூன் 16, 2009

கோப்பு வகை: ஆகாயத்தில் வசித்தவன — mabrook @ 10:41 மு.பகல்

மப்றூக்
mic-1வானொலியில் அறிவிப்பாளனாக வரவேண்டுமென்று நான் நிறையவே அலைந்திருக்கிறேன். கொழும்பில் வந்து நின்று பல நாள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறேன். பஸ்சுக்கு காசில்லாமல் கொழும்பில் நடந்து திரிந்திருக்கின்றேன் – என்றெல்லாம் சிலரால் கூறப்படும் துயர் நிறைந்த அனுபவங்கள் போல எவையும் என்னிடமில்லை! நான் வானொலியில் சேர்ந்த கதையானது கண்மூடித்திறப்பதற்குள் நிகழும் மாயாஜாலம் போல் அதிசயமானதொன்று! அதை பிறகு சொல்கிறேன்.

சூரியன் எப்.எம். யில் நான் சேர்ந்து கொண்டபோது, அங்கிருந்த அறிவிப்பாளர்களில் அனேகமானவர்கள் வித்தியாசமான திறமைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். முதன் முதலாக உலக வர்த்தக மையத்தின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள கோபுரத்தின் 35 ஆவது மாடியினுள் நுழைந்த போது நான் சுவாசித்த – காற்றை நறுமணப்படுத்தும் அந்த வாசம் இன்னும் என் ஞாபகங்களில் மிதக்கிறது.

அப்போது – என் ஆரம்ப நாட்களில் நான் ஒட்டிக் கொண்ட நண்பர்களில் வெள்ளையனும் முகுந்தனும் குறித்துச் சொல்லத்தக்கவர்கள். இருவரும் எனக்கு சிரேஷ்டமானோர். என்றாலும் நான் திறமைகளை வெளிப்படுத்தும் போது, மனம் நிறைந்து பாராட்டுவார்கள். என் பயிற்சிக் காலத்தின் போது அவர்களுடன்தான் அதிகமான நாட்களைக் கழித்திருக்கின்றேன். அவர்களுடன் இணைந்து ஒரு பயிற்சி அறிவிப்பாளனாக நிகழ்சிகளை வழங்கும் போது, அவர்களுக்கான சந்தர்ப்பங்களைக் கூட – எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அந்த நட்பு இப்போதும் தொடர்கிறது!
இன்னும் வாசிக்க….

 

ஆகாயத்தில் வசித்தவன் ஜூன் 13, 2009

கோப்பு வகை: ஆகாயத்தில் வசித்தவன — mabrook @ 5:40 பிற்பகல்

மப்றூக்

டகத்துறை என்பது பிரமிப்புகள் நிறைந்த ஓர் மாய உலகம்! அmicrophone-1.jpgது விரும்பும் போது ஒரு கைக்குட்டையைக் கம்பளமாகக் காட்டும். காட்டுத் தீயை, தீப் பொரியாகச் சுருக்கிச் சொல்லும்.

அதிலும் இலத்திரனியல் ஊடகங்கள் தமது நுகர்வாளனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்பதற்காகவே பல வேளைகளில் ஜாலங்களைக் கையாளுகின்றன!

குறிப்பாக நுகர்வோனை அதிசயிக்க வைப்பதில் வானொலிகளே முன்னிற்பவை. காரணம் அவை சத்தங்களால் கேட்போனின் மனதில் படிமங்களை உருவாக்கி விடக்கூடியவை. வாயினால் எழுப்பப்படும் சத்தமொன்றை புயலின் ஓசையென்று வானொலியினால் நம்ப வைத்து விட முடிகிறது!

இவ்வாறு பிரமிப்புகள் நிறைந்த இந்த ஊடக உலகம் போட்டிகள் நிறைந்தது. இங்குள்ள ஒவ்வொருவரும் தன்னை ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களால் புதிப்பித்துக் கொள்ளாவிடின் சக போட்டியாளனால் பின்தள்ளப்பட்டு விடுவார்! ஆக – இதை தேடல்கள் நிறைந்த உலகம் என்றும் குறிப்பிட முடியும்!
இன்னும் வாசிக்க….

 

நீ! செப்டம்பர் 13, 2008

கோப்பு வகை: இறவாத காலம் — mabrook @ 3:14 பிற்பகல்

color-dot.gifமப்றூக்

ன் பெயரை கொண்ட ஒருத்தியை இன்று சந்தித்தேன். உன்னிலும் இளமையாக அவள் இருந்தாள். ஆனால், உன்னைப்போலவே அவளும் அழகாயிருந்தாள்.

அவளை நான் அடிக்கடி காண்பதுண்டு. நினைத்துப் பார்த்தால், அவளுக்கும் உன் பெயர்தான் என்று நான் தெரிந்து கொண்ட இன்றுதான் அவளை நான் கவனிக்க ஆரம்பித்தேன். திறந்து சொன்னால், உன்பெயரை வைத்திருப்பதால்தான் அவள் எனக்கு அழகாக தெரிகின்றாளோ தெரியவில்லை.

காதல் நமக்குள் குழந்தைத்தனங்களைத்தான் அதிகம் விதைத்து விட்டுப் போகிறது. இல்லையென்கிறாயா?

இன்னும் வாசிக்க….

 

பலிபீடம்! செப்டம்பர் 10, 2008

கோப்பு வகை: இறவாத காலம் — mabrook @ 12:37 மு.பகல்

color-dot.gifமப்றூக்

காதல் துயரங்களாலானது. மகிழ்சி என்பது அது தருகின்ற மாயக்கனவுகள். காதலின் மறுபெயராய் கண்ணீரைச் சொல்லலாம். பூமியில் முளைத்த காதல்களெல்லாம் கண்ணீரால் வளர்ந்து கண்ணீராலேயே அழிந்து போயின!

உலகில் மிக மோசமான அடக்குமுறைக்குள்ளாகி வருவதில் காதலே முதலிடமானது. அது – பயணிக்கும்  பாதைகள் வலிகள் காய்க்கும் முள்மரங்கள் கொண்டவை!

இன்னும் வாசிக்க….

 

நவீன ஏவாளும் அப்பிள் கனி குறித்த பாடலும்! ஆகஸ்ட் 21, 2008

கோப்பு வகை: இறவாத காலம் — mabrook @ 2:10 மு.பகல்

color-dot.gifமப்றூக்

தென் தோட்டத்தில் ஏவாள் உட்கார்ந்திருந்தாள். பாம்பாய் நுழைந்தது காதல். அதற்கு முன் பாம்பைப் பார்த்திராத ஏவாள் பயம் கொண்டாள். பாம்பு முன்னகைத்தது. பின் ஏதெனின் அப்பிள் கனி குறித்த பாடலொன்றை மீட்டிக்கொண்டே படமெடுத்தாடியது பாம்பு!

ஏவாள் பாம்பில் பாடலில் மயங்கினாள். அப்பிள் கனி சுவைத்தாள். எதேற்சையாய் அங்கு வந்த ஆதாமிற்கு ஒரு துண்டை ஊட்டி விட்டாள். பாம்பு மறைந்தது. ஆதாமும் ஏவாளும்  அப்பிளின் சுவை குறித்த பாம்பின் பாடலை ஏவோவொரு கிறக்கத்தில் பாடிக்கொண்டேயிருந்தனர்.

விலக்கப்பட்ட கனியை சுவைத்த பாவம் இருவரையூம் சுற்றியது. எங்கிருந்தோ வந்த காலத்தின் கரமொன்று ஆதாம் ஏவாளை பிடித்து எடுத்து பிரித்து வீசியது.

இன்னும் வாசிக்க….

 

இறவாத காலம்! ஆகஸ்ட் 10, 2008

கோப்பு வகை: இறவாத காலம் — mabrook @ 3:16 பிற்பகல்

color-dot.gifமப்றூக்

சூரியன் எப்.எம். இல் நான் தொகுத்து வழங்கும் நேற்றைய காற்று நிகழ்சியில் புதிதாக இறவாத காலம் எனும் விடயமொன்றை இணைத்து ஒவ்வொரு செய்வாய்கிழமையூம் காற்றலையில் வழங்கி வருகின்றேன்!

அனேகமான நேயர்களின் கவன ஈர்ப்பினைப் பெற்றுக்கொண்ட இந்த இறவாத காலத்தை காற்று வலைப்பூவில் எழுத்து வடிவில் பதிந்தால் நன்றாக இருக்குமே என்று நமது நேயர்களும் நண்பர்களும் அபிப்பிராயம் கூறினர்!

உங்கள் அபிப்பிராயங்கள் இதோ வினையாகிறது!

 

வெற்றித் தசாப்தத்தில் சூரியன் எப்.எம்! ஆகஸ்ட் 10, 2008

கோப்பு வகை: சூரியன் வானொலி — mabrook @ 2:36 பிற்பகல்

color-dot.gifமப்றூக்

சூரியன் எப்.எம். இன் பத்தாவது ஆண்டு கடந்த. ஜுலை 25 ஆம் திகதி சிறப்பாகக்ண்டாடப்பட்டது!

 

முஸ்லிம் அரசியல் தலைமைகள்: விதிவிலக்குகளும் விலக்கி வைக்கப்பட வேண்டியவைகளும்! ஆகஸ்ட் 7, 2008

கோப்பு வகை: அரசியல் — mabrook @ 6:41 பிற்பகல்

color-dot.gifமப்றூக்
டந்த சில வாரங்களுக்கு முன்னர் ஞாயிறு தினக்குரலில் ‘தண்ணீரைத் தொலைக்கும் நதிகள்’ எனத் தலைப்பிட்டு நமது முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளை, குறிப்பாக அமைச்சர்களையூம் அவர்களின் பொது நடத்தையினையூம் விமர்சனத்துக்கு உட்படித்தியிருந்தோம். பௌத்த பேரினவாதச் சிந்தனையின் திட்டமிட்ட செயற்பாடுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டு வரும் காணி அபகரிப்பு, பசு கொல்லலுக்கான தடை மற்றும் பாங்கு சொல்வதற்கான ஒலித்தணிக்கைக் கட்டுப்பாடு ஆகியவைகளுக்கெதிராக  நம்மவர்களில் எவரும் கவனமெடுத்துச் செயற்படவில்லை என்று மக்களின் ஆதங்கத்தினை எமது குறித்த அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம்! ஆனால், அந்தக் கட்டுரை இடம்பெற்று கிட்டத்தட்ட இரண்டு வாரங்களின் பின்னர் நமது முஸ்லிம் அரசியல் அரங்கில் மகிழ்சிகரமானதும், நம்பிக்கை தரக்கூடியதுமான சில நிகழ்வூகள் நடந்தேறியூள்ளன.

இன்னும் வாசிக்க….

 

கடலின் அக்கர போனோரே! ஏப்ரல் 25, 2008

கோப்பு வகை: பொதுவானவை — mabrook @ 2:14 மு.பகல்

உப்புக் கரிக்கும் மீனவர் வாழ்க்கை! 

color-dot.gifமப்றூக் 
ங்களுரில் ஓர் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றைப் போல் இலங்கையில் எங்கும் இல்லை என்று எங்கள் பெரியப்பா ஒருவர் அடிக்கடி கூறுவார். ஊரின் வயிற்றுப் பகுதியால் வலமிருந்து இடமாகக் கிடையாக ஓடும் இந்த ஆறு, ஊரினது ஆரம்ப எல்லையில் தொடங்கி நிறைவூ எல்லையில் முடிவடைகிறது! இப்படி ஊரின் ஆரம்பம், முடிவை தனது எல்லையாகக் கொண்டோடும் ஆறு, இலங்கையில் எங்கும் இல்லை என்பதே பெரியப்பாவின் வாதமாகும். 

இன்னும் வாசிக்க….

 

கிழக்குத் தேர்தல்: கதைகளும் கட்டுக்கதைகளும்! ஏப்ரல் 4, 2008

கோப்பு வகை: அரசியல் — mabrook @ 12:42 மு.பகல்

color-dot.gifமப்றூக் 

டக்கு கிழக்கு மகாஜனத்தார்களில் மிக அதிகமானோர் பாராளுமன்ற விடயதானங்கள் பற்றி அறிந்திருப்பதை விடவும் மிகக்குறைவாகவே மாகாணசபை முறைமை பற்றி அறிந்து வைத்துள்ளனர். காரணம், வடக்கு, கிழக்குப் பிராந்தியம் ஒரேயொரு தடவை மாத்திரமே மாகாணசபைத் தேர்தல் அனுபவத்தைக் கண்டு வைத்துள்ளது. அதுவும் அந்தத் தேர்தல் நடந்தே கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றன. இவைகள் தவிர, இடம்பெறப்போகும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல்கள் பற்றி நம்மவர்கள் கூறும் ‘உடான்ஸ்’களும், கட்டுக் கதைகளுமே அவர்களுக்கு இதுபற்றி ‘பெரிதாக’ எவையூம் தெரியாது என்பதைப் ‘புட்டு’ வைக்கின்றன!

சாதாரண பொதுமக்களுக்கு மட்டும் என்றில்லை, தேர்தலில் போட்டியிடலாமென கருதப்படும் பலருக்கும் கூட, மாகாணசபை முறைமை பற்றிய புரிதல்களோ, தௌவுகளோ மிகக் குறைவாகவே இருக்கின்றன என்பதே நாக்கூசும் உண்மையாகும்! 

இன்னும் வாசிக்க….